என் நண்பனே...
உன்னோடு
மது பருகினால் தான்
நம் நட்பு நிஜம் என்கிறாய்...
இங்கு நட்பு
எதை வளர்கிறது?......
நினைத்து பார்.....
ஒரு நாளாவது
நான் உனக்கு ஏதாவது
அறிஉரை சொல்லி இருப்பேனா?...
இல்லை...
மதுவால் நீ
தடுமாறிய போது கூட
தடுத்திருப்பேனா?...
இல்லை...
விலகி நின்றே
வேடிக்கை பார்த்திருக்கிறேன்
வழிபோக்கன் போல் ...
நீ தான் சொல்லி கொண்டிருக்கிறாய்
உன் நண்பன் நான் என்று
நட்பிற்கு அர்த்தம் தெரியாமல்!!!...
நட்பு என்பது
தவறுகளை
தூண்டுவதற்காக அல்ல...
தவறுகளை
செய்ய விடாமல்
தடுபதற்காக என்றே
நான் நட்பிடம் எதிர்பார்க்கிறேன் ...
நட்பு கூட
ஒரு தாய் போல்
இருக்கவேண்டுமடா?......
இப்போது சொல்
நீயே என் நண்பனா?....
நான் உன் நண்பனா?...
நான் இன்னும்
காத்திருக்கிறேன்
நல்ல நண்பனுக்காக
வெகு நாட்களாய்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக