நான்
வெளிநாட்டில் வாழும்
தமிழன்...
எனக்கு ஆடம்பரம்
வசதிகள் வந்து சேர்ந்து விட்டன...
என்னை ஊரே
புகழ்ந்து கொண்டிருக்கிறது...
பணம்
இது நம்மை தவிர
அடுத்தவர்களுக்கு தான்
அதிகமாய்
பயன்பட போகிறது...
பணம் இல்லை என்றால்
நீ ...
நான் ....
நாம் என்று
யாவரும் பிணம்...
இந்த வெளிநாட்டில்
சாப்பிடுகிறேன்...
தூங்குகிறேன்...
வேலை செய்கிறேன்
பணம் அதிகமாய் சேர்க்கிறேன்...
உண்மை சொல்லவா...
அங்கே நடந்து செல்லும்
ஒரு குடும்பத்தை பார்க்கும் போது
என் குடும்பத்தை பிரிந்து தவிக்கும்
நான்
பெரிதாய்
கண்ணீர் கொட்டுகிறேன் என்னுள்....
என்னடா வாழ்க்கை?....
"பணம் வேண்டாம்
நீ மட்டும் போதும் "என்று
என்னை கூப்பிடுமா
என் குடும்பம் என்று
ஏங்கி
கனவு கூட கண்டு இருக்கிறேன்....
நிஜம்
என்னவென்றால்
என்னை
பணம் கொண்ட
பிணமாய்
மாற்றிவைத்திருக்கிறது...
என்னை சாப்பிட்டாயா? என்று
கேட்க கூட
யாரும் இல்லையடா....
அட போடா
என்னடா வாழ்க்கை?......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக