பிச்சை கேட்டு நிற்கும் வறியவனிடம்
நான் உன் மதம் இல்லை....
"பிச்சை போட முடியாது" என்கிறாய்....
உன் மதம் கற்று கொடுத்தது
மனித நேயதையா?
மத வெறியையா?....
உன் மதத்தை
பின்பற்றுபவன் மட்டும்
மனித இனமா?....
உண்மை சொல்...
யார் கற்று கொடுத்தது
இந்த கேவலமான மத உணர்வை?...
பிச்சைக்காரன் என்ன
வேற்று கிரக உயிரியா?....
மனிதனுக்கு
தீங்கானவற்றை
சாத்தான் என்கிறோம்...
மனித இனத்தை
மதத்தால் பிரிக்கும்
உன்னை போன்றவர்களை
எப்படி சொல்வது?....
நீ சாத்தானா?..
மனிதனா?...
இன்னொரு மனிதனின்
பசி அறியாதவன்
மனிதனாக இருக்க முடியாது....
இந்த உலகத்தை படைத்தவன்
கடவுளாக இருக்கலாம்
ஆனால்
மதத்தை படைத்தவன்
உன்னை போன்ற
கேவலமான
மனிதனாக தான் இருக்க முடியும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக