என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

உன் நோக்கம் தான் என்ன?!......

தெய்வமே!....
பூமியில் 
அங்கங்கு
விதவிதமான
மதங்களில் காட்சி தருகிறாய்?!......

மனிதனை
அவ்வப்போது
ஒவ்வொறு  விதமான
உருவங்களில்
காப்பாற்றுவது போல்
அருள் தருகிறாய்...
உன் நோக்கம் தான் என்ன?!......

மனிதர்களை
வேடிக்கையாய்
பிரித்து விளையாடும்
நீ இருப்பது உண்மையா?...
இன்னும்
ஒரு அறிவு கொடு....

"நீ ஒருவனே" என்பது
மனிதர்களுக்கு புரியட்டும்...
உன் பெயரால்
சண்டை
இடுவதையாவது நிறுத்தட்டும்...

ஆறறிவால் மனிதன்
இதை கூட
இன்னும் மனிதனால்
உணர முடியவில்லை....

கருத்துகள் இல்லை: