என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

❤💜காதலர் தினம்💚💛

மொத்த உலகை
கட்டி ஆளும்
ஒற்றை கடவுள்
💓காதல்💘

மொத்த சுகத்தையும்
கொட்டி தரும்
ஒற்றை கனவு
💗காதல்💙

ஆணுக்கு ஆண்மையும்
பெண்ணுக்கு பெண்மையும்
மலர செய்வது
💘காதல்💘

சக்கரவர்த்தி என்றும்
சாமனியன் என்றும்
சொல்லி கொண்டாலும்
எல்லாம் சமம் என்ற
சமத்துவத்தை
கற்று தரும் வேதம்
💗காதல்💙

பூமியில் உள்ள
அத்தனை
உயிர்களையும்
கட்டுபடுத்தும்
மூன்றெழுத்தில் ஒரு
மந்திரம்
❤காதல்💗

💛காதல்💛
❤காதல்❤
💜காதல்💜
அத்தனையும்
பொய் என்றே
புலம்புகிறவர்கள்....
காதல் கிடைக்காதவர்களும்
காதலில் ஏமாந்தவர்களுமே...

❤காதல்❤
இன்னொருவர்
தருவதில்
இருப்பதல்ல...
நம்மை நாமே
நேசிப்பது...
நம்மை
நேசிப்பவர்களை
அங்கீகரிப்பது....

உருவமில்லா
ஒன்றிற்கு
உலகமே உருகும்
உணர்ச்சி பெருங்கடல்
❤காதல்💚
இது உண்மையும் அல்ல...
பொய்யும் அல்ல...

காதலை
காதலிக்க தெரிந்தவனுக்கு
காதல்
கொட்டி தரும்...
காதலிக்க தெரியாதவனுக்கு
எதனை தருவது?...

💘காதல்💘
சுகமானது...

நேசிக்கும் போதும்...
நேசிக்கப்படும் போதும்...



கருத்துகள் இல்லை: