குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?....
கடவுளால் மனிதன் படைக்கப்பட்டானா?...
நெடு நாட்களாய்
இந்த விவாதம் உண்டு....
அதிகமாய் சிந்திக்க ஆரம்பித்த மனிதன்
ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கினான் .....
இன்றும் ஆராய்ச்சியில்
இருக்கிறான் .....
குரங்கிலிருந்து மனிதன்
வளர்ச்சி பெற்றான் என்பதற்கு
ஆதாரங்கள் இன்னும் தேடுகிறார்கள்...
மனிதனை படைத்தது கடவுள் தான் என்று பலர் வாதாடுகிறார்கள்.....
சில ஆதாரங்கள் இருவரும் சொல்கிறார்கள்....
அனைத்தும் நிரூபிக்க முடியாத ஆதாரங்கள்....
இன்று வரை முடிவான பதில் இல்லை....
இனியும் கண்டுபிடிக்க முடியாது....
ஏன்?....
குறிப்பிட்ட வயதுகள் மட்டுமே
இந்த பூமியில் உயிர் இனங்கள் வாழ முடியும் .....
இது நிரூபிக்கபட்டவை....
இதற்கு ஆராய்ச்சி தேவையா?....
ஒரு அறிவியல் மேதையாலும்
ஆன்மிக மேதையாலும்
சொல்ல முடியாத விசயம்....
இறந்த பின்
எங்கே போகிறது உயிர்?...
இன்று வரை
தன்னை கடவுள் என்று சொல்லி கொண்டவனாலும்...
அனைத்தும் அறிவியல் தான் என்று சொல்லி கொண்ட
அறிவியல் மேதையாலும்
முதலில் தன் உயிரை
காப்பற்றி கொள்ள ஏன் முடியவில்லை?....
எந்த மனிதனாலும்
சொல்ல முடியாது....
ஏன்?
ஏன்?
நாம் அடிக்கடி மறந்து போகிறோம்....
நாம் சாதாரண மனிதர்கள் என்பதை....
விண்வெளியில் போய்
கடவுளை தேடுவதும்....
தவ வலிமையால்
கண்டு பிடிக்கிறேன் என்றும்
இன்னுமெத்தனை மனிதர்கள் தோன்றுவார்கள்
என்று தெரியவில்லை....
ஆனால்
நாம் யாரோ ஒருத்தரால் படைக்க பட்டு விட்டோம்
மீண்டும் புதைக்க பட்டு விடுகிறோம்....
படைக்க பட்ட நாம்
இங்கிருந்து எப்படி
மனித வளத்தை ஒழுங்குபடுத்தி
மனிதநேயத்தோடு வாழ்வதை பழகி கொள்ளாமல்....
கடவுளை கண்டுபிடிக்க தவமிருக்கிறார்களாம் ?
தன்னை ஆன்மீகவாதி என்றும்
சித்தன் என்றும் சொல்லி கொள்வதில்
பெருமை கொள்கிறார்கள்.....
உண்மையான ஆன்மீகமும்
அறிவியலும்
கிடைத்த பூமியையும்
அருகில் இருக்கும் மனிதர்களையும்
அழிக்காமல் இருக்க கற்று கொடுத்தால்
இன்னும் கொஞ்ச நாள்
உயிர் இனங்கள்
சுவாசிக்கும்
தூய்மையாய்.....
மீண்டும்...
ஒன்றை மறந்து விடாதீர்கள்....
நாம்
சாதாரண மனிதர்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக