படிக்கும் போதும்
வேலைக்கு போகும் போதும்
திருமணத்திற்கு
பெண் பார்க்கும் போதும்...
திருமணத்திற்கு பின்பும்
இப்படி வாழ்க்கை முழுதும்
ஒப்பீடுகள்....
உன்னோடு
படிப்பவன் தானே அவன்..
எப்படி
மதிப்பெண் வாங்குகிறான்?...
அவன் மூத்திரத்தை வாங்கி குடி என்பது ...
"நீ படிக்க வைத்த
அரசு பள்ளியில்
இதற்கு மேல்
எப்படி மதிப்பெண் எடுப்பது"?....
பெற்றோர்களை
இப்படி யார் கேட்பது?...
உன்னோடு படித்தவன் தானே
எப்படி பெரிய வேலைக்கு போனான்?...
எப்படி சம்பாறிக்கிறான்?...என்ற கேள்விகளுடன்
பெற்றோர்கள்...
பெற்றோர்களை
யார் கேட்பது?
அவன் அப்பா எப்படி பாசம் கட்டுகிறார்?...
"அவன் அப்பா
எப்படி சம்பாறித்து
சேர்த்து வைத்திருக்கிறார்கள்"?என்று..
திருமணத்திற்கு...
மாப்பிள்ளைக்கு
அரசு வேலை உண்டா?...
வெளி நாட்டு வேலை உண்டா?...
எத்தனை கேள்வி?...
"நீ போடுற ரெண்டனா
வரதட்சணைக்கு
எத்தனை கேள்வி"?
பெண் வீ ட்டார்களை
இப்படி யார் கேட்பது ?...
திருமணம் பண்ணிய பின்...
அவள் வீட்டில் கார் உண்டு
எவ்வளவு நகைகள்...
அவள் கணவன்
எவ்வளவு செய்கிறான் மனைவிக்கு?...
"நீ என்ன செஞ்ச
கணவனுக்கு"?...
இதை யார் கேட்பது ?..
இப்படி ஏக்கங்களும்
எதிர்பர்ப்புகளுடனும்
நம்மை சுற்றி இருக்கும் போது
நான் எப்படி
நானாய் இருக்க முடியும்...
வாழ்க்கையில் பிறந்தது முதல்
எல்லோரையும்
எல்லா நேரமும் திருப்தி படுத்த முடியாது...
இத்தனை என்னை கேட்கும்
என்னை சுற்றி இருப்பவர்களே...
ஆமாம்...
யார் தான்
என்னை
திருப்திப்படுத்துவது?....
வெறுத்து
வேறு பாதை போகும் போதும்
ஏன் இப்படி
இந்த பையன் முடிவு எடுக்கணும்?..
கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம்...
வாழ்க்கை இப்படி தான் இருக்கும் என்பார்கள் ...
வாழ்க்கை
அதை நாம் தான்
கவனமாக
கையாள வேண்டும் என்ற
அறிவுரைகள் வேறு ...
இப்படி ஒப்பீடுகளாய் மனிதர்கள் ?...
ஏன்?
நாம்
நம் வழியில்
போகாதவரை
ஒப்பீடுகளும்
நம்மை தொடரத்தான் செய்யும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக