என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பெண்ணின் மார்பகங்கள்...

இப்போதெல்லாம்...
பருவத்திற்கு வரும்
ஆண்களை  சுற்றி...

பெண்ணின் அங்கங்கள் பற்றி
வர்ணனைகள் கொண்ட
பாடல்கள்..
சுண்டி இழுக்கும்
சுவரொட்டிகள்...
படிக்கும் பத்திரிகைகளில் வரும்
படங்கள்...
சினிமாக்கள்...
மேலும்....

கண்ணில் படும்
பல இடங்களில்
பெண்ணின் அங்கங்களை
கவர்ச்சியாய்  காட்டி
ஆண்களுக்கு
தீராத ஏக்கத்தை ஏற்படுத்தி
தீராத அவஸ்தைகள் கொடுத்து
சித்தரவதை செய்கிறது
சமூகம்...

குறிப்பாக...
பெண்ணின் மார்பகங்கள்...
பெரிய காட்சி பொருளாகவும்
வியாபார பொருளாகவும்
உலகே
உலா வருகின்றன...
இதனால்
ஆண்களிடம்
கள்ள தனம் பிறக்கிறது...
பெண்ணின் உடல் உறுப்புகளை
மறைந்து
ஒழிந்து
பார்க்க ஆசைபடுகிறான்...
அவதிபடுகிறான்...
ஏமாற்றி
அடைய நினைக்கிறான்...
யோசிக்கிறான்...
பெண்ணின் உடலை
காண்பதற்காகவே
காதல் சுழலில் சிக்கி
வாழ்க்கை கூட இழக்கிறான்...

மிக பெரிய கவர்ச்சி 
பொருளாய் இருக்கும்
பெண்ணின் மார்பகங்களின்
மாயையை உடைக்க வேண்டும்....

மனித உடலில்
இரண்டு வகையான உடலில்
ஒரு உடல்
இன்னொரு உடல் பற்றி
தெரிந்து கொள்வதில் தவறில்லையே....

மார்பகங்கள்
ஆண் ,பெண்
இருவருக்கும் ஒன்றே ...
பெண்ணின் மார்பகங்களில்
பால் சுரபி இருப்பதால் தான்
பெரிதாய் உள்ளது என்ற
சாதாரண உண்மையை
பருவம் வரும் ஆண்களின்
மனதில் பதிய வைக்க வேண்டும்...
உடல் கவர்ச்சி நோய் 
மாற வேண்டும்...

பெரிய விஞ்ஞான உலகமாய்
மாறி வரும்
இந்த நூற்றாண்டில் கூட
பெண்ணின் உடலை பார்ப்பதற்காக 
கேவலமான
கீழ்தரமான சமூகத்தை
உருவாக்கி வருகிறோம்...

இந்த கலாசார அவமானம்
ஏன்?
என்று புரியவில்லை...

பெண்ணை தெய்வமாய்
புனிதமாய் பார்க்க வேண்டாம்...
முதலில்
பெண்ணை
சக மனுசியாய்
பார்க்கச் சொல்லுங்கள்....










கருத்துகள் இல்லை: