என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 13 அக்டோபர், 2010

நீயா?...

கதவை தாளிட்டும்
ஜன்னல் அடைத்தும்...
குறைந்த வெளிச்சத்தில்
நான் உடை மாற்றுகிறேன்...
யாரோ
என்னை பார்ப்பது போல்
வெட்கம் கொள்கிறேன்...
நீயா?...

கூந்தல்...

இன்று
என் கூந்தல்
பிண்ணிக்கொள்ள
போராட்டம்...
அத்தனை சிக்கல்..
ஏன் என்று கேட்டேன்?
கூந்தல் சொல்கிறது...
இனி
உன் விரல்கள் தவிர
வேறு நுழைய
கூடாதாம்...
எனக்குள்
இன்று சிக்கல்...
என் பேச்சை கேட்காத
என் உடலை
நானும் ரசிக்கிறேனடா ஏன்??!!....

ம்ம்...

அவசரம்
அவசரமாய்
நான் கிளம்புகிறேன்...
குளித்தும்
குளிக்காமலும்...
சாப்பிட்டும்
சாப்பிடாமலும்...
ஏன்?...
இந்த வாழ்கை கூட
பிடிக்காமல் பிடித்தும்...
ஆனால்
உன்னை
பார்த்த நொடி முதலாய்
உன்னோடு வாழாமலே
வாழ்கிறேன்
சுகமாய்
ஏனடா?...

ஏன்?..

இந்த பயண நெரிசல்
என்னை தினம் பாடாய் படுத்துகிறது...
இருந்தும்
ஏதோ வேறு
வழி இன்றி
சமாளித்து கொண்டு
கடந்து கொள்கிறேன்...

சாலை
தண்டவாளம்...
கடந்து செல்லும்
வாகனம் தண்டி
என் மனம்
ஓடி கொண்டே இருக்கும்..
தினம் தினம்...
என் அலுவலக நாற்காலியில்
அமரும் வரை...
இன்று...
புதிய விடியல்...
புதிய ஊரில்
பயணிப்பது போல்
நான் உணர்கிறேன்...
எல்லாம் புதிய உலகமாய்...
ஏன்?...
நான் கூட புதியவளாய்...
ஏனடா?...

ரசித்து...

நானும்
எத்தனையோ நாட்கள்
இதே கண்ணாடியில்
முகம் பார்க்கிறேன்...
எனக்கே
திருப்தி தரும்
அழகில் நான் இல்லை...
என் கண்களும்...
என் கன்னங்களும் பற்றி
நீ சொல்லிய பின்னே...
நான் வியந்து போனேன்...
என் அழகாய்
நானே
நிஜமாய் ரசித்து...

நான்...

நான்
நீயாய் மாறி
என்னையே காதல் கொள்கிறேன்...
நான் கூட
வெட்கப்படுகிறேன்
என்னிடம்?...
ஆம்ம்...
என்னையே
என்னிடம் கொண்டு சேர்த்தவனே...
நீ யாரடா?...

எப்போது?...

இன்றைய பயணம்
இயல்பாய் இல்லை...
அங்கும் இங்கும்
வேடிக்கை பார்த்து கொண்டே
செல்லும் நான்...
உன் குறுஞ்செய்திக்காய்
என் கைபேசியை
பார்த்தபடியே நகர்கிறேன்..
ஏய்...
காதல் தந்தவனே...
என்னோடு
உன் பயணம்
எப்போது?...

நான் என்ன செய்ய?...

நான்
பார்க்கின்றவற்றை
எல்லாம்
கவிதை ஆக்குவதாய் சொல்கிறாய்...
என் மூலம்
இந்த உலகை கண்டு
வர்ணிப்பவனே!...
என்னுள் நீ
எப்போதோ வந்து விட்டாய்?...
என் முன்
எப்போது நீ வர போகிறாய்?..
நேரில்
என்னை வர்ணித்து
எப்படி வாரி கொள்ள போகிறாய்?...
வெட்கம்
ஏனடா
உன்னிடம் தொலைந்து போனது?...
உன் தழுவலில்
மீண்டும்
வெட்கம் வந்து
என்னிடம் பற்றி கொள்ள
நான்
என்ன செய்ய வேண்டும்
உன்னை?....

கடற்கரை காற்றே...

உன்னிடம்
ஏதோ காற்று வந்து
உரசுவதாய் சொல்கிறாய்...

நான் தான்
கடற்கரை காற்றிடம்
சொன்னேன்...
உனக்கும்
அந்த சுகம்
கொடுக்க சொல்லி...

சுகமாய்
இருக்குதடா
நாம் சுவாசிப்பது கூட...

உன் மேல்...

உன் மேல்
ஒரு ஈர்ப்பு...
இது காதலா?
நான் எப்போது
உன் மேல் காதல் கொண்டேன்?!...
யோசித்து
யோசித்து பார்க்கிறேன்...
கண்டிப்பாய்
இது காதல் இல்லை...
சீ....
போடா...
வெட்கமாய் இருக்கிறது...
நான் உன்னிடம்
பேசிய உடன்
உன் பதிலுக்காய்
காத்திருந்த நொடிகளில்
உன் காதல் உயிர் என்னுள்...
சீ..போடா..
இது காதல் இல்லை...
அதற்கும் மேலே..
ஏனடா?
இப்படி நான்..
இந்த சில நொடிகளில்
என்னுள் மாற்றம்?.