தற்போதைய
தலைமுறை
ஆண்,பெண்களிடம்
புதிது புதிதாய்
எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்ற
எண்ணம்
இருபாலருக்கும் பெருக
ஆரம்பித்து உள்ளது...
வருடகணக்கில்
கார் வைத்திருந்த
காலம் போய்..
வருடத்திற்கு
ஒரு முறை கார்
மாற்றவேண்டும் என்ற
எண்ணம் பெருகி விட்டது...
செல்போனைகூட
மாதாமாதம் மாற்றும்
மனநிலை வந்து விட்டது...
அம்மா,அப்பா,
அண்ணன்,தம்பி,
அக்கா,தங்கை என
முன்பு உறவுகளுக்கு
முக்கியதுவம் இருந்தது...
இதன் அடிப்படையில்
நமது சமூகமும்
மேன்மையாக இருந்தது...
முன்பெல்லாம்
குடும்ப கவுரவம்,
மானம் போய் விடும் என்ற
பயம் கூட
பலரை பாதுகாப்பாய்
வைத்திருந்தது நிஜம்...
இன்று உறவு முறைகள்
பின்னே தள்ள பட்டு
சுயநல சுகங்கள் மட்டுமே
முதன்மைபடுத்தபடுகிறது...
நுகர் பொருட்கள் போல...
குடும்பம் என்றால்
இப்படி தான் இருக்கும் என
பேசி தீர்த்து கொண்டவர்கள் கூட
இன்று கணவன்
மனைவிக்குள் பிரச்சனை என்றால்...
தான் எதிர்பார்க்கும்
சுகம் கிடைக்கவில்லை என்றால்...
தனக்கு அறிமுகமான
எதிர் பாலினதவரிடம்
அதை தேடி கொள்ள
மனரீதியாக தயாராகி விடுகிறோம்...
செக்ஸ் கூட
நுகர் பொருளாய் மாறிவருகிறது...
இப்படியே போனால்
நாளை
அன்பு,நேசம்,காதல் போன்ற
உறவு முறைகள்
நம்மிடம் தொலைந்து போகும்...
நாளைகளில்
மனிதர்கள் இருப்பார்கள்
மனிதம் இருக்காது...
நமக்கென்ன என்று
நாம் போய் கொண்டிருந்தால்
நாளை
நம்மை சார்ந்தவர்கள்
தடம் மாறி
நமக்கு அவமானம் தேடி தரலாம்...
என்னால் மட்டும்
இந்த
உலகை மற்ற முடியுமா?என்ற
கேள்வி கேட்டு விட்டு
எல்லோரும்
அமைதியாக இருக்கலாம்...
நம்மால்
எந்த அளவு முடியுமோ
அதை முயற்சிக்கலாமே?...
குறைந்த பட்சம்..
நாமாவது
தவறு செய்யாமல் இருக்கலாமே?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக