என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 23 செப்டம்பர், 2010

கேவலமாய் தான் யோசிப்போம்....

பெண்கள்
அழகு நிலையம்
தொடங்கிய காலத்தில்
அதனை நடத்துபவர்களை
கேவலமாய் பேசியவர்கள் உண்டு...

இன்று
அந்த தொழில்
கவுரவமான தொழிலாய் மாறி விட்டது...
போட்டி போட்டு
ஆரம்பித்து விட்டார்கள்...

எல்லாம் பணம்...

ஒரு காலத்தில்
செருப்பு தொழிலை செய்பவர்களை ...........என்றும்....
தப்பு அடிபவர்களை ..........என்றும்.....
சலவை செய்பவர்களை .............என்றும்....
முடி திருத்துபவர்களை ...........என்றும்....
தொழில் அடிப்படையில்
அவர்களை
கீழ் ஜாதி இனத்தவறாய் பிரித்து
மனிதர்களுக்குள்ளே
மனிதர்களை
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றோம்...

இன்று
இதே தொழில்களை
உயர் ஜாதி என்று சொன்னவர்கள் கூட
செய்கிறார்கள்...

எங்கே  போனது
இவர்களின்
மானம் தாங்கிய பேச்சுகள்?....

எல்லோருக்கும்
உணவு ,உடை
வாங்க தேவை பணம்...
இதில் மனமோ..
மானமோ..
யாரும்
பார்க்க தயாரில்லை....

ஜாதி தொழில் அடிப்படையில்
பிரிக்கப்பட்டது என்பது
எல்லோருக்கும் தெரியும்...
அப்படி பிரித்தது போல்
இன்று
இப்போது அதை செய்யலாமே?...

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்...
மனிதன்
ஏதாவது காரணம் சொல்லி
அடுத்தவர்களை
குறை பாடுவதில் 
மட்டபடுத்துவதில்
கெட்டிக்காரன்!!!?...


"ஜாதிகள் இல்லையடி பாப்பா"என்று
சொல்லி தரும் ஆசிரியரை கூட
ஜாதி என்ன? என்று
கேட்பவர்கள் தானே நாம்...

ஆனால்
பணம் என்றால்
எந்த தொழில்
செய்யவும் தயங்க மாட்டோம்...
கொஞ்சம் பணம் சேர்ந்தால்...
யாரையும் மதிக்கமாட்டோம்...
மற்றவர்களை அடிமை படுத்த
எதையும் செய்பவர்கள் தானே
நாம்...
விபசாரம் கூட...

இத்தனை
வியாக்கியானமாய் பேசும்
நம்மை
யாராவது கேட்டால்
நம்மை
உயர்ந்த ஜாதியாய்
காட்டி கொள்வதில் தானே
பெருமை கொள்கிறோம்...

உலகில்
எல்லோருக்கும் தெரியும்
இனம், ஜாதிகள் இல்லை...
எல்லோரும் மனிதர்கள் தான் என்று..
நாம் கொஞ்சம்
வறட்டு பிடிவாதம்
பிடித்தவர்கள் தானே...

விலங்குகள் செய்யாத
ஒன்றை செய்தால் தானே
நாம் மனிதர்கள்...
விலங்குகள்
என்ன ஜாதி,இன சண்டையா போடுகிறது?...

அவையெல்லாம்
ஐந்தறிவு  படைத்தவைகள்...
நாம்
ஆறாம் அறிவு படைத்தவர்கள்
இல்லையா?...

கேவலமாய் தான்
யோசிப்போம்...


கருத்துகள் இல்லை: