நான் ஒரு
வேடதாரி
ஆம்
என் பெயர் தமிழன்....
உலகில் உள்ள
அனைத்து உயிர்களை
நேசிக்க கற்றுத் தரும்
காட்டு மிராண்டி...
மனிதனை
மனிதனாய்
பார்க்கும்
மனிதம் கொண்ட
மதவாதி...
நான் வணங்கும்
தெய்வம் மட்டுமே
உண்மை...
நீயும் அதையே
வணங்கவேண்டும் என
கொலைகள்
செய்வோருக்கு....
"ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்று
சொல்லியதால்
நான்
தீவிரவாதி....
இனபற்று
பேசி "தீண்டாமை"
பேதம் கொள்ளும்
தங்களிடம்....
"மனித இனம்
வேறு
உயிரினத்துடன் கூடி
புதிய இனத்தை
இன்று வரை
இனப்பெருக்கம்
செய்யவில்லை"
என்ற உண்மை
சொன்னால்
நான்
இனவாதி...
சாதியம்
பேசுபவர்களுக்கு
"ஜாதி இரண்டொழிய
வேரில்லை"
என்பதை சொன்னதால்
நான்
நாத்திகவாதி...
பூமியை கீறி
நாடுகளாய் பிரித்து
நாட்டுப்பற்று என
அடித்து கொள்வீர்கள்...
"யாதும் ஊரே
யாவரும் கேளீர்"
என்று சொன்னால்
நான்
தேச துரோகி....
பரம்பரை
பெருமை பேசும்
நண்பர்களே...
நான் உங்கள்
தகப்பன்
ஆதி மனிதன்
"தமிழன்" சொல்கிறேன்...
"கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே
வாளொடு
முன் தோன்றி
மூத்த குடி"
எங்களின்
வாரிசுகள் தான்
உலக மக்கள்
நீங்கள் எல்லாம்....
கர்வத்துடன்
கர்ஜிக்கிறேன்...
நான்
மொழிகளின்
தாய் மொழி
"தமிழ் "பேசும்
தமிழன்டா...