என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 25 ஆகஸ்ட், 2010

காதலில் நான் தீவிரவாதி....

நான்
கண்ணாடி பார்க்க துவங்கியதே
நீ என்னை நேசிப்பதாய்
சொன்ன பின்பு தான் ...
எனக்கே பிடிக்காத
என்னை......
என் முகத்தை
எப்படி உன்னால்
ஏற்று கொள்ள முடிகிறது?!!!....

கஷ்டமில்லாமல் இருக்க
ஒரு வழி சொல்கிறேன்
நான் உன்னை
காதலிப்பதை சொன்னதும்
உடனே மறுத்து விடு...
என்னை நீ காதலிப்பது
அத்தனை கடினம்...
என்னை போல்
உன்னால்
என்னை காதலிக்க முடியாது....
காதலில் நான் தீவிரவாதி....
நொடி பொழுதும்
உன்னை
என்னிடம் இருந்து தரமாட்டேன்....

கருத்துகள் இல்லை: