உனக்கு தெரியுமா?
உதிரும் உன் புருவ முடிகள் கூட..
என் இதயத்தைதானடி
அடிக்கடி குத்தி
செல்கிறது
உன் பெயரை சொல்லியபடி...
இன்னும்
உனக்கான கவிதை
தொண்டை வரை வந்து
மனதிற்குள் மறைவதும் ஏனடி?...
நான் உன்னிடம் ஏதோ சொல்ல
நினைக்கும் போதெல்லாம்
நீ
வெகு தொலைவில்..
நிழல்
நம்முடனே இருப்பதில்லை...
சில நேரம் விலகி போனாலும்
நம்முடன் தானே
பயணம் செய்தாக வேண்டும்?....
..............
இப்படி கூட தேற்றி கொள்கிறேன் ஏனடி?...
நான் சொல்ல வந்ததை
உன் விழிகள்
விழுங்கி விடுகின்றன...
வார்த்தைகள் தொலைந்து
போனவனாய் நான் ...
உன்னிடம் மட்டும் ஊமையாய்
ஏனடி?!!!!!.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக