என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காப்பற்ற நினைப்பது....

உன் பெயரை உச்சரிக்க
இன்னொருவன் வந்தவுடன்
என் பெயர் கூட
மறந்தவளாய் நீ...

உன் இதழ்களை
இன்னொருவன் பருகியவுடன்...
என் எச்சில் பட்ட
பாத்திரதிற்காக  
ஏங்கிய
உன் உதடுகள் மொவுனமாய்...

என் முகம் பார்க்க ஏங்கிய
உன்  கண்கள்
பாதையோரம்
என்னை பார்த்தும்
என் மேல் பார்வை படாதவளாய்
பதுங்கி நீ...

எனக்கு நீ
உனக்கு நான் மட்டும் - இப்படி
பொய்யாய்
உளறிய நாட்கள்
பொய் தானே?...

இன்று நீ
காப்பற்ற நினைப்பது
நீ தொலைத்த கற்பையா?
காதலையா?....

கருத்துகள் இல்லை: