தனிமை
தனி சுகம்.....
ஆம்....
தனிமை விரும்பி நான் .....
ஏன்?.....
உன்னோடு பேச
உன்னோடு கோபப்பட...
உன்னோடு சிரிக்க
உன்னோடு வெட்கப்பட...
உன்னோடு காதல் கொள்ள
உன்னிடம் கூட மறைக்கும்
காமம் திறக்க...
இது மட்டுமா?..
தனி அறையில்
முழுதாய்
என்னையே நான் பார்க்கிறேன்...
என்னையே நான் ரசிக்கிறேன்...
என்னையே நான் வெறுக்கிறேன்...
என்னையே நான் நேசிக்கிறேன்...
சில நேரம் ஆடைகளோடு
வெட்கபடுகிறேன்...
சில நேரம் வெட்கபடாமல் ஆடைகளின்றி ......
நானா இப்படி?
நான் மட்டும் இப்படியா?
நானும் இப்படி தானா?...
எனக்குள் எத்தனை கேள்வி?...
என்னையே நான்
நிர்வாணப்படுத்தி
பார்த்த பின்பு தான்
தெரிகிறது....
நான் எத்தனை அழகு ?
நான் எத்தனை அசிங்கம் ?
என்பது....
தனிமை
சிறையல்ல...
தனிமை சுதந்திரத்தில்
என்னை சுத்த படுத்தி கொள்கிறேன் ....
சுத்திகரித்து கொள்கிறேன்....
என்னை எனக்கு புரிய வைக்கும்
தனிமை பிடிக்கும்....
அதற்காக
நீயே இல்லாத
தனிமை பிடிக்காது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக