என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 30 செப்டம்பர், 2010

நாம இருக்கமே....

இந்த பேரண்டத்தில்
சுற்றும்
பல கோடி நட்சத்திரங்களில்
ஒரு மூலையில்
நாம் பிறக்கிறோம்
மடிந்து போகிறோம்...

நாம்
பிரித்து போட்டு இருக்கும்
இந்த பூமியில்
பலநாடுகளாய்
நமக்குள்
பிரித்து கொள்கிறோம்...

பூமியில் இருக்கும்
மனித இனத்தில்
நிறத்தில்
இனத்தில்
மொழியில்
இந்தியன்...
அமெரிக்கன்...
மலேசியன்...
ஸ்ரீலங்கன்..
இப்படி சொல்லி கொண்டு
நம் தேசம்...
தேச பற்று...
மண்ணின் மைந்தர்கள் என்று
சொல்லுவதுமாய் இருக்கிறோம்.....

உலகம்...நாம்
அதில் வசிக்கும்
மனித உயிரினம்
என்றால்
நாம் ஒத்து கொள்ளுவதில்லை....
உலகம் பொதுவானது என்று
சொல்பவர்களை...
"இனப்பற்று இல்லாத துரோகியே"
"தேசபற்று இல்லா குடிமகனே" என்று
வெறுப்பாய்
ஒதுக்குகிறோம்...

இப்போது
சொல்லும் எதுவும்
ஏற்று கொள்ள போவதில்லை...

வேற்று கிரகவாசிகளால்
ஒரு நாள்
நாம் தாக்கபடும் போது தான்
நாம் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாய்
சொல்லுவோம்...
"நாம்
பூமியின் சொந்தக்காரர்கள்...
நமக்குள் பேதம் வேண்டாம்"...

"நம்மை அழிக்க நினைக்கும்
வேற்றுகிரகவாசியை
அழிக்கவேண்டும்
ஒன்று சேருங்கள்"...

"நாம் அனைவரும்
பூமியில் வாழும்
மனிதர்கள்...
சகோதரர்கள்"...

"ஒன்றுபடுவோம்...
வெற்றி பெறுவோம்"...
என்றெல்லாம் பேசுவோம்...
ஆனால்
அதுவரை
மண்ணுக்காக போராடுவோம்....
மனிதனை மனிதன்
அடித்து கொள்வோம்...
அடிமை கொள்வோம்...

நாம் இப்படி தானே...
தனக்கென்று
பாதிப்பு  வந்தால் தானே
"ஒற்றுமை ஓங்குக"என்று
குரல் கொடுப்போம்...
குரல் கொடுக்க சொல்லுவோம்....

நம்ம இருக்கோமே....
சொந்த மண்ணில்
மக்களுக்காய்
வாழும் மனிதர்களை
சொந்த தலைவர்களை
காட்டி கொடுத்து
கொன்றவர்கள் தானே
நாம்...

நமக்கெப்படி புரியும்?....
புரியாத விலங்குகளுக்கு தான்
சொல்லி தர வேண்டும்...
புரிந்தும் தெரிந்தும்
தவறு செய்யும்
நமக்கு யார் சொல்வது?...
"நாம்
மானிட அற்பப்பதர்கள் "என்பதை...

கருத்துகள் இல்லை: