என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 29 செப்டம்பர், 2010

உன்னால்....

அழகான அவஸ்தைகள்...
எனக்கே
என்னை
மீட்டு கொடுத்தாய்....
நானும் கூட
தடுமாறுகிறேன்...
கொஞ்சம் வெட்கமாய்
வெட்கத்தில்...
அத்தனையும்
அழகாய் ஏன்?...

வெட்ட வெளியில்
நான் நடக்கிறேன்
இங்கும் அங்குமாய்...
இந்த வாடைகாற்று
என் மேல் உரசுகிறது ...
உனக்கும் அனுப்பி வைக்கிறேன்...
நான் சுகபடுவதை விட
நீ சுகப்பட
நான் ஏன் ஏங்குகிறேன்?!...

நானாய் வாழ
ஆசை கொள்கிறேன்...
நீ மட்டும் ஏன்?
ரெம்ப காதலாய்...
ஒன்று சொல்லவா?...
ஆம்
எனக்கும் வெட்கம்
உன்னால்...

இந்த இரவெல்லாம் நீ...
இனி  வரும் இரவெல்லாம் நீ...
நீயே சொல்
எது சுகம் எனக்கு?!...

மெல்லியதாய் நாட்கள் ...
மெலிதாய்
வெகுவாய்...
ரிதமாய்...
ஏன்?
பல நாட்களாய்...
இல்லை
இல்லை...
இந்த சில நொடிகளில்
ஏன்?
மெல்லிசையாய்....

நான் யார்?..

நான் யார் என்றேன்...
நீயா என்றேன்?...
நீ தானா என்றேன்...
நீ தான் என்றேன்...
இத்தனை
அருகில் இருந்தது
நீயா?...
என்னுள்
இடைவெளி தந்த
காதல் நீயா?...
 
வாழ்க்கை புதிராய்
இருக்கிறதென்றார்கள்...
அப்படியா என்றேன்..
இன்று
புதிராய் இருக்கிறது
நானே நானா?...

வானம் ஏதோ
தூரமாய்
இருக்கிறதென்றார்கள்..
நான்
இப்போது வானத்தில் பறக்கிறேன்...
இது ஒன்றும்
தூரமாய் தெரிய வில்லை...
ஆஹா..
நட்சத்திரங்கள்
ஏதோ நினைவு படுத்துகிறது...
ஆமாம்
நீ யார்?...

.


காதல்

என்
கடந்த  கால
கால்தடங்களை கண்டுபிடித்து
பின் தொடர்ந்தேன் ..
உன்னில்
போய் முடிவதேனடி...

காதல்
எதையும்
செய்யும் என்று கேட்டேன்?...
நீ
அதற்கும் மேலே
அத்தனையும்
செய்தாய் ஏனடி?......

மவுனமாய்
நகர்கிறேன்...
என்னோடு பேசுபவர்களிடம்
பதில் சொல்லாமல் உளறியபடி...
நானாய் வெட்கம் கொள்கிறேன்...
நீ அருகிலும் தொலைவிலும்
இல்லாத பொழுதுகளில் கூட...
சுகம்...
சுகமாய்...
உன் சுகம்
என்ன என்று தெரியாமலே!...

எனக்கு காதல் பிடிக்கும்...
எனக்குள் காதல் வருமா?...
என்னையே
கேட்டு கொண்டிருந்தேன்
இத்தனை நாள்...
ஏன் உன்னிடம்
இத்தனை நாள் கேட்கவில்லை?....





வெள்ளி, 24 செப்டம்பர், 2010

21st Century . . .







21st Century...

Our communication - Wireless

Our  dress - Topless

Our  telephone - Cordless

Our  cooking - Fireless

Our  youth - Jobless

Our  food - Fatless

Our  labour - Effortless

Our  conduct - Worthless

Our  relation - Loveless

Our  attitude - Careless

Our  feelings - Heartless

Our  politics - Shameless

Our education - Valueless

Our follies -  Countless

Our  arguments - Baseless

Our  boss - Brainless

Our Job  - Thankless

Our Salary  -  Very less !!!



  



 
 









நிலைகள் கடந்தது...

காதல்
விட்டு கொடுத்தலில் மட்டும்
வந்து விடுவதில்லை....
நமக்குள் இருக்கும் அன்பின்
வெளிப்பாடு தான் காதல்...

காதல்
கற்காலம் முதல்
எத்தனையோ காதலர்களை
சந்தித்து வருகிறது...
இந்த மண்
எத்தனையோ
காதல் கண்டிருக்கிறது?...

"காதல் என்பது
பிச்சை இல்லை...
யாசித்து பெற்று கொள்வதற்கு
ஒருவருக்கு மட்டும்
தன்னையே கொடுக்கும் தானம்"...

உண்மையான
காதல் பயப்படுவதில்லை...
உண்மையான காதல்
மலர்ந்து விட்டால்
மறைத்து மூட முடியாது...
நேசித்தவர்களிடம்
உடனே
வெளிப்படுத்தி விடும்...

தெய்வீக காதல் என்பது...
நேசிக்க தொடங்கியதிலிருந்து
ஒன்றாய்
உயிர் பிரியும் வரை
நிமிட நிமிடமாய்
காதலிக்கும்
அற்புதமான அதிசயம்...

காதல் வயப்படாத
மனிதர்கள் இருக்க முடியாது...
காதல்
பல்வேறு நிலைகள் 
தாண்டி இருக்கிறது...

தனிநபர் ஒழுக்கம்...

காதல் ,கற்பு இரண்டும்
வெவ்வேறல்ல...
அனைத்தும்
ஒழுக்கத்தை மையபடுத்துவதே....
ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கொள்கையை
உருவாக்குவதே காதல்...

நம்மால்
கற்பை
கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக
கற்பு நெறியை பற்றி
தவறான கருத்தை
வகுக்ககூடாது...
ஏளனபடுத்தகூடாது...

கற்பு நெறி என்பது
தனி நபர் ஒழுக்கம்...
எப்போதும் 
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்...
அது
நம் வாழ்க்கையை
உருவாக்கும்...

"உயர்ந்தோர் பத்தினியை சிறப்பிப்பர்"...
கற்பு
"பெண்ணை அடிமை படுத்த 
பயன்படுத்தப்படும் ஆயுதம் "என்று
பெண்களே
இழிவு படுத்தி கொள்ள வேண்டிய
அவசியம் இல்ல...

கற்பு ஆண்,
பெண்
இருவரின்
தனி நபர் ஒழுக்கமே....

யார் சொன்னது?...

யார் சொன்னது?...
நான் காதலிக்க மாட்டேன் என்று...
பாதி பல்லை வைத்து கொண்டு
பேருந்தில் ஏறுவதற்கு
முன்பிருந்து
பற்பசை விளம்பரம் போல்
பல்லை காட்டி கொண்டிருந்தால்
எங்கிருந்து
எனக்கு காதல் வரும்?...

எனக்கு
காதல் வராதென்று
யார் சொன்னது?..
பேருந்தில்
பயணசீட்டு கூட வாங்காமல்
நிறுத்தம்
வருவதற்கு முன்
இறங்கி ஓடும்
அக்கறை இல்லாத
ஆடவனிடம்
எனக்கு
எப்படி காதல் வரும்?...

காதல் கடிதம்
எனக்கு கொடுக்கும் முன்பே
ஏற்கவில்லை என்றால்
அடுத்த வாரம்
அருகில் இருக்கும்
என் தோழிக்கும் சேர்த்து
பார்வை பதித்து
புன்னகையுடன் கடிதம் கொடுத்தால்
எங்கிருந்து
காதல் வரும் எனக்கு?...

கோமாளிதனமாய்
இவர்கள்
காதலித்தால் கூட பரவாயில்லை...
காதலை கபடபடுத்துகிறார்கள்...

நானும்
கட்டாயம்
காதல் செய்ய வேண்டுமானால்
ஒரு வேண்டுகோள்
"என் மேல் கூட ஆசை படாத
ஏக பத்தினி விரதனாய் காட்டுங்கள்"...
"மேகனையாய் கூட
போக தயார்
அவர் உள்ளம் கவர"....


கடவுள் எந்த மதம்?...

ஏசு நாதர்,
முகமது நபி,
புத்தர்,
மகாவீரர்,
போன்ற
இறை தூதர்கள்...
"என் பெயரில்
மதம் ஆரம்பித்து இருக்கிறேன்...
உலகம் முழுதும் பரப்புங்கள்...
என் மதத்தில்
அதிகமாய்
ஆட்களை சேர்த்து விட்டால்...
நீங்கள் செய்த பாவத்திற்கு
சிறப்பு சலுகை கொடுத்து
மன்னிப்பு வழங்க
கடவுளிடம்
சிபாரிசு செய்கிறேன்"
என்று சொன்னார்களா?!...

"மனிதர்களிடையே
ஜாதி,மதம்,இனம் என்ற
நிறைய பேதங்கள் உண்டு ....
நீங்கள்
உங்களுக்குள்
ஜாதி ,இன மத கலவரங்கள்
உண்டு பண்ணி,
எங்கள்
பெயரை சொல்லி கொண்டு
சண்டையிடுங்கள்"...
என்று சொன்னார்களா?... 

எத்தனை பேருக்கு தெரியும்?...
உலகில் மொத்தம்
எத்தனை
மதம் உண்டு என்று தெரியுமா?...
எத்தனை
கடவுள் உண்டு என்று தெரியுமா?...

கடவுள்
எந்த மதம்?.....

"உலகில் அனைவரும்
கடவுளின் குழந்தைகள்"...

"ஒருவருக்கொருவர்
அன்பாய் இருங்கள்"....

"தவறுகள் செய்து
பாவத்தை தேடாதீர்கள்"...
"
அன்பை வளர்த்து
மகிழ்ச்சியாய் இருங்கள்" என்று...

அவர்கள் சொன்ன
நல்ல கருத்துகளை
எல்லாம் மறந்து
மனிதர்களுக்கிடையே
பிரிவினை ஏற்படுத்தி
இறை தூதர்களையும்...
இறைவனையும்
கலங்கப்படுத்துகிறார்கள்...

"பிறரை
நேசிக்கா விட்டாலும்
பிறரை துன்புறுத்த கூடாது"...

உங்களுக்கு கிடைக்காத
அன்பை
நிலை பெற செய்ய
உங்களால் முடிந்த
அன்பை
பிறருக்கு பரிசளித்து செல்லுங்கள்...
இந்த உலகம்
உங்களை
நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கும்....

அழிக்க முடியாது...

"ஒரு பெண்ணின்
காதலை அழிப்பது
அவளை
கற்பழிப்பதற்குச் சமம்"...

கற்பழிப்பதற்கு
எந்த
மதமோ ,மனிதர்களோ
ஆதரவு அளிப்பதில்லை...

ஒருவரிடம்
காதல் கொண்ட
பெண்ணை
வலு கட்டாயமாக
இன்னொரு ஆணுடன்
நம் சுய நலத்திற்காகவோ
சுய கவுரவதிற்காகவோ
இணைத்தால்
அது
விபசாரத்திற்கு ஒப்பானது...

நம்மால்
காதலர்களின்
காதலில் உண்டான
சாட்சிகளை அழித்து விடலாம்...
அவர்களின்
மனசாட்சியை
அழித்து விட முடியாது....

ஆன்மிகம்...

இறைவா!
விளையாட்டுதனமாய்
உன்னை சுற்றி வந்ததும்
உன் மேல் ஏறி
ஆட்டம் போட்ட போதும்
நீ
என் மேல் அன்பும்
அக்கறையும் கொண்டிருந்தாய்...
இன்று 
நான் பத்தியம் இருந்து
உன் காதில் எதிர்பார்ப்போடு
என் குறையை
உன்னிடம் கூறியும்
நீ
அதை பெரிதாய்
எடுத்து கொள்ளவில்லை...
உன்னிடம் தான் கற்று கொண்டேன்
"எதிர்பார்ப்போடு
யாரிடமும்
அன்பை பொழிய கூடாதென்று"...

கடவுள்
நம்மைக் கேட்டுத்தான்
நமக்கு
எதையும் கொடுப்பதில்லை...
கேட்காமலேயே
நிறைய கொடுத்திருக்கார்...
கொடுத்ததற்கு
நன்றி சொல்லலாம்...

"எனக்கு
கேட்டதையெல்லாம்
தந்தால் தான் இறைவன்"என்று
வாதாட கூடாது...

நம்ம பெரிய ....


தன்னை ஒரு
பொதுநலவாதியாய்
மற்றவர்கள் நினைக்க வேண்டும்...
கடவுளே கூட
நம்மை பெருமையாய்
நினைக்க வேண்டும் என்றெல்லாம்
நாம் நினைப்பதுண்டு...

"எனக்கென்று
நான் கடவுளிடம்
வேண்டி கொள்வதில்லை...
உலகத்தில் இருக்கும்
எல்லோரும்
நன்றாக இருக்க வேண்டும்" என்று தான்
வேண்டுகிறேன்...

இப்படி மற்றவர்கள் பேசி
நான் கேட்டிருக்கிறேன்...
இவை உண்மையா?...
நாம் வேண்டினால்
எல்லோரும்
நன்மை அடைந்து விடுவார்களா?...

முதலில்
நம்ம வேலைய பார்க்காமல்?...
பெரிய ....??....

நல்லவர்களை மட்டும்...

நல்லவர்களை  மட்டுமே
நாம் சந்திக்க வேண்டும்...
நல்லவர்களோடு
மட்டுமே பழக வேண்டும்...

உலகில் எல்லோரும்
நல்லவர்களாகவே
இருக்க வேண்டும்....
இப்படி நல்லவர்களை
தேடி கொண்டே இருந்தால்...
நம்மால்
வாழவே முடியாது....

நல்லவர்களோடு மட்டுமே
பேசுவேன் என்றால்...
பேச தெரிந்தும்
ஒரு நாள்
நாம் ஊமையாய்
போய் விடுவோம்...

நம்மிடம்
எப்படி நடந்து கொள்கிறார்களோ?...
அதை மட்டும் பார்த்து
நமக்கு பிடித்திருந்தால்
நாம்
பழகி கொண்டு
பயணிக்க வேண்டும்....

எத்தனை வருடங்கள்
வேண்டுமானாலும்
மற்றவர்களின் குறைகள்
பேசி கொண்டு போனால்
பேசி கொண்டே இருக்கலாம்...
"குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை"....
நமக்கே சில நேரம்
நாம்
நல்லவர்களாய்
இருக்க முடியாது....

வேலை அற்ற
வீணர்களா நாம்?...











தெரிவதில்லை...

காதலர்கள்  இணைவதற்கு
காதலர்களுக்குள்
இனம், ஜாதி ,மதம்
எப்போதும் தடையாய் 
இருந்ததில்லை....
உலகத்தில் உள்ள
மற்ற மனிதர்களுக்கும்...
ஊரில் உள்ள
மற்றவர்களுக்கும்
தடையாய் இருப்பதன்
காரணம் புரியவில்லை...

உலகில்
ஜாதி ,இனம் ,மதம்
"இப்படி ஒன்று உலகில் இல்லை" என்பதை
காதல் சொல்லி இருக்கும்...
இல்லை
அவர்கள் கொண்ட காமம்
சொல்லி கொடுத்திருக்கும்?...

இனபெருக்கம் கொள்ள
ஆணுக்கு ஆணுறுப்பும்...
பெண்ணுக்கு பெண்ணுறுப்பும்
இருந்தால் போதும்...
மனித இனம்
தோன்றி கொண்டே இருக்கும்
மதம்
ஜாதி இல்லாமல்
இருந்தால் கூட...

காமம்
மனிதர்களை
தக்க சமயத்தில் 
அடிமையாக்கி  விடும் என்பது
நிறையா பேருக்கு
தெரிய வில்லை...





வியாழன், 23 செப்டம்பர், 2010

கேவலமாய் தான் யோசிப்போம்....

பெண்கள்
அழகு நிலையம்
தொடங்கிய காலத்தில்
அதனை நடத்துபவர்களை
கேவலமாய் பேசியவர்கள் உண்டு...

இன்று
அந்த தொழில்
கவுரவமான தொழிலாய் மாறி விட்டது...
போட்டி போட்டு
ஆரம்பித்து விட்டார்கள்...

எல்லாம் பணம்...

ஒரு காலத்தில்
செருப்பு தொழிலை செய்பவர்களை ...........என்றும்....
தப்பு அடிபவர்களை ..........என்றும்.....
சலவை செய்பவர்களை .............என்றும்....
முடி திருத்துபவர்களை ...........என்றும்....
தொழில் அடிப்படையில்
அவர்களை
கீழ் ஜாதி இனத்தவறாய் பிரித்து
மனிதர்களுக்குள்ளே
மனிதர்களை
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றோம்...

இன்று
இதே தொழில்களை
உயர் ஜாதி என்று சொன்னவர்கள் கூட
செய்கிறார்கள்...

எங்கே  போனது
இவர்களின்
மானம் தாங்கிய பேச்சுகள்?....

எல்லோருக்கும்
உணவு ,உடை
வாங்க தேவை பணம்...
இதில் மனமோ..
மானமோ..
யாரும்
பார்க்க தயாரில்லை....

ஜாதி தொழில் அடிப்படையில்
பிரிக்கப்பட்டது என்பது
எல்லோருக்கும் தெரியும்...
அப்படி பிரித்தது போல்
இன்று
இப்போது அதை செய்யலாமே?...

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்...
மனிதன்
ஏதாவது காரணம் சொல்லி
அடுத்தவர்களை
குறை பாடுவதில் 
மட்டபடுத்துவதில்
கெட்டிக்காரன்!!!?...


"ஜாதிகள் இல்லையடி பாப்பா"என்று
சொல்லி தரும் ஆசிரியரை கூட
ஜாதி என்ன? என்று
கேட்பவர்கள் தானே நாம்...

ஆனால்
பணம் என்றால்
எந்த தொழில்
செய்யவும் தயங்க மாட்டோம்...
கொஞ்சம் பணம் சேர்ந்தால்...
யாரையும் மதிக்கமாட்டோம்...
மற்றவர்களை அடிமை படுத்த
எதையும் செய்பவர்கள் தானே
நாம்...
விபசாரம் கூட...

இத்தனை
வியாக்கியானமாய் பேசும்
நம்மை
யாராவது கேட்டால்
நம்மை
உயர்ந்த ஜாதியாய்
காட்டி கொள்வதில் தானே
பெருமை கொள்கிறோம்...

உலகில்
எல்லோருக்கும் தெரியும்
இனம், ஜாதிகள் இல்லை...
எல்லோரும் மனிதர்கள் தான் என்று..
நாம் கொஞ்சம்
வறட்டு பிடிவாதம்
பிடித்தவர்கள் தானே...

விலங்குகள் செய்யாத
ஒன்றை செய்தால் தானே
நாம் மனிதர்கள்...
விலங்குகள்
என்ன ஜாதி,இன சண்டையா போடுகிறது?...

அவையெல்லாம்
ஐந்தறிவு  படைத்தவைகள்...
நாம்
ஆறாம் அறிவு படைத்தவர்கள்
இல்லையா?...

கேவலமாய் தான்
யோசிப்போம்...


வெற்றி தானாய் வரும்...

நீங்கள்
செய்து முடிக்க வேண்டிய
வேலைகளை
முதலில்
கற்பனை செய்து கொள்ளுங்கள்...

அடுத்ததாய்
அதற்கான
முறையை வகுத்து
கண்டுபிடித்து
ஏற்ப்பாடு செய்து
ஒரு வழியை  உருவாக்குங்கள்...

அதில்
மேலும்
முன்னேற்றங்களை
கண்டுபிடியுங்கள்...

அதில்
அனுபவம் உள்ளவர்களிடம்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...

வெற்றி தானாய் வரும்...
வெற்றி பெற்றவர்கள் யாரும்
கவுரவம் பார்த்ததும் இல்லை...
கவுரவம் பார்ப்பவர்கள்
வெற்றி பெறுவதில்லை...
நமக்கு வேண்டியதெல்லாம்..
வெற்றி....
வெற்றி...







தன்னம்பிக்கை...

நம்மால் மட்டுமே
எல்லாம் நடக்கிறது ...
நாம் இல்லையென்றால்
எதுவும் நடக்காதது போல்
நினைக்கிறோம்...
நம் குடும்பத்திலும் சரி...
நாம் வேலை பார்க்கும் இடத்திலும் சரி...
கண்டிப்பாய்
நாம் இல்லாமலும் நடக்கும்
மறந்துவிடாதீர்கள்......

நம் தாத்தாக்கள் இல்லாமல்
நம் அப்பாக்கள் இல்லையா.?....
நம் அப்பாக்கள் இல்லையென்றால்
நாம் வாழ மாட்டோமா?...
நாம் இல்லையென்றால்
நம் சந்ததிகள் வாழாதா?..
நாம் இல்லையென்றால்
உலகம் நின்றுவிடுவது போல்
நாம் நம்மையே
உயர்வாய்
நினைத்து கொள்வோம்
சிலநேரம்...

பாசம்,அன்பு என்பதை
ஒத்திவைத்து
யோசித்து பாருங்கள்....

நம் குடும்பத்தில்
முக்கியமான பொருளாதாரம்
தரக்கூடியவர்
இறந்து விட்டால்...
முதலில் அதிர்சி அடைவோம்...
மயங்கி கூட விழுவோம்....

இல்லை...
அப்படி
இறந்திருக்க வாய்ப்பில்லை என்று
ஏற்று கொள்ள மாட்டோம்....

அடுத்து
நடந்துவிட்டதோ என்று
பயம் வரும்...

அடுத்ததாய்
கோபம் வரும்
ஏன்?...
இப்படி
இடையில் விட்டு போனால்
என்ன செய்வதென்று தெரியாததால்...

அடுத்ததாய்
நம் வாழ்கை
என்ன ஆகுமோ? என்ற
கவலை பிறக்கும்...

கொஞ்ச  நேரம்...
கொஞ்ச நாட்கள் கழித்து..
இப்போது மனதை
தேற்ற தொடங்குவோம்..
அதிலிருந்து
வெளி வரயோசிப்போம்...
வேறு வேலையில்
ஆர்வத்தை மாற்றுவோம்...
நம்மை
நாமே
சுயமாய் இயக்க கற்று கொள்வோம்...

யாரும் யாருக்காகவும்
இறந்து விட முடியாது...
தற்கொலை
செய்து கொள்ளும்
கோழை அல்ல நாம்...
மற்று வழியில்
பயணம் செய்யலாம்...
மரணம்
தானாய் வரும் வரை...

நாம் மட்டும்
இல்லையென்றால்
நம் குடும்பம்
நம் பரம்பரை
அழிந்து போகும் என்று யோசிக்காமல்
வாழ வழி கற்று கொடுங்கள்...

உங்களை மட்டும் நம்பி
இருப்பவர்களுக்கு
நீங்கள் நன்றாய் இருக்கும் போதே
தன்னம்பிக்கைகளை
விதைத்து செல்லுங்கள்......
சுயமாய்
வாழட்டும்...

நீங்கள் பொருளாதாரம் தருவதால்
சில வருடங்கள் வேண்டுமானால்
உங்களால்
உங்கள்
குடும்பத்தில் உள்ளவர்கள்
சுகமாய் வாழ முடியும்...
தன்னம்பிக்கை
கற்று கொடுத்து பாருங்கள்...
நீங்களும் நெடுநாட்கள் வாழலாம்....



எனக்கும் மனசாட்சிக்கும் ஏற்படும் யுத்தம்...

நான்
எழுதியவற்றை  கவிதைகள்
என்று சொல்ல முடியாது...
அதற்கு தகுதியானவை கிடையாது....
என் மனதில் பட்ட
நான் பார்த்த,கேட்ட
வார்த்தைகளின் தொகுப்பு...
உரைநடை கட்டுரைகளே இவை...

நான் யாருக்காகவும்
இதனை எழுதுவதில்லை...
என்னோடு மனசாட்சியோடு
சண்டை போடுவதை
மடக்கி மடக்கி எழுதி வைக்கிறேன்...

நான் சிலநேரம்
என்னை
என்னில் இருந்தே
என்னையே
சிலநேரம் 
உமிழ்ந்து கொள்கிறேன்...
என்னை காப்பற்றி கொள்ள
உதவும்
இந்த உளறல்களை
நானே சில நேரம் ரசிக்கிறேன்...

சமூகத்தில் நான்
காண்கின்ற விசயங்களுக்கு
என்னால் தீர்வுகள்
கொடுக்க முடிவதில்லை...

என் மனம்,உடல்
கெட்டு போகாமல் இருக்கவும்...
"நமக்கு ஒவ்வாதவற்றை
நாம்  சுமப்பது
நமக்கே  பாதிப்பு தரும் "என்பதால்
என் பேனா முனை
வழியே
என் சில வலிகளை
வாந்தி எடுத்துக் கொள்கிறேன்...

நாம் பிறரை திருத்த முடியாது
அது நம் வேலையும் அல்ல...

"நம் எதிரிகளுக்கு
பாடம் புகட்ட
சரியான வழி
அவர்கள் முன்பு
நாம் சிறப்பாக
வாழ்த்து காட்டுவது தான்"...

அதற்கான வழியில்
எனக்கு உதவுவது
இந்த உரைநடை கவிதைகளும் தான்......

கண்ணீர் துளிகள்...

உன்
அன்பான கணவன்
நான்...

உன் வாழ்க்கையில்
நீ விருப்பப்பட்ட
நிறைய ஆசைகளை
உன் தந்தை
நிராகரித்ததுண்டு...
அதையெல்லாம் கேட்டு
நான் உனக்காய்
நிறைவேற்றி வைத்தேனடி........

உனக்கு தெரிந்திருக்காது...
நானே
உணவின்றி
இருந்த நாட்கள் உண்டு...
நீ
என்னிடம் வந்த பிறகு
ஒரு நாளாவது
உண்ணாமல் இருந்திருப்பாயா?...

உன் தந்தை
உனக்கு தராத..
என் தந்தை
என் தாய்க்கு தராத...
சுதந்திரம்
நான் உனக்கு தந்ததுண்டு....
எங்கள் பரம்பரையில் 
பெண்களுக்கு சுதந்திரம் 
இதுவரை
தந்தது இல்லையடி....

உனக்கு
கை பேசி
வாங்கி கொடுத்தது
என்னையும்
நம் குழந்தைகளை தொடர்பு
கொள்ளதானடி...
நம் குடும்பகவுரவத்தை
வீசி எறிய இல்லையடி...

பெண்ணடிமை
கொடுமை பற்றி
உனக்கு தெரியுமா?...
என் தாய்க்கு
கல்வி கற்க கூட
அனுமதிக்கவில்லையடி...
உன் சுதந்திரத்தின் அருமை
உனக்கு தெரியவில்லையடி...

எனக்காய் நீ
உடன்கட்டை ஏறி
உயிர் தர வேண்டாம்...
ஒன்றை யோசித்து பார்...
நம் பிஞ்சு குழந்தைகள்
என்ன குற்றம் செய்ததடி?....

என்னால்
இதற்கு மேல்
சொல்ல நா.... கூசுதடி...
உன்மேல் இத்தனை
பிரியம் கொண்ட
எனக்கு
துரோகம் செய்ய
உன்னால் எப்படி
..................
..................???







புதன், 22 செப்டம்பர், 2010

நுகர்வு கலாச்சாரம்.....

தற்போதைய
தலைமுறை
ஆண்,பெண்களிடம்
புதிது புதிதாய் 
எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்ற
எண்ணம்
இருபாலருக்கும் பெருக
ஆரம்பித்து உள்ளது...

வருடகணக்கில்
கார் வைத்திருந்த
காலம் போய்..
வருடத்திற்கு
ஒரு முறை கார் 
மாற்றவேண்டும் என்ற
எண்ணம் பெருகி விட்டது...
செல்போனைகூட 
மாதாமாதம் மாற்றும்
மனநிலை வந்து விட்டது...

அம்மா,அப்பா,
அண்ணன்,தம்பி,
அக்கா,தங்கை என
முன்பு உறவுகளுக்கு
முக்கியதுவம் இருந்தது...
இதன் அடிப்படையில்
நமது சமூகமும்
மேன்மையாக இருந்தது...

முன்பெல்லாம்
குடும்ப கவுரவம்,
மானம் போய் விடும் என்ற
பயம் கூட
பலரை பாதுகாப்பாய்
வைத்திருந்தது நிஜம்...

இன்று உறவு முறைகள்
பின்னே தள்ள பட்டு
சுயநல சுகங்கள் மட்டுமே
முதன்மைபடுத்தபடுகிறது...
நுகர் பொருட்கள் போல...

குடும்பம் என்றால்
இப்படி தான் இருக்கும் என
பேசி தீர்த்து கொண்டவர்கள் கூட
இன்று கணவன்
மனைவிக்குள் பிரச்சனை என்றால்...
தான் எதிர்பார்க்கும்
சுகம் கிடைக்கவில்லை என்றால்...
தனக்கு அறிமுகமான
எதிர் பாலினதவரிடம்
அதை தேடி கொள்ள
மனரீதியாக தயாராகி விடுகிறோம்...

செக்ஸ் கூட
நுகர் பொருளாய் மாறிவருகிறது...
இப்படியே போனால்
நாளை
அன்பு,நேசம்,காதல் போன்ற
உறவு முறைகள்
நம்மிடம் தொலைந்து போகும்...
நாளைகளில் 
மனிதர்கள் இருப்பார்கள்
மனிதம் இருக்காது...

நமக்கென்ன என்று
நாம் போய் கொண்டிருந்தால்
நாளை 
நம்மை சார்ந்தவர்கள்
தடம் மாறி
நமக்கு அவமானம் தேடி தரலாம்...

என்னால் மட்டும்
இந்த
உலகை மற்ற முடியுமா?என்ற
கேள்வி கேட்டு விட்டு
எல்லோரும்
அமைதியாக இருக்கலாம்...

நம்மால்
எந்த அளவு முடியுமோ
அதை முயற்சிக்கலாமே?...
குறைந்த பட்சம்..
நாமாவது
தவறு செய்யாமல் இருக்கலாமே?...

நீங்களும் சாதிக்கலாம் ...

பெண்களுக்கு
என்ன சுதந்திரம் வேண்டும்?...
விரும்பியவரை
திருமணம் செய்ய வேண்டும்...
விருப்பமில்லை என்றால்
தனித்து வாழ வேண்டும்...
திருமண பந்தம் இன்றி
ஆணுடன் சேர்ந்து வாழ வேண்டும்...
இவை போதுமா?..

பல ஆண்களோடு
உறவு கொள்ளும்
பாலியல்
சுதந்திரத்திலா
பெண் சுதந்திரம் இருக்கிறது?...

ஆண்கள் போல்
இருக்க வேண்டும் என்பதற்காக
மது அருந்துதல்
புகை பிடித்தாலும் அல்ல சுதந்திரம்...
அவை
ஒரு பழக்கம் தானே தவிர
சுதந்திர மனப்பான்மையோடு
தொடர்புடையவை அல்ல...

பெண்மை என்றால்
மென்மை...
கனிவு...
சாந்தம்...
அழகு மட்டும் அல்ல...

அறிவு,
வலிமை,
ஆற்றல் என்று
ஏன் யோசிக்க கூடாது?...

உங்களை
யாரும்
சாதிக்க கூடாது என்று
சட்டம்
போட்டு வைத்துள்ளார்களா?...
நீங்களும் சாதிக்கலாம்
வாருங்கள்...