என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என்னிடமும் குறை உண்டு....

அலைபேசியில்
அடிக்கடி அழைத்து பேசும்
அன்பான நண்பனே....
இதுவரை
தவறிய அழைப்புகள்
மட்டும் தந்து தான்
உன்னிடம்
நான் பேசி கொண்டிருக்கிறேன்.....

என்னை தோழி என்றாய்...
பிறகு
காதலி என்றாய்....
நான் மறுத்ததும்
வேசி என்கிறாய்....
காதல் தோல்வி என்று கூட
சொல்லி கலங்குகிறாய்....
நீயே
யோசித்து பார் நண்பனே...
அலைபேசியில்
நான்
ஒரு பைசா
உனக்காக
செலவு செய்து
பேசி இருப்பேனா?!!!....

என் மேல்
குற்றம் சொல்ல
என்ன இருக்கிறது?.......

இருந்தாலும்
நட்பு உண்டு உன்னிடம்....
ஆனால்
குறை உண்டு
என்னிடம்....
நட்பென்றால்
என்ன வென்று
புரியாத
உன்னிடம் பேசியதால்....

என்னிடமும்
குறை உண்டு....

கருத்துகள் இல்லை: