என்னைப் பற்றி

எனது புகைப்படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நாம் யார் ?...

தனிமையில்
நான் வாடிய போதெல்லாம்
எனக்குள்ளே
அழுகிறேன் ...
எனக்குள்ளே
எழுகிறேன்...
மீண்டும் மீண்டும்
நான் வீழ்வதையே
சுகம் என்கிறது
சமூகம்....
நான்
எழுவதையே
நிஜம் என்கிறேன்...

அக்கம் பக்கம்
இருக்கும்
மனிதர்களை பற்றி
சிந்திப்பதை முதலில்  நிறுத்துங்கள்.....
நாம் யார் ?...
என்பதும்  புரியும்....
நான் யார் ?...
என்பதும் புரியும்
நமக்கே... 











புதன், 19 ஜனவரி, 2011

கொஞ்ச நாளாய்...

நான் 
உன்னை பார்த்த
சில நிமிடங்களில்
என்னுள் வரைந்து கொண்டேன்
உன்னை 
என் மோனலிசாவாக....

இன்று 
நீ 
என்னை பார்த்ததும் 
ஒழிந்து கொண்டாய்...

ஆம்.....ம்.... ம்...
கொஞ்ச நாளாய் 
நீ 
ஒதுங்கி போவதையே 
விரும்புகிறாய்...
இப்போது 
நானும் கூட
ஏன்?.....

உ யிரூட்டமான  
நீ 
வரைபடமாய் மட்டும் 
என்னுள் 
ஏன் 
வாழவேண்டும்?....
சென்று வா .....








 


 

திங்கள், 20 டிசம்பர், 2010

ஆண்களுக்கே வெட்கம் அதிகம்.....

என் அருமை காதலியே!...

வெட்கத்திற்குள்
ஒளிந்திருப்பது
இத்தனை
உணர்ச்சிகளா?!!!!....

இத்தனை
காதலா?!!!....

எத்தனை சுகங்கள்
என்னுள்
இந்த வெட்கத்தால்!!!....

உன்னால்....
வெட்கத்தை
வெளிகாட்டாமல்
என்னுள்
நான்
பதுங்கிய போதே
உணர்கிறேன்...
பெண்களை விட
ஆண்களுக்கே
வெட்கம் அதிகம் என்பதை....

வெட்கம் ஒன்றும்
பெண்களுக்கு மட்டும்
சொந்தமானதல்ல...




சனி, 11 டிசம்பர், 2010

நன்றி....

இத்தனை
அழகாய் இருந்தும்
எத்தனை தன்னடக்கம்
உன்னிடம்....

உன்னிடம்
நான் என்னை
காண்பதை விட
நல்ல பண்பை காண்கிறேன்....

உன்னிடம்
நிறையவே
கற்றுக்  கொள்கிறேன்....
என்னை நலமாய்
மாற்றிக் கொள்ள...

நன்றி
உன்
நட்பிற்கு...

வெள்ளி, 26 நவம்பர், 2010

உன்னை பற்றி...

கோடி அழகு
கொண்டவளே!....
கொள்ளை அழகால்
என்னை
கொண்டு போனவளே!....

உனக்கு யாரடி சொன்னது?...
காதல்
சொன்னதும்
நான்
உனக்கு
உயிர் தருவான் என்று?!...

நான்
நானாய் வாழ
ஒரு நொடி தா...
உன்னை
நான்
காதல் செய்ய....

நான்
காதல் செய்யும்
நீ
யாரடி?!....

மன்னிக்கவும்...

உன்னை
மொத்தமாய் ரசிப்பதை
முழுதாய்
சொல்ல முடியவில்லை
ஓரிரு கவிதைகளில்...
அதற்காய்
நீ
என்னை மன்னிக்கவும்...

ஆனால்
தண்டனை
தருவதாய் இருந்தால்
உன் இதழ்களால்
மட்டும் நிறைவேற்று

விசத்தை
உமிழ்ந்தாலும்
உண்மையாய்
பருகுவேனடி
முழுதும்...

எல்லாம்
உன் இதழ் மேல்
உள்ள காதலால்...

கழுத்து...

உன்
பின்னால்
நான் நெருங்கி
என் இதழ்களால்
உன் தோள்பட்டைகளில்
பதிக்கும் போது....

என் முத்தங்களால்
வெடிக்கும்
அதிர்வுகளை
உன்னுள் செலுத்தும்
கழுத்தும்
என் நாக்கின் நீளம்
எனக்கே தெரியபடுத்துமடி....

உன்னால்
என்னையே
சில நேரம்
ரசித்து விடுகிறேனடி...

கன்னங்கள்...

கன்னங்கள்
உன்னுள்
உறங்கி கிடக்கிறது
உறவாட
நான் வராததால்....

என் பற்களுக்கும்
என் இதழ்களுக்கும்
சண்டை
ஏற்படுமானால்
உன் கன்னங்களுக்காய்
தான் இருக்கும்...

உன் மிருதுவான
கன்னங்களை
ஒன்று சேர்க்கும்
உன் தாடை
அழகால் தானடி
என் நாவில் கூட
நீர் சுரக்கிறது...

நான் முத்தம்
தந்த பின்
பார்...

உன் கன்னங்கள் சிவந்து
பொங்கி எழும்
சுனாமி போல்
நம்மை
தொலைத்து
நமக்குள் நாம்
சுகமாய்
இணைவோம்
கன்னங்களால்
கன்னம் உரசி......

இதழ்...

உன்னிடம்
எனக்கு
அதிகமாய் பிடித்தது
உன் இதழ்கள்...

தமிழின்
எத்தனை வார்த்தைகள்
போட்டு
வர்ணித்தாலும்
அதையும் தாண்டி
அழகாய்
உன் இதழ்கள்...

உன்
மொத்த இதழும்
எனக்கே சொந்தம்...
இல்லை...
இல்லை...
என் இதழ்களுக்கே
சொந்தமடி...

உன் இதழ் நீர் பருக
முடியாமல்
உன் நிழல் படத்தில்
உயிர் பெருகிறேன்
தினமும்
இதழ் உரசி...

உன் இதழின்
இரு ஓரங்களில்
விரியும் இடைவெளி
என் இதழ்களை
உள் இழுக்கும்
காற்றும் நுழையாதபடி
கவ்வி கொள்ளும்...

இது
சுகம் மட்டும் இல்லை...
என்னை சுவிகாரம்
செய்யும்
உன் இதழ்கள்...

வர்ணித்து கொண்டே
இருப்பேன்
உன் இதழ்களின் அழகை
ஒரு நூற்றாண்டு அல்ல...
நான்
ஜெனிக்கும் போதெல்லாம்...

மூக்கு...

எத்தனையோ பேர்கள்...
முகத்தில்
தன் மூக்கு
பொருத்தமாய் இல்லை என்று
புலம்புவதை
கேட்டிருக்கிறேன்...
உனக்கு
அத்தனை
பொருத்தமாய்
அளவானதாய்...

நீ வரம் பெற்றவள்...
எனக்கு
வரம் தருபவளும் கூட...
என் மீது உரசும் உன்
மூக்கின் நுனி கூட
என்னை
சுண்டி இழுக்குமடி
அந்த நேரங்களில்...

உன் கண்கள்...

விழிகள்
பேசும்
என்பார்கள்..
உன் விழிகள்
என்னை விழுங்கி விட்டதடி...
நானே
உன்னுள் சென்று
என்னை தேடி
கொண்டிருக்கிறேன்...

உன் கண்கள் கூட
கன்னங்களாய் மாறி
என் இதழ்களில்
உரசுகிறது...

உன்னோடு
சுகபடுவதை விட
உன்னில் சுகம் தந்த
உன் கண்கள்
என் உயிரடி...

காது மடல்...

என்
மூச்சு  காற்று

உன் காது மடலில்
வீ சும் போதும்...
என் நாவால்
வருடும் போதும்
சிலிர்த்தெழுந்து
என் மீது
உரசும்
தானாக
காதணிகளை உதிர்த்து...

என்னிடம்
அதிக முத்தங்களை
உன்
காதுகளும்
வாங்கிக் கொள்கிறது
அத்தனை அழகாய்
சுகமாய்...

உன் புருவங்கள்...

நீ
அழகு நிலையம்
சென்று
உன் புருவங்களை
சரி செய்வது
என்னிடம்
வரும் வரை மட்டும்
வைத்து கொள்...

ஏனென்றால்...
என் பற்கள்
அந்த பணிக்கு
முன்பதிவு செய்திருக்கிறது....
உனக்கு வலிக்காமல் எப்படி
சரி செய்வதென்று
பயிற்சி நடக்கிறது
உன் நிழல் படத்தில்
தினமும்...

நேர்த்தியான
உன் புருவங்கள்
உன் நெற்றிக்கு
அழகென்பதை
உன்னாலும்
மறுக்க முடியாதடி...

பரந்த நெற்றி...

உன் நெற்றி
ஏன்
மேல் ஏறி இருக்கிறது
தெரியுமா?....
என் இதழுக்காக....
ஆம்...
சுதந்திரமாய்
தடம் பதிக்க...

நீ
கண்மூடி
பெற போகும்
அந்த முத்ததிற்காக
காத்திருக்கும்
என் இதழ்களுக்கும்
உன் நெற்றி
ஒத்தடம் கொடுக்கும்
வலிக்காமல்...

கூந்தல்...

கூந்தல்
என்றவுடன்
நெடியதாய் இருப்பதே
அழகு என்று
கவிஞர்கள்
சொல்லி வைத்திருக்கிறார்கள்...
பெண்களே கூட
அதுவே அழகு என்று
நினைத்து கொள்கிறார்கள்...
சில ஆண்களும் கூட...

ஆனால்
உன் கூந்தல்
குறைவாய்
சுருளாய்
அத்தனை அழகாய்...

உன்னை செதுக்கிய
பிரமனுக்கு நன்றி....
உன் கூந்தல்
என் மார்பில்
தவழ்வது சுகமடி...

வியாழன், 25 நவம்பர், 2010

வியர்த்து...

உன்னிடம்
வளர்த்த காதலை சொல்லாமல்
நான் தவித்தேன்...

ஒருவழியாக காதலை
சொல்லவும் வந்தேன்...

நன்றாக ஞாபகம் இருக்கிறது ...
ஒரு முட்டு சந்து...
உன்னிடம்
தைரியமாய்
காதல் சொன்னேன்...
நீ
தாமதிக்காமல்
மறுத்தாய்...

எனக்கு
நீ சொன்ன
எதுவும் கேட்கவில்லை...
இதுவரை
உன்னிடம் பேசாத
எனக்கு
நீ பேசிய
ஒரு வார்த்தை போதும்
என்றே மகிழ்ந்தேன்...

நீ சென்றவுடன்
நான் துல்லிய
அந்த நொடிகள்....
அடுத்த விநாடி
உன் அப்பா வந்ததும்
கொட்டிய
வியர்வை துளிகள்
இன்னும் அடிகடி வேர்க்கிறது...

இப்போது எங்கிருக்கிறாய்?....
சுகமா?
இன்னும்
உன்னை மறக்காமல்
தேடுகிறேன்
அடிக்கடி
வியர்த்து எழுந்து....

ஏனடி மறந்தாய்?...

நீ
என்னை
தொட்டு எழுப்பவேண்டும் என்றே
நான்
பொய்யான தூக்கம் கொள்வேன்....
ஆனாலும்
நீ
என் காது கிழிய
சத்தமாய் அழைத்து
எழ வைத்துவிடுவாய்....

அப்போதெல்லாம்
உன்மனம் புரியாத
என் மனம்...

இன்றும்
என் நண்பர்களிடம்
என்னை நீ
நேசிப்பதாய்
பொய் சொல்லும் போது...
மாவுனமாய்
எங்கோ இருந்து
என்னை
நீ திட்டுவது கூடா
என்னை
எழுந்து
அழவைக்கிறது
நடுநிசியில்
தூக்கத்திற்காய்!....

ஏனடி
என்னை
மறந்ததாய் சொன்னாய்?...

எனக்கே என்னை தெரியவில்லையடி?....

நீ
முன்பெல்லாம்
என்
வேலை நேரங்களில் கூட
அலைபேசி சூடேறும் வரை பேசி
என்னையும் சூடேற்றுவாய்...

இன்று
உன்னை
எத்தனை முறை
அழைத்தாலும்
அத்தனையும்
தவறிய அழைப்புகளாய்
உன்னுள் தேங்கி கிடக்கிறது
பெற்ற அழைப்புகள்
அத்தனையும் மறந்து ...

என்னை
நீ
தவிக்கவிடவில்லை...
தவிர்க்கவே விரும்புகிறாய்...
இதை
நான்
உணராமல் இல்லை...

நான் பொறுமையாய்
நீ என்னை
நிராகரித்த பின்னும்
தொடர முயற்சிக்கிறேன்...
நீ
பொறுமை இழந்து
உன் தோழி மூலம்
"அவள் வெளியே சென்றிருக்கிறாள்
அப்புறம் கூப்பிடுங்கள்"என்று
சொல்ல வைக்கிறாய்
கடந்த சில மாதங்களாக
கடந்து போனவை மறந்து.....

உன்னிடம்
ஒன்று மட்டும்
கேட்க வேண்டும்?....
.......................
...............
..........
என்ன
கேட்கலாம்?!....
..................
........
எனக்கு
தெரியவில்லையடி?!...
............
........

காதலின் கடைசியாய்...

முதல் முதலாய்
காதல் செய்ய ஆசை
உன்னோடு....

ஆனால்
எல்லா காதலர்களும்
சொல்லும்
"பிறர் போல்
காதலிக்க ஆசை இல்லை"
"புதிதாய்
வித்தியாசமாய்"
காதல்
செய்வதாய் சொல்லி
எல்லோரும் போல்
அதே காதல்
அதே காமம் கொள்ள
ஆசை இல்லை...

உயிருக்கு உயிராய்
காதல் என்று
பொய் கூடா சொல்ல வேண்டாம்...
ஆனாலும் பெண்ணே!...
செவி வழி
காதல் கொள்ளும்
உன்னை
எத்தனை ஜென்மம் ஆனாலும்
சந்திக்காமல்
காதலித்து
தோற்று போகவே ஆசை...

என் வலி அறியாமல்
நீ வாழ
நான் தொலைந்து போக வேண்டும்
ஒவ்வொரு ஜென்மமும் ...

ஆம்...
இது தான்
என் காதலின்
முதலும் கடைசியாய்...

இப்படி எல்லாம்...

நீ அனுப்பும்
குருஞ்செய்திக்காய்
நான்
விடிய விடிய விழித்து
கைபேசியை
கைகளில் ஏந்தியபடி
உற்று பார்க்கிறேன்...

இருட்டறையில்
அலைபேசியின்
ஒளிகற்றையால்
உண்டாகும்
கண்களின் வலி
உனக்கு தெரிந்திருக்க
நியாயம் இல்லை...
ஆனாலும்
நீ அனுப்பும்
வெற்றுசெய்தியில் கூட
உன் மனம்
வெறுமையாய்
போனதால்
கண்ணீர்
வழிதெரியாமல்
வழிந்தோடுகிறது
என் உடல் எங்கும்...

ஏனடி!...
உன்னால்
இப்படி எல்லாம்
எப்படி
எனக்கு
ஏமாற்றம் தர முடிகிறது?...

காதல்...

எனக்கும்
முட்டாள் ஆக ஆசை
உன்ன பார்த்த பின்பு...
காதல்
என்னையும் முட்டாள்
ஆக்கியதில் சந்தோசம் ...
நீயும்
என்னிடம்
தோற்று போனதால்...

சுகமாய்...

காதல் சுகமானது
உன் பெயர் சொல்லி
அழைக்கும் போது....
கண்கள் மூடி
தவிக்கும் போது தான்
தெரிகிறது
காதல் தவறில்லை என்று....

வேர்கள் இல்லாத
தாவரங்களா?...
காம வேர்கள் இல்லாத
நட்பும் இல்லை
காதலும் இல்லை...
வேர்கள் வெளியில்
தெரிந்தால்
இறந்து போகும்
என்றே
புதைந்து கிடக்கின்றன
நம்முள்.....

வேர்களை
ஒளித்து
மறைத்து
காதல் செய்கிறேன்
சுகமாய்
என்னுள்...

செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆஹா..

பிரமன் என்று
ஒருவன் இருந்தால்
அவனால்
வேறு
ஒரு அழகான பெண்ணை
இனி
இந்த உலகில்
படைத்து விட முடியாது...
ஏனென்றால்...
உன்னை படைக்க
தன்
முழு சக்தியும்
கொடுத்து விட்டானே!.....

திங்கள், 22 நவம்பர், 2010

தன்னம்பிக்கை ...

கைகள் இருந்தும்...
கால்கள் இருந்தும்...
பேச வாய் இருந்தும்....
தன் வேலையை கூட
மற்றவர்களிடம்
ஒப்படைக்கும்
சோம்பேறிகள்
பெருகிவரும் வாழ்கையில் ...
விபசாரத்திற்கு கூட
தயாராய் இருப்பவர்களுக்கு
இவர்கள் வலியும் புரியாது...
வாழ்க்கையும் தெரியாது...
ஆனாலும்
நாம்...
உண்மையை
கண்டு கொள்ளாதது தான்
நமக்கு பெருமை தானே?...

ஒரு துணை மட்டும்...

ஒருவனுக்கு ஒருத்தி...
மனிதனுக்கு மட்டுமா?...

செவ்வாய், 16 நவம்பர், 2010

நன்றி...

உன்
குறுஞ்செய்தியில்
நீ அனுப்பும்
ஈரமில்லா முத்தம்
பொய் தான்....
ஆனாலும்
சுகமான
இரவு தருகிறது...
நன்றி
உன் இதழ்களுக்கு...

புதன், 27 அக்டோபர், 2010

ஆண் ,பெண் நட்பு....

ஆண் ,பெண்
நேசம் புனிதமானது...

பெண்கள்...
யார்
நம் மேல்
உண்மையான அன்பு
செலுத்துகிறார்கள் என்று
புரிந்து கொள்வதில் தான்
தவறு செய்கிறார்கள்...

ஒரு ஆண்
தன்னை நெருங்கி வந்தாலே
பெண்கள்
சந்தேகக் கண்ணோடு
பார்க்கிறார்கள்...
ஒதுங்கி கொள்கிறார்கள்...

ஆண்கள்
பெண்களிடம் பேச
விரும்புவது
மோகத்தால் மட்டும் அல்ல...
அது ரகசிய உறவுக்கான
அழைப்பும் அல்ல...
உண்மையில்
ஆண்களிடம்
பெண்மை கொட்டி கிடக்கிறது...
அன்பு,பாசம் நேசம் வேண்டி....

பெரும்பாலான ஆண்கள்
பெண்களிடம்
நல்ல நட்பு
பாராட்டவே விரும்புகிறார்கள்...

உண்மையில்
பிரச்னைக்குரிய
பெண்களின் பிடியில் இருந்து
ஆண்கள்
விலகவே
விரும்புகிறார்கள்...