என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

திங்கள், 13 செப்டம்பர், 2010

அரசியல் இவ்வளவு தான்...

இந்த உலகில்
மக்களுக்காக உழைத்து
மக்களுக்காக
உயிர் துறந்த மனிதர்களுக்காக
மக்கள் என்ன செய்திருக்கிறார்கள்?...

தன் குடும்பத்தை துரத்தி
தன் குடும்பம் தொலைத்து
தனக்கு குடும்பமே இல்லாமல்
இறந்தால் தான்
உண்மையான
தூய்மையான
அரசியல்வாதியா?...

அரசியல்வாதி
முற்றும் துறந்த முனிவனா?...
அவனுக்கு
குடும்பம் இருக்க கூடாதா?...
"யாரோ ஒருவன் போராடி
யார் யாரோ உயிர் துறந்து
உங்களுக்கு
உரிமை வாங்கி தர வேண்டும்"?...
நீங்கள்
அதில் சுதந்திரமாய்
குளிர் காய வேண்டும்...
நீங்கள் அவர்களுக்கு
என்ன சன்மானம் தருவீர்கள்?...

அவர்கள் குடும்பத்திற்கு
யார் உணவு தருவது?...
"அச்சச்சோ அப்படியா" என்ற
அனுதாபத்தால் யாரும்
மீண்டும் ஜெனிக்க முடியாது....

நேர் வழியில்
சம்பாதித்து பாருங்கள்...
முன்று வேளை
நன்றாக சாப்பிடுவதற்கே போதாது....
இந்த உலகில்
நேர் வழியில்
சம்பாதித்து
மக்கள் சேவை செய்ய
யாராவது வந்திருக்கிறார்களா?..
 

சுயநலம் இல்லாத
அரசியல்வாதிகளை
பிழைக்க தெரியாதவன் என்று
தூற்றுவதும்
நாம் தான்...
ஒழுக்கமானவர்களுக்கு
இதுவரை ஓட்டு போட்டு இருக்கிறோமா?...


சர்வாதிகாரம்
நம்மை என்ன செய்யும் என்பீர்கள்?...
அடிமை எப்படி இருக்கும் என்பது
நம் பண்டைய  வரலாறு...
சர்வாதிகாரத்தால்
அண்டைநாட்டு மக்கள்
படும் வேதனை
எத்தனை தெரியுமா?... 

அரசியல்வாதிகளுக்கு
பயந்து வாழ
நாம் வாழ்வது
சர்வாதிகார ஆட்சியில் இல்லை...
நாம் இருப்பது
நம்மால் ஓட்டு போட்டு
தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியில்...
 
இங்கே இன்று
ஓட்டுக்கு பணம் வாங்கி
ஓட்டு போடும் பரதேசிகள் தானே நாம்...
ஜனநாயகத்தை குறை சொல்லி
மேதாவிகளாய் பேசும்
நாம் சில நேரம்
ஓட்டு போட கூட
நேரம் ஒதுக்குவதில்லை..
தன்னலமற்ற
சுதந்திர போராட்ட வீரர்களை கூட
கிண்டல் செய்யும்
தரங்கெட்ட குடிமகன்கள் தானே நாம்....

நூற்றாண்டுகளாய்
அடிமை பட்டு வாழ்ந்த
நமக்கு
பேச்சுரிமை கிடைத்தும்
ஓட்டுரிமை உள்ள
சுதந்திரம் கிடைத்தும்
தெரியாமல்
அடிமைகளாய் வாழ்கிறோம்...
அடிமைகளாய்
வாழ்ந்து பழகிய
நமக்கு
சுதந்திரம் பற்றிய
அடிப்படை அறிவே இல்லை?...


அடிமையாய்
வாழ்ந்து கிடந்தவர்களின்
வாரிசுகள் தானே நாம்...
அடிமை உடைக்க
பாடுபட்டவர்களின்  வாரிசுகளை
வரலாற்றில்
எந்த நாடும்  உயிரோடு 
வாழ விடவில்லையே...

உலக வரலாற்றில்
சுதந்திர தாகம் கொண்டவர்களின்  
ரத்தம் சிந்தபட்டிருக்கிறது..
துரோகிகள் ரத்தம் மட்டுமே
விதைக்க பட்டிருக்கிறது...
மறந்து விட  வேண்டாம்
நாம் துரோகிகளின் பிள்ளைகள்...
சுயநல வாதிகளின் வாரிசுகள்
நாம் இப்படி தான் இருப்போம்...
நம் நாட்டை
அடுத்தவன்
ஆள்வதை விரும்பும்
அடிமைகள் தான் நாம்...

உலகம் முழுதும் வரலாறு
நாம்
மறந்து விடுவோம் என்றே
எழுதப்படுகிறது
உலகில்
மறதி தேசிய வியாதி என்பதால்...


தலை முறைக்கும்
சொத்து சேர்த்து வைக்க துடிக்கும்
இன்றைய என் நாட்டு
அரசியல் கனவான்களே...
ஒன்றை மறந்து விடாதீர்கள்...
உலகை ஆள  நினைத்த
பல மன்னர்களின் சந்ததிகள்
வரலாற்றில் மட்டுமல்ல...
இந்த உலகில் கூடா
இல்லாமல் போய் இருக்கிறார்கள்....

இது சுதந்திரமான பூமி
ஒருவனுக்கு மட்டும்
சொந்தமானதில்லை...
அரசியலும்
மன்னர்களும்
மக்களும் அழிந்து போனாலும்
பூமி நிலைக்குமடா...

ஒரு நாள்
காற்றிலாமல் கூட பூமி
சூரியனை சுற்றி வரத்தான் போகிறது
அற்ப ஆயுள் கொண்ட மனிதனே...
அரசியல்
மரணம் இல்லா வாழ்வையா
கொடுக்க போகிறது?...

ஆம்
அரசியல்
இவ்வளவுதான்...




கருத்துகள் இல்லை: