என் இதயம்
திடீர் என்று படபடக்கிறது..
இங்கு தான்
எங்கோ நீ
என்னை
கடந்து சென்று
கொண்டிருக்கிறாய்...
என் இதயம்
திடீர் என்று படபடக்கிறது..
இங்கு தான்
எங்கோ நீ
என்னை
கடந்து சென்று
கொண்டிருக்கிறாய்...
மின்னலாய்
மறைந்து போனாய்
என்னை கடந்து சென்ற
பேருந்தின்
கடைசி இருக்கையில்
அமர்ந்து
என்னை பார்த்து
கண் சிமிட்டியபடி....
உன் உருட்டு விழிகள்
என்னை மிரட்டி செல்கிறது...
ஏய்!..
என்னை "காதல் செய்"
என்று...
உன் பார்வையில்
என்னை
எடுத்து சென்று விட்டாய்..
என் நிழல்
தேடிகொண்டிருகிறது
என்னை...
எல்லோர்
கண்களுக்கும்
நான் ஊமையாய் ..
தனிமையில்
நான் மட்டும்
உன்னோடு பேசிய படி...
உன் பெயரை
விண்வெளியில்
ஒவ்வொரு எழுத்துகளாய்
விதைத்திருக்கிறேன்.....
நட்சத்திரங்களாய்
எப்படி
மின்னுகிறது பார்...
நீ என்னை காதலிப்பதை
உடனே சொல்லி விடாதே ...
கொஞ்ச நாள் ஒத்தி வை ...
இந்த வலி
சுகமாய் இருக்கிறது
உன் பதிலுக்காக
காத்திருக்கும் போது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக