என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

வஞ்சித்தவரால் வாழ முடியாது...

மிருகங்களில்
பெண் விலங்கு தான்
யாருடன்
கலவி கொள்ள வேண்டும்
என்பதை தீர்மானிக்கிறது...

போட்டியிட்டு
சண்டை போட்டு 
ஜெயித்து வரும்
வீரமான விலங்குடன் மட்டுமே
உறவு கொள்கிறது...

"தன் கருவினுள்
தோன்றும் இனம்
வீரியமானதாய்
இருக்கவேண்டும் "என்று 
விலங்கினம் கூட
யோசித்து கூடும் போது
படித்த பெண்ணினம்
எப்படி இருக்க வேண்டும்?...

இன்னும்
இன்றும்
ஏமாந்ததாய் புலம்புவது  
யார் குற்றம்?...

ஆணினம்
விலங்கை போல் இருக்க
அதன் தலையை துண்டித்து
"தான் பெரிய கொம்பன் " என்பதை
நிரூபிப்பது போல்
விலங்கின் கொம்புகளை
கிரீடம்  போல் அணிய தொடங்கினான்...

"தன்னுடைய மரபணு
மற்றவர்களை
விட  உயர்ந்தது" என்பதை
காட்ட
செயற்கை அலங்காரம்
செய்து கொண்டான்...

பலருடன்
கலவி கொண்ட
பெண்ணினத்தை
கட்டுப்பாடுகளால்
வசப்படுத்தினான்..

மீறி சென்ற பெண்களை
ஆன்மிகம் கொண்டு அடக்கினான்....
ஒவ்வொன்றாய்
ஆணடிமை உடைத்து 
படிப்படியாய்
பெண்கள்
வளர்ச்சி அடையும் போதெல்லாம்
ஏதாவது ஒன்றால்
பெண்ணினத்தை கட்டுபடுத்துகிறான்...

சிந்திக்க தொடங்கிய பெண்களை
வஞ்சகமாய் அடைய
உருவாக்கபட்டது தான்
காதல்...

சுயவரம் கொண்டு
ஆணை தேர்ந்தடுத்த
பெண்கள்
வாழ்ந்த பூமியில்
இன்றைய பெண்கள்
தோற்று போவது ஏனோ?..

பெண்கள்
வஞ்சிக்க பட்டு
இன்று பெண்களாலும் 
ஆண்கள்
வஞ்சிக்கபடுகிறார்கள்...

ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும்
இந்த மண்ணில்
யார் யாரை
வஞ்சிதாலும்
யாராலும்
சுகமாய் வாழ்ந்திட முடியாது...









கருத்துகள் இல்லை: