என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 7 பிப்ரவரி, 2018

அழகியடி நீ எனக்கு....

உன் பருவ அழகை பற்றி
நீ வர்ணிக்கும் போதெல்லாம்....
நான்
உன்னை
வர்ணித்து கொண்டே
தொடர்கிறேன்....

உச்சி முதல் பாதம் வரை
உன்னை பிடிக்கும்
மொத்தமாய்
அத்தனை
அழகியடி நீ....

உன் கூந்தலை
வர்ணிப்பதை
காட்டிலும்...
உன் கூந்தல்
தொடங்கும்
நெற்றி சுழியின்பிறை...
என் நெஞ்சில்
தினம் தினம்
வளர்கிறது...
என் இதழ் பதித்தே
கவி தொடங்கும்....

உன் கூந்தல்
மேகங்கள் அல்ல...
அதில் வாசனையும் இல்லை...
ஆனால்
என் இதயத்தை
கிழித்து
உன் பெயரை எழுதிய
ஊசி முனை....

என்னுள்
எழும்
வார்த்தைகளுக்கு 
விடை கேட்க வேண்டியதில்லை...
உன் புருவ அகராதி
தரும் 
ஒற்றை சிமிட்டல்
மொத்ததை
தந்து விடும்...

கருத்துகள் இல்லை: