என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 7 பிப்ரவரி, 2018

காதலை காப்பாற்றுங்கள்

காதல் வயப்படுதல்
இன்று அதிகமாய்
ஏற்பட்டு மறைகிறது...
காரணம்...
காதல்
ஒவ்வொருவருக்குள்ளும்  
சென்று 
தன்னை  நிலை நிறுத்த
முயற்சித்து பார்க்கிறது......

சில நிமிடங்களில்
விரட்ட படுகிறது ...
சில நாட்களில் விரட்டப்படுகிறது...
சில மாதங்களில் விரட்டப்படுகிறது...
அதற்குள் யாரும்
அதை விரும்புவதில்லை என்று தெரிகிறது....
காதல்...
ஒரு நாள்
இந்த உலகத்தை விட்டு
துரத்தப்படும்....
ஒரு சிலராவது
காதல் நினைவுகளை
சேமித்து வைத்து கொள்ளுங்கள்...
உலகம் அழியும்
காலத்தையாவது
தள்ளி போடுவதற்காக....

கருத்துகள் இல்லை: