என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

உயிர் தருகிறேன்

உன் காதல் புரிந்தும் புரியாதவளாக
நான் நடந்ததுண்டு....
உன்னை விட்டு விலக கூட
நினைத்ததுண்டு....
உன் காதல் எனக்கு ஆச்சரியமாகவும்
அவசியம் இல்லாதவைகளாய் கூட
தோன்றியது
அத்தனையும் இழந்து நிற்கும் போது தான்
தெரிகிறது....
நீ எனக்கு எத்தனை
முக்கியமானவன் என்று....
இன்று என்னை பார்த்து
காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல் போதும்....
உன் மடி சாய்ந்து  உயிர் தருகிறேன் .....

கருத்துகள் இல்லை: