என்னைப் பற்றி
வெள்ளி, 30 ஜூலை, 2010
நானும் சாராசரி மனிதன் தான்.........
சமூக சிந்தனையாளனாக
என்னை நினைத்ததுண்டு...........
எனக்கே வெட்கமாய் இருக்கிறது........
அந்த கொட்டும் மழையில்
கை இழந்த மனிதன்
தூக்கி விட யாரும் இன்றி
தவித்ததை
பார்த்தபின்னும்.........
கல் நெஞ்சகாரர்கள்
வேடிக்கை பார்க்கிறார்களே என்று
சமூகத்தை
எப்போதும் சாடும்
நான் கூட
சுயநலவாதியாக
கை தூக்கி விட மனமின்றி
கடந்து வந்த போதே
என்
முக திரை கிழிந்து
எனக்கே என்னை புரிந்தது
நானும்
சாராசரி மனிதன் தான் என்று ...............
யோக்கியர்கள் குறைவு
தான் கூட
நல்ல உடைகள் அணியாமல்
விருப்ப உடைகள் குழந்தைகளுக்கு
வாங்கி தரும் பெற்றோர்களே!.....
பெண் குழந்தைகளுக்கு உடல் மறைக்கும்
விதத்தை கற்று தராமல்
சுதந்திரம் தருகிறீர்கள் ...
வாழ்க்கை சூறை போன பின்
நிர்வாணப்படுவது
நீங்கள் மட்டும் இல்லை
இந்த சமூகமும் தான் .....
இன்னும் நம் நாட்டில்
ஆண்களில்
யோக்கியர்கள்
குறைவு என்பது
உங்களுக்கு
தெரியாதா?.......
குழந்தை வளர்ப்பு...
அனுபவித்தாலும்
குழந்தைகள்
கஷ்ட படகூடாது என்று
நிறையவே பெற்றோர்கள்
கஷ்டபடுகிறார்கள்....
குழந்தை
தனக்கு வேண்டியவை தரவில்லை என்றால்
தரையில் முட்டி அழும்.....
நாம் துடித்து போய்
அதன் பிடிவாதத்திட்காக
வாங்கி தருகிறோம்....
குழந்தை பழகி கொள்கிறது
எப்படி மிரட்டி காரியம் சாதிப்பது என்று....
இந்த பழக்கத்தை உற்சாக படுத்தலாமா?...
ஆணை மாற்ற முடியும் ......
ஆண்களுக்கு
பணம்..
பெண்கள் மட்டுமே
பிரச்சனை....
கையில் பணம் இல்லாத போது
கையாலாகாத
தனமாய்
ஆண் தவிப்பதும்....
பெண்ணின்
அவமதிப்பை
பெரும் போதும்
பெரிதாய் பாதிப்படைகிறான்......
வார்த்தைகளால் கொல்லும் பெண்களே....
"பெண்
எத்தனை
அழகாய் வேண்டுமானாலும்
ஆணை மாற்ற முடியும் என்ற
மந்திரத்தை உங்களுக்கு
சொல்லி தராமல் போனது ஏனோ ?.....
பிரச்சனைகள் ...
பிரச்சனைகள் அதிகம்....
ஆனாலும்
நாம் பல நேரங்களில்
அதை சமாளித்து விடுகிறோம்
சில நேரங்களில்
நாம் சாய்ந்து போகிறோம்....
எத்தனை சமாளிப்புகள்
செய்தும்
முடியாமல் வெடிக்கிறோம்....
கோபமாய் ....
கோழையாய்....
"பொறுமையாய் இருங்கள்"
என்று போதனை சொல்பவர்களுக்கு
நம் நிலை புரியாதோ என்று
சீறி விடுகிறோம்...
உண்மை....
நம் வாழ்கையில்
பெரிதாய் ஒன்றும்
நடந்து விடாது
அதிக பட்சம் இறப்பு....
நிதானம்...
நாம் நிலைகுலையும் போது
செய்ய வேண்டிய
தியானம்....
இதற்காகவா ?
இந்த
சின்ன விசயதிற்காகவா?...
இப்படி நடந்து கொண்டோம்
என்பது புரியும்....
உங்களை நீங்களே
திட்டி எழுதி
மறுநாள்
படித்து பாருங்கள்...
உங்களின்
குறைகள்
உங்களுக்கு புரியும்....
விபச்சாரி...
"எனக்கு மட்டும்
ஏன் நல்ல குடும்பம் தர மறுத்தாய்?...
எனக்கும் நல்ல கணவன்
எனக்கும் நல்ல குழந்தைகள்...
ஏன் இல்லை?....
என்ன பாவம் செய்தேன்?"...
எத்தனையோ பணம் குவித்த
விபச்சாரிகளின் வேண்டுதல்கள் இவை .......
பணத்திற்காக
வேறு வழி இல்லாதவர்களும் ஏராளம்...
அதில் இருந்து விலக
காலம் கடந்து தவிப்பவர்களும் ஏராளம்......
ஆனால்
பணம் இருந்தும்
மனம் கெட்டு
சதை தேடும்
பெண்களே!
பணத்திற்காக
எழாத ஆண் உறுப்புகளை
உறிஞ்சும்
விபசாரிகளின்
வலி
உங்களுக்கு
எப்படி தெரியும் ?....
பெண்ணீயம்
ஆண்களுக்கு
அடிமை பட்டும் கிடந்த
பெண்கள்
இன்று அதிலிருந்து
விடுபட்டு நிமிர்ந்து நிற்கிறோம்....
பெண் கையில்
பணம் மட்டும் இருந்தால் போதும்
எதையும் சாதிக்கலாம் என்ற பிரச்சாரம் ஓங்கி நிற்கிறது...
கல்வியும்
பொருளாதாரமும் பெற்று
ஆணின் அடிமை விலங்கை உடைத்தோம்....
ஆனாலும் ஆணவத்தால்
குடும்பம் தொலைத்து
கதறி அழுகிறோம்...
பணம் கொண்டு
பாசம் தேடுகிறோம்...
காதல் தேடி கணவனை தொலைத்து
கண்டவனிடம்
கற்பழிக்கபடுகிறோம்
உள்ளும் ,புறமும்.....
ஆணை சார்ந்து ஒரு பெண்ணும்
பெண்ணை சார்ந்து ஒரு ஆணும் கொண்ட
வாழ்கையை
வாழ்ந்து தான் ஆக வேண்டும்.....
தனி நபர் ஒழுக்கம்
சமூகத்திடம்
தேட முடியாது....
நம்மில்
தொடங்க வேண்டும்....
ஆணை அரவணைத்து போவதில் தான்
பெண்மை இருக்கிறது....
பெண்ணீயம்
கண்ணியமான
இல்லறத்தில் தான் உள்ளது....
ரோசக்காரன்
எத்தனை ஏளனம்?....
ஏழைக்கு கோபம் வரகூடாது என்கிறோம்....
சுய மரியாதை
இருக்க கூடாதென்கிறோம்...
"சொல்வதை செய்" என்கிறோம்
சுயமாய் யோசிக்க கூடாதென்கிறோம்....
ஏன்?....
பணம்
எத்தனை ஆணவத்தை தருகிறது....
அடங்கி போகும்
ஏழைக்கு
வழி இல்லாமல்
வலி தாங்கி போகிறான்...
ஒரு வேலை
சாப்பிட வலி இல்லாமல்
தவித்து பாருங்கள்....
அவன்
எத்தனை
ரோசக்காரன் என்பதை
உங்கள் வயிறு
உங்களுக்கு புரிய வைக்கும் ....
.
அகிம்சை
எதிரி தான் முடிவு செய்கிறான் என்பது
உண்மை போல் இருக்கலாம் ....
வெற்றி
மனித சடலங்களின் மீது
கொடி நாட்டுவதில் இல்லை...
தீவிரவாதம்
ஆயுதம் மூலம்
வெற்றி பெறுதல்
மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை....
வெற்றி
ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல
இடம் மாறி கொண்டே இருக்கும்....
வரலாறு நமக்கு
சொல்லி தருகிறது....
அகிம்சையில் யாரும்
இம்சைபடுவதில்லை....
தீவிரவாதம்
மண்டி போடும்...
ரத்தஆறு போதும் என்று
தான் சொந்தங்களின்
பிணங்களை பார்த்து அழுதபடி ....
வெற்றி
அத்தனை சாதாரணமாய்
எல்லோருக்கும்
கிடைத்து விடுவதில்லை....
வெற்றிக்கு
நிறைய காரணங்கள் உண்டு....
உதவி ,உற்சாகம்
சிலருக்கு
வெற்றியை எளிதாய் தருகிறது...
சிலருக்கு வலி...
போராட்டம்...
அவமானம் ,உதாசீனம் கூட சிலருக்கு
வெற்றி பெற்று தந்திருக்கிறது...
அதிஷ்டத்தால்
வாய்ப்புகள் கிடைக்கலாம் .....
ஆனால்
யாராலும்
திறமையும் உழைப்பும் இன்றி
வெற்றியை
தக்கவைத்து கொள்ள முடியாது.......
விமான நெரிசல் ....
மனிதர்கள்
உல்லாசமாய்
உற்சாகமாய்....
உலகையும் தாண்டி
உழைக்கிறார்கள்....
வாழ்த்துவோம்...
காற்றை கிழித்து
காற்றை அசுத்தபடுத்தி
நமக்கே நாம்
கருமாதி செய்கிறோம்...
ஓசோன் ஓட்டை வழியாய்
நாம்
விண்வெளி காண போவதில்லை....
உண்மையில்
ஒரு நாள்
ஆக்ஜிசன் சிலிண்டர் கட்டி கொண்டு
வெத்து வெளியில்
காற்றை தேடி
அலைய போகிறோம்....
ஒரு வித மன நோயாளிகள்......
மனதில் வைத்து கொள்ள மாட்டேன்......
மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன்.......
இது தவறா?என்று கேட்பவர்கள்...
தனக்கு
தன் விருப்பபடி நடக்காத போது மட்டும்
நான் யாருக்கு
என்ன கெடுதல் செய்தேன்?...
யார் வாழ்கைய கெடுத்தேன் ?
எனக்கு மட்டும் ஏன்?....
இப்படி எல்லாம்
தன்னை வெகுளியாகவும்..........
என் முன்னால் தவறு நடந்தால்
என்னால் தாங்க முடிவதில்லை.....
எனக்கு கோபம் வந்தால்
நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.....
என்று சொல்லி
தன்னை போராளியாகவும்
சொல்லி கொள்பவர்கள்
அதிகமாய் பெருகி விட்டார்கள்....
சுயநலவாதிகளின் வாதம்
யாரையும்
காப்பாற்றுவதுமில்லை....
யாரையும்
அழிப்பதும் இல்லை....
இவர்கள் மனதால் பக்குவம் அடையாதவர்கள்....
ஒரு வித மன நோயாளிகள்....
பெண் கற்பு
சட்டப்பூர்வமான வடிகால்
தரபடாததால் தான்
இன்னும் இந்த காதலுக்கு ஏங்கி
வாழ்க்கை தொலைக்கிறார்கள்.....
ஒரே முறை கிடைக்கும்
இந்த வாழ்கையில்
இல்லாத காதலை தேடியே
பாதி இளமையை
தொலைக்கிறார்கள்....
தொலைந்தும் போகிறார்கள்........
காதல் பற்றிய பொய்யான
பிரசாரமும்
பெண் கற்பு
ஒரு காதலில் மட்டும் என்றும் சொல்கிறார்கள்....
மிக சாதாரண
இயற்கையான காமத்தை
காதல் போதையாய் மாற்றுவது
ஏன்?.....
காதல் இல்லை.....வெறி ....
விடா முயற்சியால்
காதல் உருவாக்க பட கூடாது ..........
அது காதலாகி கசிந்து
கசந்து போகும் ..........
உடம்பு பழகி போனதும்
அலுப்பு ,வெறுப்பு
வந்து விடும்.....
ஆசையான உடல்
அருகில் இருந்தும்
அருவருப்பு தோன்றும்.....
இது காதல் இல்லை.....
வெறி ....
அது அடங்கியதும்
தொலைந்து போகும்.....
காதல் என்ற மாயையில்
மாட்டி கொண்டு
வாழ்க்கை தொலைத்தவர்கள்
எத்தனை பேர்?...
வியாழன், 29 ஜூலை, 2010
ஒற்றுமை
கணவன் மனைவிக்குள்
குடும்ப ஒற்றுமை எப்படி என்பதை கூட
சொல்லி தர வேண்டி இருக்கிறது...
காதலிக்கும் போது கூட
நீ இன்றி நான் இல்லை என்று
அடிக்கடி ஞாபகபடுத்த வேண்டி உள்ளது....
நம்பிக்கை குறைந்த நாட்களில்
நகர்ந்து கொண்டு இருக்கிறோம்....
ஒரு கை ஓசை தராது....
நம்
ஒற்றை கை கொண்டு
தலையில் தான்
அடித்து கொள்ள முடியும்
நம் சமூகத்தை எண்ணி...
தான் பெற்ற துன்பம் பெருக வையகம்...........
உடலுக்கும்
காமத்திற்கும்
சதைகள் மட்டுமே தேவைபடுகிறது...
எதுவும் முதலில் புரிவதில்லை...
ஆண் அருகில் இருக்கும் ஆணை தழுவுகிறான்
பெண் அருகில் இருக்கும் பெண்ணை தழுவுகிறாள்...
தன் மனதை
கட்டு படுத்தமுடியாத
கட்டுப்பாடில்லா மனிதர்கள்
இந்த பந்தத்தை தொடர்கிறார்கள்...
தான் செய்வதே சரி என்று சொல்லி வாழும்
மானநோயாளிகள் பெருகி வருகிறார்கள்....
அதனால் இந்த கூட்டம்
தன்னை ஹோமோக்கள்,
லெஸ்பியன்கள் என்று சொல்லி
தங்களுக்குள்
பெருமை பட்டு கொள்கிறார்கள்...
இளமை தொலைந்த பின்னே
எத்தனை பெரிய
தவறு செய்திருக்கிறோம் என்று
மனதிற்குள்
வருந்துகிறார்கள்...
ஆனாலும்
மனிதன்
தான் பெற்ற துன்பம்
பெருக வையகம் என்று
தவறுகளை
விதைப்பதில்
இன்றும்
சந்தோசம் காண தான் செய்கிறான் .....
இயற்கையை
உடைக்கும் மனிதன்
இழந்த பின்னே உணர்கிறான்
என்ன செய்வது?........
காமம் ஒன்றும் அத்தனை அசிங்கமானதல்ல....
வாய்ப்புகளுக்கு வாய் பிளந்தே கிடக்கும்...
நம் அருகில்...
நமக்குள்...
நம் தொலைவில்....
காமத்தை சிலர்
சுய இன்பத்தில் கட்டுபடுத்துகிறார்கள்...
சிலர் சில்லரைகளில்
சிதறிவிடுகிறார்கள்...
விழிப்புணர்வு கொண்டவர்
திருமணத்தில் திருப்தி கொள்கிறார்கள்...
காமம் ஒன்றும்
அத்தனை அசிங்கமானதல்ல....
இயற்கையானது ....
வடிகால் இல்லாதவர்கள்....
சுயநலவாதிகள்....
சுழ்நிலைவாதிகளால்
காமம் கூட சமூகத்திற்கு
சாக்கடையாய்...
வக்கிரம்
காமமும்
சில நிமிடங்களில்
நம்மை
சாய்த்து போட்டு விடுகிறது....
நம்மை நமக்கே மறக்க செய்கிறது....
காமம் சிந்த படாத இடங்களில்
எல்லாம்
வக்கிரம் தோன்றுகிறது....
என்ன செய்வது ?...
இன்று
சில நிமிட காமத்தை
ரசிக்காமல்
காதல் கூட
தொடர்வதில்லை....
இழப்பீடு
பெண்களில் சிலர்
என் உடல் தரும் அளவு
எங்கள் காதல் உயர்ந்ததாய்
பெருமைபடுகிறார்கள்....
காமம் ஒன்றும்
கிடைக்காத அமிர்தம் அல்ல....
கருவறை விற்று காதல் வாங்காதீர்கள்!!!.......
திருமணத்திற்கு முன்
காமம் பகிர்ந்தவர்களுக்கு
நீதி மன்றங்களில்
இழப்பீடு வேண்டுமானால்
வாங்கி தரலாம்....
அவர்கள்
இழந்தவற்றை
திருப்பி தரமுடியாது....
உடல் வேதனைக்கு மருந்திடலாம்
இன்னும் மனதிற்கு மருந்து வரவில்லையடி....
ஒருவரில் காதல் வாழாது.......
எல்லோரும்
சொல்கிறார்கள்....
நீ விரும்பவில்லை என்றாலும்
நான் உன்னை
நேசித்து கொண்டே இருப்பேன் என்று....
ஆனாலும்
இது நிஜமா?
சாத்தியமா?....
அத்தனை ஒருதலை காதலும்
என்றாவது
ஒரு நாள் காதல் மலரும் என்ற
ஏக்கத்தில் தவம் கிடப்பார்கள்...
காதல்
இருவர் உணர்ந்தால் தான்
உயிர் பெறும்....
ஒருவரில் காதல்
வாழாது.......
உனக்கும் தோன்றும் போது......
வைத்திருக்கும் அன்பின் பெயர்
காதலா?
அப்படி குறைத்து மதிப்பிட முடியவில்லையடி....
இங்கு
சில ரூபாய் நோட்டுகளுக்கு
காதலையும் காமத்தையும்
விற்பனை செய்கிறார்கள்....
நான் நினைத்தால் வினாடிகளில்
பருக முடியும் ....
உன் குரல்
கேட்காமல்
உன்னை பார்க்காமல்
இருக்கமுடியவில்லை ஏனடி?...
இது காதலா?
அதையும் தாண்டிய
பெயரிடபடாத
அன்பா?...
நீ சொல்
என் போல் உனக்கும்
தோன்றும் போது......
உன் குடும்ப வாழ்க்கை
உன் குடும்ப வாழ்க்கையை
என்னோடு
பகிர்ந்து கொள்கிறாய் ...
நீ கலங்கி போக கூடாதென்று
என் கண்ணீர் துடைத்து கொண்டே
சிலநேரம் சிரிக்கிறேன்
உன் குழந்தையின்
விளையாட்டுதனத்தை
என்னிடம் நீ
பகிர்ந்து கொள்ளும்போது....
செவ்வாய், 27 ஜூலை, 2010
வலிக்கிறது....
ஏன் யாரும்
புரிந்து கொள்வதில்லை?.....
நான் நேர்மையை கடைபிடிக்கிறேன்.....
சொந்த வேலை கூட தவிர்த்து
என் வேலையில் உண்மையாய்
உழைக்கிறேன்....
எனக்கு இதற்காக
பரிசு, பணமும் தரவேண்டாம்....
பெருமை படுத்தவும் வேண்டாம்....
ஆனால்....
காயப்படுத்துகிறார்கள்....
கண்கலங்க வைக்கிறார்கள்....
உண்மையாய் இருக்கும்
நாம் இப்படி
சொல்லிக்கொண்டே இருக்கிறோம்....
யாரும்
கேட்க தயாராய் இல்லை....
நீ இல்லை என்றால்
எதுவும் நடக்காதா?என்று
நம் உழைப்பை
தற்பெருமை
என்று கொட்சை படுத்தும் போதே
வலிக்கிறது....
இவர்களுக்காகவா ?
இவர்களுக்கு போய் ?
இனி மேலும்
இவர்களுக்காக ?
ஏதும் செய்ய மனமில்லை....
என்ன சொல்ல?...
பொய்
சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறதென்றால் .........
அங்கே.....
உண்மை இறந்திருக்க வேண்டும்...
அல்லது
கொல்லபட்டிருக்க வேண்டும்.....
என்னை
என்னால் கூட
தேற்றமுடியவில்லை....
என்ன
உலகம்?
என்ன
மனிதர்கள்......
நாகரீகம்
காமத்தையும்
குழப்பி கொள்கிறார்கள்....
காதல்
அன்பு என்ற உணர்வுகளால் பின்னப்பட்டவை...
நாணம் கொண்டவை....
காமம்
எந்த உடலோடும்
பகிர்ந்து கொள்ளும் வேட்கை...
வெட்கம் இல்லாதவை.......
இன்று........
இங்கு.......
காதலை தனியாகவும்
காமத்தை தனியாகவும்
பார்க்கிறார்கள்...
காமமும் காதலும்
இணைந்த
இனிய
இல்லறத்தை
உங்களுக்கு
யாரும் கற்று தர
நினைப்பதில்லை?!!!...
வெறும் சதைகள்
பிண்ணி கொள்வதால் மட்டும்
நாகரீகம் வளர்ந்து விடாது......
கருவறை
உலகம் அறிய வயதில் வேண்டாம்...
பெண் கல்வி .....
அவசியம் வேண்டும்....
பூப்படைந்ததும் திருமணம் வேண்டாம்....
சந்ததிகள் சுமக்க
உடல் வளர்ச்சியும்
சகித்து போகும் மன வளர்ச்சி வரும் வரை
குடும்ப வாழ்க்கை வேண்டாம் ......
இப்படி நூற்றாண்டுகள்
செய்த தவறுகள் திருத்தி
இப்போது தான்
ஒழுங்குபடுத்தி வருகிறோம் .....
இடையில்
காதல் பொய்யில்
காமம் பருகுகிறார்கள்
சுயநலவாதிகள் .......
வடிகால் தேடும் சூழ்நிலைவாதிகள்....
கர்ப்பபை
கருவறை....
நாம் இருந்த இடம்...
காதலுக்காகவும்
காமத்திட்காகவும்
காசுக்காகவும்
விற்பனை செய்கிறோம்....
கடவுளை கண்டதில்லை யாரும்...
கருவறை கண்டிருக்கிறோம்....
கருவறை விற்று
காதல் வாங்காதீர்கள்...
காமத்தை உமிந்து
கழிப்பறை ஆக்காதீ ர்கள்......
வெள்ளி, 23 ஜூலை, 2010
காரியம் சாதிக்க
நம்பிக்கை இல்லாதவன்
தவறான வேலையில் ஈடுபடுகிறான் ....
இயலாமை அவனை
எப்படியாவது வாழ வேண்டும் என்று
இழுத்து செல்கிறது....
தான் காரியம் சாதிக்க மற்றவர்களை பற்றி
தவறாய் சொல்வதும்
வதந்திகள் பரப்புவதுமாய் மாறுகிறான்.......
கோழைகள்
இப்படித்தான்
முகஸ்துதியும்
முதுகில் குத்துபவர்களாகவும் இருப்பார்கள்....
புகழுக்கும்
"தான் உயர்ந்தவன்...
தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும்" என்ற
ஆணவம் கொண்டவன்
முகஸ்துதி செய்யும் கோழைகளிடம்
எளிதாய் ஏமாந்து போகிறான்....
"பொறாமை
பழிவாங்கும் குணம் "
கொண்ட மனிதனால்
வாழவும் முடியாது....
அவன் நட்பு
நம்மை
வாழவும் விடாது....
நான் பார்க்க கூட விரும்பவில்லை
ஐஸ்வர்யா ராய் என்று
பெண்களே இந்த
பெண்ணை புகழ்ந்த காலம் உண்டு...
பெண்களே
பொறாமை கொண்டதும் உண்டு....
அத்தனை அழகி....
அவர் போடும்
உடைகளையும்
அவர் உபயோகிக்கும்
அலங்காரங்களையும்
பகிர்ந்து கொண்டவர்கள் ஏராளம்.....
அவர் பேசும் வார்த்தைகளை
வேதமாய் பின்பற்றியவர்கள் உண்டு...
இன்று....
"உங்களிடம்
உங்களுக்கே பிடிக்காதது என்ன?"என்று
ஐஸ்வர்யாவிடம் கேட்ட கேள்விக்கு பதில்...
"அந்த டீன் ஏஜ் ஐஸ்வர்யாவை தான் பிடிக்கவில்லை "...
"மயக்கும் புன்னகையுடன்
அலங்கோல தலையுடன் காணப்படும்
அப்போதைய ஐஸ்வர்யாவை
நான் பார்க்க கூட விரும்பவில்லை"... என்கிறார்...
ஏன்?
இந்த மாற்றம்!!....
வாழ்க்கை நிர்வாணமாய் வாழ்வதில் இல்லை...
நிம்மதியாய் வாழ்வதில் தான் இருக்கிறது என்பதால்......
கர்வம்
கர்வமாய் வலம்
வந்தவர்கள்
முதுமையில் வாழ்க்கையை
தேடுகிறார்கள்........
அக்கறையான மனிதர்கள்
சொல்வது அறிவுரை அல்ல...
வாழ வழி காட்டுகிறார்கள்....
இன்று அவர்களை
அவமதிப்பதால்
அழிந்து போவது
நம் வாழ்க்கை தான்......
ஆனாலும்
இந்த கர்வம்
இருக்கிறதே
நல்லவற்றை
நம்மிடம் இருந்து
எவ்வளவு எளிதாய்
பிரித்து விடுகிறது?!!!!....
பணம் அவசியம்
பிடிக்கவில்லை என்று
யாரும் இல்லை....
பணம் பிடிக்க வேண்டாம் என்று
யாரும் இருக்க வேண்டாம்....
நம் அன்றாட
அடிப்படை தேவைக்கு
பணம் அவசியம்
அதை மறுக்க முடியாது....
ஆடம்பர ஆசைகளுக்காக
எத்தனை இளையோர்கள்கள்
தங்கள் இளமையை
தொலைக்கிறார்கள்?.....
நாம் உழைத்து
நாமே அனுபவித்து
வாழ வேண்டும்
என்றே போகிறார்கள் ....
அப்படி
நம் முன்னோர்கள்
நினைத்திருந்தால்?!!!!....
பணம்
இன்று
எதற்கும் தயாராகி விட்டார்கள்....
வாழ்க்கை முடிவதற்குள்
தன்னால் முடிந்த வரை
ஆசைகள் அனைத்தையும்
அடைந்து விட துடிக்கிறார்கள் ...
இறப்பிற்கு பின் ஒரு நரகம்
உண்டு என்றாலும்
இருக்கட்டும்....
இன்றைய இன்பம் போதும் என்கிறார்கள் ...
இங்கு
தவறு ....
தெரிந்தே செய்கிறார்கள்....
எதற்கும்
தயக்கப்படுவதும் இல்லை....
வெட்கப்படுவதும் இல்லை....
பணம்
எத்தனையோ பேரழிவுகளுக்கு
காரணமாக
அமைந்திருக்கலாம்...
ஆனால்
இன்று
மனித இனத்தையே
அழித்து கொண்டிருக்கிறது...
மனிதன்
கை கூப்பி வணங்குவதும்
கை விரித்து
இறைவனை
தொழுவது கூட
சுயநலத்துகாய் போய்விட்டது.....
பூமி பிளந்து
பணம் கொட்டாத
என்று
வாய் பிளந்து
கிடக்கும்
மனிதர்கள் ஏராளம்...
உன் நிலை சொல்லடி?.....
சொல்ல முடியவில்லை ......
உன்னை விட்டு
பிரிந்து விடுவேனோ
என்ற பயம்
என்னை
உறங்க விடாமல் செய்கிறது....
ஏனடி
இத்தனை அவஸ்தைகள்....
உன்னிடம்
என் அன்பை புரிய வைக்காமல்
தவிப்பது கொடுமையாய்
இருக்குதடி...
உன் நிலை சொல்லடி?.....
வியாழன், 22 ஜூலை, 2010
வேற்று உலகில் நட்பை தேடி அலைகிறோம் ....
மனிதனாய்
நடத்த தெரியாத
நாம் ....
வேற்று கிரக
மனிதர்களை பேரண்டத்தில்
தேடுகிறோம்......
வேற்று உலகில்
நட்பை தேடி அலைகிறோம் ....
இனம் ,மதம் ,நாடு என்று
நம்மோடு திரியும் மனிதர்களை
தின்னும் நம்மை
வேற்று கிரக வாசி தாக்கி
கூறு போட்டு
ஒரு நாள் பாடம் கற்று தருவான்....
பூமியில் இருக்கும்
முட்டாள்
இனம்
நம்மை அழித்து காட்டி....
இதை எழுதியவன் யாரென்று தெரியவில்லையடி.....
தகுதிகள் இருப்பதில்லை....
தகுதிகள் வந்த பின்பு
முதல் காதல் இருப்பதில்லை....
இதை
எழுதியவன் யாரென்று
தெரியவில்லையடி.....
ஆனாலும்
காதல்
எத்தனை
ஆழமானது ?.....
எப்படிஎல்லாம்
எத்தனை
சிந்திக்க வைக்கிறது?....
காதல் உன் மேல் வரவில்லையடா ............
என்னை பற்றி நினைப்பதும்
என்னோடு பேசுவதும்
என்னோடு வாழ்வதும்
எனக்காக நீ காத்திருப்பதும்
இப்படி என்னையே சுற்றி
உன் வாழ்க்கை பயணம்
இருப்பது ஏனடா?.....
இணையாத தண்டவாளம்
நம் வாழ்க்கை.....
நான் உன்னை நினைப்பதே இல்லை
தெரியுமா?....
காதல் உன் மேல் வரவில்லையடா ...
இப்படியே சொல்லி சொல்லி
உன்னை வேறு பாதையில்
பயணிக்க வைத்த நான்.....
இன்று
உன்னோடு பயணிக்க காத்திருக்கிறேன்
நெடுநாட்களாய்....
நீ வந்து என்னை அழைத்து செல்லும்
காதல் புகை வண்டிக்காக....
வழி தெரியாத பாதையில்
வலிகளோடு
உன் வரவுக்காக...
அத்தனையும் பொய்
என் வாழ்க்கையில்
வரும் போதெல்லாம்
உன் நியாபகங்கள்....
நீ என்னை விட்டு
போனபின்னும்
இன்னும் நான் உயிரோடு தான்
வாழ்கிறேன்.....
உன்னிடம் நான் எத்தனையோ முறை
சொல்லி இருப்பேன்
நீ இல்லை என்றால்
மறுகணம் இறந்து போவேன் என்று......
அத்தனையும் பொய் என்று சொல்ல முடியாது...
உண்மையில்
நினைவுகளால் நிஜம் தொலைத்தேன் ....
இன்று
சுக படுகிறேன் நீ இல்லாமல் கூட.....
வாழ்க்கை வாழ தான் என்று
தோல்விகள் தான்
சொல்லித்தருகின்றன....
இன்று
நான் நடந்ததுண்டு....
உன்னை விட்டு விலக கூட
நினைத்ததுண்டு....
உன் காதல் எனக்கு ஆச்சரியமாகவும்
அவசியம் இல்லாதவைகளாய் கூட
தோன்றியது
அத்தனையும் இழந்து நிற்கும் போது தான்
தெரிகிறது....
நீ எனக்கு எத்தனை
முக்கியமானவன் என்று....
இன்று என்னை பார்த்து
காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல் போதும்....
உன் மடி சாய்ந்து உயிர் தருகிறேன் .....
காதலுக்கு இலக்கணம்
காதல் கொள்ள நினைத்தவன் நான் .....
உன்னை காதலித்த பின்பு
நிறையவே நியாயப்படுத்துகிறேன்
உன் இம்சைகளை....
ஒரு முறை நீ
காயப்படுத்திய போது
வலித்த
இதயம்....
இன்று சண்டைகளும்
காயங்களும்
இல்லாத
காதல் நிலைப்பதில்லை
என்று
காதலுக்கு இலக்கணம் சொல்கிறது...........
சிக்கிரம் சொல்.....
மறுத்த பின்புமா
காதல் செய்கிறாய்? என்று
ஆச்சரியமாக என்னை கேட்டாய்.. .
நீ என்னை வெறுத்த போதே உன்னை
காதல் செய்தேனடி...
இன்று
நீயும் என்னை காதல் செய்கிறாய் ....
என்னிடம் சொல்லாவிட்டாலும்
உன்னிடமாவது சொல்....
உனக்கு தான்
எதுவும் தாமதமாய் தான் புரியும் ?.....
சிக்கிரம் சொல்.....
உன்னிடம்
சிலநிமிடமாவது
நான்
வாழ்வது சுகம்....
ஒரு ஜென்மம் தாண்டியும் என்னோடு நீ ........
பல நூற்றாண்டு வாழ்ந்த சுகம்.....
உன்னுடைய ஒற்றை பார்வை....
உன்னுடைய ஒற்றை புன்னகை...
உன்னுடைய ஒற்றை வார்த்தை...
அத்தனையும் என் ஒற்றை காதல்
ஒருதலை காதலில்
சுகமாய்
ஒரு ஜென்மம் தாண்டியும்
என்னோடு நீ ........
சந்தேகம் ........
இப்படி ஒன்று யார் மீதாவது
உங்களுக்கு இருந்தால்
காதல் மட்டும் இல்லை...
நட்பு கூட வைத்து கொள்ளாதீர்........
சந்தேக நட்பென்று நிரபராதிக்கு
தெரிந்தால்
அவனுக்கு
அதை விட
தண்டனை
உலகில் இல்லை....
ரயில் சிநேகம்....
நம் சந்திப்பு என்றேன்........
அப்படியா?.....
என்று சொல்லி போனாய்......
நெடு நாட்களுக்கு பின்
சந்தித்த பின் தான் தெரிந்தது.....
ரயில் சிநேகம் என்றால்
என்ன வென்றே தெரியாது என்றாய்....
நீ என்னோடு பழகிய
அந்த சில நாட்களை
இன்னும் மரக்காதவனாக நான்.....
சில மணி நேர வாழ்கை பயணத்தில்
உன் நிறுத்தம் வந்தவுடன்
என்னை விட்டு இறங்கி போன
அந்த நிமிடங்கள் என்றேன் ........
இன்னும் அதே நிருத்தத்திலா இருக்கிறாய்
என்கிறாய்.....
நான் என்ன சொல்ல
என் காதலிடம்?.......
எந்த உறவு நிலையானது ?
எது உறவு ?
எந்த உறவு நிலையானது ?
தெரியவில்லை....
நம் நட்பு நிலைக்குமா?
இல்லை
விலகி போகுமோ ?...
தெரியவில்லை...
நம் விதியை கடவுள்
என்றோ எழுதிவைத்துவிட்டான்........
உலகம் ஒரு நாடக மேடை
அதில் நாம் வெறும் நடிகர்கள்....
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் .........
இப்படி சொன்னதெல்லாம் நிஜமோ?.....
நீ பேசாமல் இருந்த
ஒரு நாள்
வலி..........
எனக்கு
உலகே
வெறுத்து போன
முதல் நாள் மட்டும் இல்லை .....
இது கடைசி நாளும் கூட..............
என் வாழ்க்கை
விதியை
நானே எழுத நினைப்பதால் தான்
அடிக்கடி தோற்றுபோய் அழுகிறேன்........
எனக்காய் ஒரு வரம் வாங்கி கொடு ....
என் கண்மணியே .....
கண்ணீர் இல்லாத
ஒரு நாள் வேண்டும்...
என் ஆன்மாவிற்கு
அழுவதற்கு கூட இனி
கண்ணீர் இல்லை....
வலிகளால் வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி.....
அடுத்த ஜென்மம்வரை
நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம்....
நம் முன்ஜென்ம பாவத்தின் தண்டனை
என்கிறார்கள்....
தண்டனை மட்டும் தாமதம்
என்பதால் தான்....
காதல் கூட.......
அடுத்த ஜென்மம்வரை
காத்திருக்க சொல்கிறதா?.....
நீ வருத்தம் கொள்வாய்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
என்பதை மறைத்து வாழ்கிறேன் .........
ஆனாலும் கண்ணம்மா....
என் அன்பை சொல்லமுடியாமல் தவிக்கும் போது
எந்நாளும் என்னை தேற்றமுடியவில்லையடி ...............
உண்மை அன்பு என்றாலே
இப்படிதானோ?.....
காதலுக்காக அலட்டிகொள்ளாமல்
பிரக்டிகல்லாக இருப்பது என்பதில்
காதல் இல்லை என்பது நிஜமோ ?....
விதி இருந்தால் நாம் இணைவோம்
என்பதில் காதல் இல்லையடி....
அப்புறம் இணைவதில் என்ன பயன்?....
நீ யாரையாவது
நேசித்து சொல்...
அப்போதாவது
என் காதல் உனக்கு புரியட்டும்....
ஏனடி வலிக்கிறது
நீ சொன்னால் என் இதயம் ஏனடி வலிக்கிறது?....
உன்னால் இரவுகளை தொலைக்கும் எனக்கு
எப்போது புரியும்?
கண்கள் திறந்து உன் கனவுகளை
நான் காண்பது இன்னும் எத்தனை நாட்கள்?....
யாரையோ காதலித்து நீ
அழுவதும் சிரிப்பதுமாக வாழ்கிறாய்...
உன் வாழ்க்கையில் நான்
ஆட்சரிய குறியாய் ஏனடி?!!!
என் காதல் தோழனே
என்னை உணர்வாய்....
நான் மவுனமான பின்பு தான்
என் பேச்சை தேடுவாய்...-என்று
நீ சொன்ன போதெல்லாம்
உதாசீன படுத்திய துண்டு ....
வருந்தி திருந்தி
உன்னை காண துடிக்கிறேன்....
எங்கே சென்றாய்
என் காதல் தோழனே .....
கண் கெட்ட பிறகு
நான் நேரம் ஒதுக்கினேன் .....
உனக்கு மட்டும்
நான் நேரம் ஒதுக்க வில்லை....
ஏனடா.....
நீ ஒதுங்கி போன பின்பு
நேரம் போகாமல் தவிக்கிறேன்....
கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம்.....
காதல்
என்னை நீ புரிந்து கொள்ளவில்லை என்கிறேன் ....
நான் நெருங்கும் போது நீ விலகி ...
நீ நெருங்கும் போது நான் விலகி....
உனக்கு நேரம் இருக்கும் போது நான் நேரமின்றி ...
எனக்கு நேரம் இருக்கும் போது நீ நேரமின்றி ....
நாம் பிரிவதற்கு தான் இப்படி என்று
நினைத்தேன் .......
காதல்
இப்படி தான் இருக்குமாம் ...
காதலித்தவர்கள் சொல்கிறார்கள்....
கண்முடி தனமாய் வாழ்ந்த நான்
நேசிக்கும் போதெல்லாம்
நான் அவனை
கற்பனையாய்
காதலித்து வாழ்ந்தேன்....
எனக்கு புரியவில்லையடா.....
உன் காதல்......
கண்முடி தனமாய் வாழ்ந்த நான்
விழித்து பார்த்தேன்....
யாரும் இல்லையடா
இன்று எனக்காக......
விழி ஓரம்
கண்ணீர் சுரக்குதடா
உன் வருகைக்காக......
புரிந்தது...
நிறைய
கருத்து வேறுபாடுகள்....
நாம் பிரிந்து போவதே
நலம் என்று
நானும் நீயும்
ஒப்பந்தம் போட்டு பிரிந்தோம்
அதி மேதாவிகளாய்....
பின்பு தான்
புரிந்தது
இந்த உலகில்
ஆணும் ஆணும் ,
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வது
எப்படி
இயற்கைக்கு மாறானதோ
அது போல் தான்
நேர் ,எதிர்
இணைவது இல்லறம்
என்கிறார்கள்
அனுபவித்தவர்கள்....
இன்று காத்திருக்கிறோம்....
உன் அழைப்பிற்காக நானும்
என் அழைப்பிற்காக நீயும் ...
உன் இம்சை
காதல் கொள்ள நினைத்தவன் நான் .....
உன்னை காதலித்த பின்பு
நிறையவே நியாயப்படுத்துகிறேன்
உன் இம்சைகளை....
ஒரு முறை நீ
காயப்படுத்திய போது
வலித்த
இதயம்....
இன்று சண்டைகளும்
காயங்களும்
இல்லாத
காதல் நிலைப்பதில்லை
என்று
காதலுக்கு இலக்கணம் சொல்கிறது...........
உன்னிடம் வாழ்வது சுகம்......
மறுத்த பின்புமா
காதல் செய்கிறாய்? என்று
ஆச்சரியமாக என்னை கேட்டாய்.. .
நீ என்னை வெறுத்த போதே உன்னை
காதல் செய்தேனடி...
இன்று
நீயும் என்னை காதல் செய்கிறாய் ....
என்னிடம் சொல்லாவிட்டாலும்
உன்னிடமாவது சொல்....
உனக்கு தான்
எதுவும் தாமதமாய்
தான் புரியும் ?.....
சிக்கிரம் சொல்.....
உன்னிடம்
சிலநிமிடமாவது
நான்
வாழ்வது சுகம்....
உன் விழிகளில் பார்....
பொழுதுகளில்....
ஒரு நிமிடமாவது
வந்து போகிறேன் உன்னிடம் ...
ஏனடி இன்னும்
மறுக்கிறாய்
உன் மனதிடம்
என்னை
காதல் செய்யவில்லை என்று....
உன் விழிகளில் பார்
என் பிரிவில்
சொல்லும்
கலங்கியபடி
உன் காதல் நான் என்று.....
போதும் காதல்...........
எனக்கும்
காதல் தந்த கடவுளே !
நீ தந்தவள் என்றே
நான் அளவில்லா காதல் செய்தேன் ....
என் அன்பை கூட
உணரமுடியவில்லை அவளால்.......
இல்லாத காதலை
இனி எந்த ஜென்மமும்
தந்து விடாதே ........
சிலுவை இல்
சிந்த கூட
குருதி இல்லை......
கெட்டவன் மட்டுமே
இங்கு வெற்றி பெறுகிறான் .......
அவனோடு போட்டி போட முடியவில்லை....
அதை விட
போட்டி போட
எனக்கு விருப்பமும் இல்லை....
மறைப்பது நீ..... உன் மனதல்ல....
என் காதலையும்
புரியாதவள் அல்ல
நீ....
என்னை
நீ காதலிப்பதும்
உண்மை....
ஆனாலும்
மறைப்பது நீ.....
உன் மனதல்ல....
உன்னை நீ திட்டும் போதெல்லாம்
நான் உன்னோடு....
மறைத்து வைப்பது
நிரந்தரம் இல்லை....
நான் எத்தனை முட்டாள்....
காதலிப்பதால்
இன்னொரு பெண்ணிடம்
பேசினால் கற்பே போய் விடும்
என்று பேசியது இல்லை யாரிடமும் நான்...
ஆறுதல் சொல்ல
இன்று
தாய் கூட
இல்லாதவனாய் ..........
திருவிழாவில்
தொலைந்த குழந்தை போல்
தேம்பி அழுதபடி....
நான் எத்தனை முட்டாள்....
செம்மொழி
செம்மொழி
கொண்டாடுகிறது இன்று.....
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பு
ஊமை மொழியாய் பேசி திரிந்த நான்
உன்னை பார்த்த பின்பு
என் காதல் சொல்ல
வாய் திறந்தேனடி...
அன்று தோன்றியதடி
இந்த தமிழ்மொழி....
என் ஆசை தமிழாட்சியே!
நீ பிறந்தது
செம்மொழிக்கும் பழமையாய்.....
நம் காதல்
அத்தனை தொன்மையானதடி....
உயிர் தருகிறேன்
நான் நடந்ததுண்டு....
உன்னை விட்டு விலக கூட
நினைத்ததுண்டு....
உன் காதல் எனக்கு ஆச்சரியமாகவும்
அவசியம் இல்லாதவைகளாய் கூட
தோன்றியது
அத்தனையும் இழந்து நிற்கும் போது தான்
தெரிகிறது....
நீ எனக்கு எத்தனை
முக்கியமானவன் என்று....
இன்று என்னை பார்த்து
காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல் போதும்....
உன் மடி சாய்ந்து உயிர் தருகிறேன் .....
வாழ்க்கை வாழ தான்
என் வாழ்க்கையில்
வரும் போதெல்லாம்
உன் நியாபகங்கள்....
நீ என்னை விட்டு
போனபின்னும்
இன்னும் நான் உயிரோடு தான்
வாழ்கிறேன்.....
உன்னிடம் நான் எத்தனையோ முறை
சொல்லி இருப்பேன்
நீ இல்லை என்றால்
மறுகணம் இறந்து போவேன் என்று......
அத்தனையும் பொய் என்று சொல்ல முடியாது...
உண்மையில்
நினைவுகளால் நிஜம் தொலைத்தேன் ....
இன்று
சுக படுகிறேன் நீ இல்லாமல் கூட.....
வாழ்க்கை வாழ தான் என்று
தோல்விகள் தான்
சொல்லித்தருகின்றன....
உன் இதயம்
நீ சொன்னால் என் இதயம் ஏனடி வலிக்கிறது?....
உன்னால் இரவுகளை தொலைக்கும் எனக்கு
எப்போது புரியும்?
கண்கள் திறந்து உன் கனவுகளை
நான் காண்பது இன்னும் எத்தனை நாட்கள்?....
யாரையோ காதலித்து நீ
அழுவதும் சிரிப்பதுமாக வாழ்கிறாய்...
உன் வாழ்க்கையில் நான்
ஆட்சரிய குறியாய் ஏனடி?!!!
மரங்கள்
சுவாசிக்க இயற்கை தந்த இதயம்
மரங்கள்...
தன்னை
ஆறறிவு கடவுளாய்
பறைசாற்றும்
மனிதனுக்கு புரிவதும் இல்லை...
தெரிவதும் இல்லை...
காக்கை கூட
தன் எச்சங்களால்
பூமியில் அங்கங்கு
மரங்களை விதைப்பது...
பூமி
எத்தனையோ கோடான கோடி உயிரினங்கள்....
அத்தனையும் அன்றாடம்
அதன் செயல்களை செய்து கொண்டு இருக்கின்றன...
உலகை திருத்தும்
அவதாரமாய் காட்டி கொள்ளும்
ஆறறிவு ஆணவம் கொண்ட மனிதன்
இயற்கையை வெல்ல முயல்கிறான்.....
தன் உயிரையே காப்பற்றி கொள்ள முடியாத
மனிதன்
பல நூற்றண்டுகளாக இயற்கையிடம்
தோற்று போகிறான் ....
தன்னை கடவுள் என்று பிரகடனப்படுத்தி கொண்டவனும்
இன்று இல்லை....
தன்னை வெகுளி என்று சொன்னவனும்
இன்று இல்லை ...
இயற்கையை உடைத்து
இயற்கையை வென்றால்
விரைவில்
வெற்று உலகத்தை தான் மனிதன்
வேடிக்கை பார்க்க வேண்டும்......
கடவுள்
அவனை தண்டிக்க என்னால் முடியவில்லை....
ஆனால்
சபிக்க முடியும்....
நானாக ஒரு முறை அவன் பிறந்து
அழவேண்டும்.....
விட்டு கொடுத்து வாழ்வதோ சகித்து கொண்டு வாழ்வதோ வாழ்க்கை அல்ல...
வாழ்ந்து விட வேண்டும் என்ற
போதெல்லாம் தோற்று போகிறேன் நான் ...............
நான் எடுத்த முடிவுகள் தான்
காரணம் என்று
விதி வழி சென்றேன்
அதிலும் தோற்றுப் போனேன்.......
விருப்பதிட்கு மாறான
நிகழ்வுகளை தோல்வி என்கிறோம்....
வாழ்க்கை வெறுக்கும் போதே
தெரிகிறது வாழ்க்கை
என்று ஒன்றும் இல்லை என்பது....
விட்டு கொடுத்து வாழ்வதோ
சகித்து கொண்டு வாழ்வதோ வாழ்க்கை அல்ல...
நடப்பதை அப்படியே ஏற்று கொண்டு
வாழ்ந்தால் தான் வாழ்க்கை.....
அது கடவுளின் கட்டளையோ ?.......
மதியை வெல்லும் விதியோ?........
தெரியவில்லை எனக்கு....
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...............
நாம்
நாம் கற்று கொள்ள விரும்புவதில்லை....
நாம் யாரையும் புரிந்து கொள்வதில்லை....
நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லை என்று வருந்துகிறோம்...
நம் கருத்தை மற்றவர் ஏற்றுகொள்ள கட்டாய படுத்துகிறோம்...
மற்றவர் கருத்தை கேட்பதை கூட நாம் விரும்புவதில்லை...
நாம் மாற மாட்டோம்....
மற்றவர்களை மாற சொல்கிறோம்....
இதை விட நம் கவலைக்கு
தோல்விக்கு
வேறு காரணம் தேவையா?...
உண்மை
சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறதென்றால் .........
அங்கே.....
உண்மை இறந்திருக்க வேண்டும்...
அல்லது
கொல்லபட்டிருக்க வேண்டும்.....
தனிமை
தனி சுகம்.....
ஆம்....
தனிமை விரும்பி நான் .....
ஏன்?.....
உன்னோடு பேச
உன்னோடு கோபப்பட...
உன்னோடு சிரிக்க
உன்னோடு வெட்கப்பட...
உன்னோடு காதல் கொள்ள
உன்னிடம் கூட மறைக்கும்
காமம் திறக்க...
இது மட்டுமா?..
தனி அறையில்
முழுதாய்
என்னையே நான் பார்க்கிறேன்...
என்னையே நான் ரசிக்கிறேன்...
என்னையே நான் வெறுக்கிறேன்...
என்னையே நான் நேசிக்கிறேன்...
சில நேரம் ஆடைகளோடு
வெட்கபடுகிறேன்...
சில நேரம் வெட்கபடாமல் ஆடைகளின்றி ......
நானா இப்படி?
நான் மட்டும் இப்படியா?
நானும் இப்படி தானா?...
எனக்குள் எத்தனை கேள்வி?...
என்னையே நான்
நிர்வாணப்படுத்தி
பார்த்த பின்பு தான்
தெரிகிறது....
நான் எத்தனை அழகு ?
நான் எத்தனை அசிங்கம் ?
என்பது....
தனிமை
சிறையல்ல...
தனிமை சுதந்திரத்தில்
என்னை சுத்த படுத்தி கொள்கிறேன் ....
சுத்திகரித்து கொள்கிறேன்....
என்னை எனக்கு புரிய வைக்கும்
தனிமை பிடிக்கும்....
அதற்காக
நீயே இல்லாத
தனிமை பிடிக்காது....