வெறும்
பணத்திற்காக
காதல் வார்த்தைகளில்
இன்று
காமம் உமிழும் பெண்ணே!....
உனக்கும்
காதல் உண்டு என்பது
அறியாமல் பலர்
உன்னிடம்
வந்து போய் இருக்கலாம்...
என்னால்
உன் விரலை கூட
தீண்ட முடியாது....
ஏன்?...
உன்
முதல் காதலுக்காக..
நீ
பச்சை குத்திய
உன் காதலனின்
பெயரை சுமக்கும்
தனங்களின்
வலி
என் கண்களில்
தெறிக்குதடி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக