மனதிற்கும் உடம்பிற்கும்
யுத்தம் எப்போதும் உண்டு...
சில காரியம் உடம்பு செய்ய சொல்லும்
மனம் தடுக்கும்....
மனது செய்ய சொல்லும் போது
உடம்பு மறுக்கும்...
உடம்பு கெஞ்சம் ....
"இந்த ஒரு முறை மட்டும் "என்ற போது
மனசு தடுக்கும்...
தண்டனை பெறும் போது
"நான் தான் அப்போதே சொன்னேன் கேட்டியா ?"என்று
மனசு தாண்டவம் ஆடும்...
"சரி ...
நான் தப்பு பண்ணிடேன்
மன்னித்து கொள்...
அப்புறம் திட்டு....
இப்ப தப்பிக்க வலி சொல்லு"....
இப்படி எல்லோர்
மனதுக்கும் மனசாட்சிக்கும்
உள்ளுக்குள்
ஒரு வாதம் பிறக்கும்....
இதனை மனசாட்சி என்றும்
சில நேரம்
கடவுள் என்றும் கூட சொல்கிறோம்.....
நாம் தவறு செய்தாலும்
தண்டனையில் இருந்து
காப்பற்ற வேண்டும் என்று சொல்லுகிற
சாதாரண மனிதர்கள் தானே நாம்...
காப்பாற்றியவர்களை கடவுள் என்று வர்ணிப்போம்
காப்பாற்ற வேண்டுதல்கள் வேறு...
தப்பித்த பின்
மீண்டும் தவறுகளோடு..........
பெறும் பாலான மனிதர்கள்
சூழ்நிலையால்
அநாகரீகமனவர்களாய்
மாறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது ...
நம்மை பற்றி சொல்ல...
நம் தவறை சுட்டிகாட்ட
நம் மேல் அக்கறை கொள்ள...
சுய விமர்சனம் செய்வதில்
நம் மனசாட்சியை விட
சரியான நண்பன்...
நலம் விரும்பி....
வேறு யாருமில்லை....
"பெரிய மனசாட்சி"
மனசாட்சி என்ற ஒன்று
இல்லாத மனிதர்கள்
எத்தனை பேர் என்று
அடுத்தவர்களை
சொல்லி விட்டு
நீங்கள் தப்பிக்க முயலாதீர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக