நான் பேசும்
மவுனம்
என் கவிதை...
நீ எனக்கு அமாவாசையாய்
இன்னோருவனுக்கு
பவுர்ணமியாய் ஏனடி?....
உன்னை
நிலவென்று
நான் சொன்னதாலா?.......
நான் அழுத தருணங்கள்
மற்றவர்களுக்கு
விளையாட்டாய்...
என் கண்ணீர் சொல்லும்
உன்னிடம்
நான்
தோற்று போன காதலை...
தோற்று போன காதலுக்கு
தேற்ற ஆள் இல்லை என்கிறாய்...
நினைவுகள் என்று சொல்லி
நிஜத்தை தொலைப்பதா
காதல்?......
இன்னும் எத்தனை நாள்
இப்படி சொல்லி கொண்டு
காதலை ஏமாற்ற போகிறீர்களோ ?..
படித்துறையில்
பாதம் நோக காத்திருந்தேன்
உன் திருமணதிற்கு
உனக்கு காற்றிடம்
தூது விட்டு
வாழ்த்துரை கூறியபடி..
உன்னை நினைத்தால்
சில நேரம் வருத்தமாய் இருக்கும்...
என்னை
நீ
இழந்து
எப்படி இருக்கிறாயோ?...
என்று...
அது எப்படி
அத்தனை வலியும்
ஒரு குழந்தையின் புன்னகை
கண்டால்
தொலைந்து போவது
ஏனடா?...
உள்ளேயும் வெளியேயும்
நிஜமாய்
நிஜத்தை வெளிபடுத்துவதாலா?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக