என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

யார் சொன்னது?...

யார் சொன்னது?...
நான் காதலிக்க மாட்டேன் என்று...
பாதி பல்லை வைத்து கொண்டு
பேருந்தில் ஏறுவதற்கு
முன்பிருந்து
பற்பசை விளம்பரம் போல்
பல்லை காட்டி கொண்டிருந்தால்
எங்கிருந்து
எனக்கு காதல் வரும்?...

எனக்கு
காதல் வராதென்று
யார் சொன்னது?..
பேருந்தில்
பயணசீட்டு கூட வாங்காமல்
நிறுத்தம்
வருவதற்கு முன்
இறங்கி ஓடும்
அக்கறை இல்லாத
ஆடவனிடம்
எனக்கு
எப்படி காதல் வரும்?...

காதல் கடிதம்
எனக்கு கொடுக்கும் முன்பே
ஏற்கவில்லை என்றால்
அடுத்த வாரம்
அருகில் இருக்கும்
என் தோழிக்கும் சேர்த்து
பார்வை பதித்து
புன்னகையுடன் கடிதம் கொடுத்தால்
எங்கிருந்து
காதல் வரும் எனக்கு?...

கோமாளிதனமாய்
இவர்கள்
காதலித்தால் கூட பரவாயில்லை...
காதலை கபடபடுத்துகிறார்கள்...

நானும்
கட்டாயம்
காதல் செய்ய வேண்டுமானால்
ஒரு வேண்டுகோள்
"என் மேல் கூட ஆசை படாத
ஏக பத்தினி விரதனாய் காட்டுங்கள்"...
"மேகனையாய் கூட
போக தயார்
அவர் உள்ளம் கவர"....


கருத்துகள் இல்லை: