நம்மால் மட்டுமே
எல்லாம் நடக்கிறது ...
நாம் இல்லையென்றால்
எதுவும் நடக்காதது போல்
நினைக்கிறோம்...
நம் குடும்பத்திலும் சரி...
நாம் வேலை பார்க்கும் இடத்திலும் சரி...
கண்டிப்பாய்
நாம் இல்லாமலும் நடக்கும்
மறந்துவிடாதீர்கள்......
நம் தாத்தாக்கள் இல்லாமல்
நம் அப்பாக்கள் இல்லையா.?....
நம் அப்பாக்கள் இல்லையென்றால்
நாம் வாழ மாட்டோமா?...
நாம் இல்லையென்றால்
நம் சந்ததிகள் வாழாதா?..
நாம் இல்லையென்றால்
உலகம் நின்றுவிடுவது போல்
நாம் நம்மையே
உயர்வாய்
நினைத்து கொள்வோம்
சிலநேரம்...
பாசம்,அன்பு என்பதை
ஒத்திவைத்து
யோசித்து பாருங்கள்....
நம் குடும்பத்தில்
முக்கியமான பொருளாதாரம்
தரக்கூடியவர்
இறந்து விட்டால்...
முதலில் அதிர்சி அடைவோம்...
மயங்கி கூட விழுவோம்....
இல்லை...
அப்படி
இறந்திருக்க வாய்ப்பில்லை என்று
ஏற்று கொள்ள மாட்டோம்....
அடுத்து
நடந்துவிட்டதோ என்று
பயம் வரும்...
அடுத்ததாய்
கோபம் வரும்
ஏன்?...
இப்படி
இடையில் விட்டு போனால்
என்ன செய்வதென்று தெரியாததால்...
அடுத்ததாய்
நம் வாழ்கை
என்ன ஆகுமோ? என்ற
கவலை பிறக்கும்...
கொஞ்ச நேரம்...
கொஞ்ச நாட்கள் கழித்து..
இப்போது மனதை
தேற்ற தொடங்குவோம்..
அதிலிருந்து
வெளி வரயோசிப்போம்...
வேறு வேலையில்
ஆர்வத்தை மாற்றுவோம்...
நம்மை
நாமே
சுயமாய் இயக்க கற்று கொள்வோம்...
யாரும் யாருக்காகவும்
இறந்து விட முடியாது...
தற்கொலை
செய்து கொள்ளும்
கோழை அல்ல நாம்...
மற்று வழியில்
பயணம் செய்யலாம்...
மரணம்
தானாய் வரும் வரை...
நாம் மட்டும்
இல்லையென்றால்
நம் குடும்பம்
நம் பரம்பரை
அழிந்து போகும் என்று யோசிக்காமல்
வாழ வழி கற்று கொடுங்கள்...
உங்களை மட்டும் நம்பி
இருப்பவர்களுக்கு
நீங்கள் நன்றாய் இருக்கும் போதே
தன்னம்பிக்கைகளை
விதைத்து செல்லுங்கள்......
சுயமாய்
வாழட்டும்...
நீங்கள் பொருளாதாரம் தருவதால்
சில வருடங்கள் வேண்டுமானால்
உங்களால்
உங்கள்
குடும்பத்தில் உள்ளவர்கள்
சுகமாய் வாழ முடியும்...
தன்னம்பிக்கை
கற்று கொடுத்து பாருங்கள்...
நீங்களும் நெடுநாட்கள் வாழலாம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக