பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......
காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...
பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....
பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
...........................
.....................................
..............................
இந்த கோடுகள்
பல அர்த்தங்களை சொல்லும்?......
நட்பில் சுகமும் உண்டு
காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சில நாட்களில் நட்பு
மறந்தே போய் விடும் அதிசயம் ஏன்?...
.............................
.............................
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் காதல் வரும்....
ஒரு நாள் காமம் வரும்......
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்....
நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...
சில நேரம் நட்பு பிடிக்கும்....
சில நேரம்
அத்தனையும் வெறுக்கும்....
இவை அனைத்தும் நட்பில் ...
நட்பென்ற காதலில்....
நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....
நம் மனம் சிலரை விரும்பும்.....
நம் உடம்பு சிலரை விரும்பும்....
ஆனால்...
நம் உயிர்
ஒருவரை மட்டும் விரும்பும்
அதுதான்டி காதல்?....
இது மாறாது...
மாற்று தேடாது
இந்த உயிர் உள்ள வரை
உனக்காக மட்டும்.........
1 கருத்து:
உன் சுயம் அறி! சுடர்விடு!
- பேனாமுனை பாரதி
என் இனிய
இளைஞனே!
சற்றே கவனி
உற்றே நோக்கு!
வெறுப்பின்
அம்சமில்லை
வாழ்க்கை
நெருப்பின் அம்சம்!
உன் சுயம் அறி
அதில் நீ
சுடர்விடு!
திக்கு திசையற்று
தீனர்களாய்
திரிவதில் பயனுண்டோ?
எத்திக்கும்
உன் பெயரை
உச்சத்தில்
உச்சரிக்க
வேண்டாமா?
முடியாது என்பது
முட்டாள்களின்
வார்த்தை
எதற்கும் முயற்சி செய்
இன்றேல்
பயிற்சி செய்
ஒவ்வொரு உயிரின்
முயற்சியே
அதன் வாழ்வின்
மலர்ச்சி
உன் மனதை
ஆழ உழு
செவிகளை
கொஞ்சம்
அகலத்திற
விழிகளை
இன்னும்
விரித்தே வை
கேள்,
வெற்றி ஒன்றும்
கம்பசூத்திரம் அல்ல
நல்லவை நாடு
அல்லவை அகற்று
சொல்வதை செய்
செய்வதை சொல்
உலகம் உன்
சட்டைப் பையில் விழும்!
கருத்துரையிடுக