என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என் மின்னஞ்சலை ...

உன்னிடம் 
கோபமாய் இருப்பதாய்
நான் இருந்தாலும்
உன்
ஒரு குருஞ்செய்திக்காய்
கைபேசியை
கையிலே எடுத்து செல்கிறேன்
குளிக்க போகும் போது கூட....

என் மின்னஞ்சலை
திறக்கும் போது
கண்முடி இறைவனிடம்  வேண்டுகிறேன்
உன்
ஒரு வெற்று அஞ்சல் வந்தால்
கூட போதுமென்று...

காரணம் சொல்லாமல்......

உன்னை
பிரியும் போதெல்லாம்
உன்னிடம்
சொல்லாமல் போன வார்த்தைகள்
எனக்கு கவிதையாய்  தோணுதடா..
ஆம்....
என்னை
உன் பிரிவு கூட
எப்படி மாற்றுகிறது பார்...

உன்னை நிரந்தரமாய்
பிரிய போவதாய் 
நினைத்தாலே
நெஞ்சம் வெடிக்குதடா...
நீ மட்டும் ஏனடா
என்னை காதலிக்க மறுக்கிறாய்
காரணம் சொல்லாமல்......


கவிதையாய் ஆனதில்....

உன்னிடம் பேச
நினைத்தவற்றை
ஒரு காகிதத்தில் எழுதி வைத்தேன்
மனது வலிக்குதடா..
உன்னிடம் சேராமல் போனதில்...
இன்று
அத்தனை சுகமாய்
இருக்குதடா
அந்த வார்த்தைகள்
கவிதையாய் ஆனதில்....

காதலில் நிறைய உண்டு....

ஏங்கி ஏங்கி
காதலித்த
நம் எட்டு வருட காதலை
ஏழே நிமிடங்களில்
எடுத்து சென்றவளே...
நான் அழுத நாட்களை
உன்னிடம் கூட
சொல்ல முடியவில்லை...
எங்கிருக்கிறாய்?...
நீ சென்ற பின்
நான் எப்படி
நீயாய் மாறி
உன்னை
தேடுகிறேன் தெரியுமா?....
சொல்ல 
முடிவது மட்டும் காதலல்ல...
சொல்லாதது
காதலில் நிறைய உண்டு....

எச்சம் தானடி ...

நம் உதடுகள்
உரசி கொண்டதால்..
எச்சில்
நம்மை குடித்து விட்டது....
மிட்சமாய் இருக்கும்
எச்சம் தானடி
நம் காதல்....

உன் காதல்...

உன்
கண்களை கொண்டு
என் காதலை எழுதுகிறேன்..
கவிதையாய்..

உன் கண்களும்..
என் காதலும்...

பெயர் தான் நட்பு...

இளமையில்
காதல் வந்தால்
சொல்வதற்கு ஈகோ...

காதல் கிடைக்குமா ?
கிடைக்காதா? என்ற ஏக்கம்...

காதல்
திருமணத்தில்
முடியுமா? என்ற எதிர்பார்ப்பு...

காதலித்தவர்
ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம்...

தோல்வி
என்றால் விரக்தி...

சமுதாயத்திற்கு
தெரிந்தால் அவமானம்..

இத்தனையும் இல்லாத
அன்பிற்கு பெயர் தான் நட்பு...

காமம் இல்லா
காதல் தான் நட்பு..
ஆம்...
நட்பும்
ஒரு வகை காதல்...

ஏன் தெரியுமா?...

நீ
கவிதை கேட்டால்
ஏதும்
எழுதாத
வெள்ளை காகிதத்தை
மடித்து கொடுத்தேன்....
ஏன் தெரியுமா?...
பெண்ணே!...
நீ வெள்ளை காகிதம்...
நான் வெற்று காகிதம்...

ஏமாற்றியது ஏனடி?....

மனம்
பலவீனமான நேரம்
மதவாதியும் தீவிரவாதியும் தான்
மூளை சலவை செய்து
மூடனாக்குகிறான் என்றால்...
அன்பிற்கு ஏங்கி நிற்கும்
என்னிடம்
காதல் கொண்டு
என்னை
ஏமாற்றியது 
ஏனடி?....

நாம் ஜெனிப்போமா?...

மரணத்தை கூட
மறுப்பார்கள்
மதம் என்ற பெயரில்...
மீண்டும் ஜெனிபோம் என்று கூறி...
மீண்டும் மறிப்போம் என்பதறியாமல்...

மனிதன் என்றாலே மரணம் உண்டு...
மறுப்பவர் சொல்லுங்கள்...
இன்னும் நூற்றாண்டுகள்
கடந்து வாழ்பவர்கள்
எத்தனை பேர்?....

முற்று புள்ளி....

ஒரு செல்
உயிரியில் இருந்து
வளர்ந்து
லெமூரியா கண்டத்தில்
தோன்றிய மனிதர்களே....

மதம், ஜாதி,இனம், என்பது இல்லை 
என்று
தெரிந்தும் கூட
மறுக்கும்...
உங்கள் வறட்டு பிடிவாதத்திற்கு
முற்று புள்ளி
என்ன
மரணமா?....

என் அன்னையே......

கருப்பை
நீர் வற்றி போனதால்
உன் கண்ணீர் நிரப்பி
என்னை ஜெனிக்க வைத்த
என் அன்னையே......

என் உயிர் மரித்தாலும்
உன்னோடு நான்...
நீ கொடுத்த உயிர்
நீ இருக்கும் வரை
இருந்தால் போதும்.....

என்னிடமும் குறை உண்டு....

அலைபேசியில்
அடிக்கடி அழைத்து பேசும்
அன்பான நண்பனே....
இதுவரை
தவறிய அழைப்புகள்
மட்டும் தந்து தான்
உன்னிடம்
நான் பேசி கொண்டிருக்கிறேன்.....

என்னை தோழி என்றாய்...
பிறகு
காதலி என்றாய்....
நான் மறுத்ததும்
வேசி என்கிறாய்....
காதல் தோல்வி என்று கூட
சொல்லி கலங்குகிறாய்....
நீயே
யோசித்து பார் நண்பனே...
அலைபேசியில்
நான்
ஒரு பைசா
உனக்காக
செலவு செய்து
பேசி இருப்பேனா?!!!....

என் மேல்
குற்றம் சொல்ல
என்ன இருக்கிறது?.......

இருந்தாலும்
நட்பு உண்டு உன்னிடம்....
ஆனால்
குறை உண்டு
என்னிடம்....
நட்பென்றால்
என்ன வென்று
புரியாத
உன்னிடம் பேசியதால்....

என்னிடமும்
குறை உண்டு....

என்னை விட்டு ....

உன்
கை பிடித்து
சாலை கடக்கும் போது
தெரியவில்லை.....
தொலைதுரம்
என்னை விட்டு
நீ 
செல்வாய் என்று....

முள்ளை....

பாதையில்
முள் இருக்கும் என்று
உன்னை தூக்கி விட்டு சென்றேன்...
நீ என்னிடம்
முள்ளை
வீசி செல்வாய்
என்பதறியாமல்.....

வலிப்பது ஏனடி?!!!....

வானம்
கண்ணீர் சிந்தும் போது
வலிக்காத
என் மனம்
நீ
கண்ணீர் சிந்தினால்
வலிப்பது ஏனடி?!!!....

வெறி...

நம்மை 
ஊக்கபடுத்தியவர்களை விட...
ஊதாசின படுதியவர்களால் தான்
வேகமான வெற்றியை சந்திப்போம்...
வெற்றிக்கு தேவை
வெறி.... 

மறுத்து விடுவார்கள்.....

மனிதனுக்கு 
தேவையானவை
தனக்கு கிடைத்துவிட்டால்
யாருடைய
உணர்வுகளையும் மட்டும் அல்ல...
யாரையும் பற்றி
யோசிக்க கூட
மறுத்து விடுவார்கள்.....

கற்றேன்...

நம் காதலை
மறந்து போவாயோ என்று
காமம் கற்றேன்- உன்னிடம்....
இன்று
நீ
ருசி கண்ட பூனையாய்... 

வலி அதிகம்...

ஒரு துளி கண்ணீரில்
என்னை தோற்க்கடித்தவளே!...
ஏமாற்றம் உன்னை
ஒரு நாள்
தீண்டும் போது தான் தெரியும்...
ஏமாந்து போனவர்களை விட
ஏமற்றியவர்களுக்கே
வலி அதிகம் என்பது....

இத்தனையா?...

காதல் செய்யும் போது தான் தெரிகிறது...
எத்தனை நண்பர்கள் வருகிறார்கள்...
எத்தனை எதிரிகள் எழுகிறார்கள்...
வேறு பட்டு கிடக்கும்
மனிதர்களின் முகங்கள் இத்தனையா?...

அவளால்...

வெகுளியாய் இருக்கிறாள் என்று
அவளை வியப்பாய் பார்த்தேன் ...
இன்று அவளால்
வியப்பாய்
என்னை பார்க்கிறார்கள்
வெகுளியாய் ஆக்கபட்டுள்ளேன் ...

முயற்சியே...

முயற்சி
வெற்றிக்கு வழி தான்....
ஆனால்
சில நேரங்களில்
முயற்சியே
நம்மை
முட்டாள் ஆக்கி விடுகிறது...

காதலிப்பது உண்மை...

நான் சொல்லும்
உண்மையெல்லாம் பொய்...
பொய் எல்லாம் உண்மை...
நட்பே பெரிது என்று
உன்னிடம்
நட்பாய் பேசுவது பொய்...
உன்னிடம் பொய்யாய் பேசினாலும்
என்னுள்
உன்னை
காதலிப்பது உண்மை...

வழிகள்...

நம்மை
நாமே சுய விமர்சனம் செய்ய
உட்படுத்துகிறோமோ 
அன்று தான்
வழிகள்
பிறக்கும்
நாம் வாழ்வதற்கு ...

தோற்று போனவைகளை ...

நான்
தோற்று போனவைகளை
சொல்ல முடியாமல்
மறைத்து
புன்னகைத்த போது
கலங்கிய கண்களோடு
என் தாய்
"கன்று குட்டியின்
பசி அறிந்தவளாய்"....

கண்ணீர் திவளைகள்.....

உன் விழிகள்
காட்டி கொடுக்குதடி...
பிரிந்து போனாலும்
நட்பிற்கு எங்கும்
உன் கண்களின் ஏக்கம்...
ஏனோ...
ஏதோ...
உன் இமையோரம்
கண்ணீர் திவளைகள்.....

நட்பை தேடி....

நண்பனே!...

உன் பிரிவால் தெரிந்து கொண்டேன்
நம் நட்பின் மதிப்பை...

உன் இறப்பில் தெரிந்து கொண்டேன்
உயிரின் மதிப்பை...

இன்று தனிமையில்
உன் நினைவுகளோடு
நட்பை தேடி....

நாம் நட்பாய் வாழ்ந்த
அந்தநாட்களை
என்னால் மாறாக முடியவில்லை...

நட்பே என்னை மன்னித்து விடு
நீ
என் அருகில்
இருக்கும் போது
நான் விலகியதற்காக....

உன் மொவுனதால்...

உயிர் தந்தாலும்
உணர்வுகளை
கொல்லும்
காதல்....

லேசாய் வலிக்குதடி
உன் மொவுனதால்...
ஏனடி...
உனக்கு
என்ன நான் குறை வைத்தேன்?......

என்னை போல்
உன்னை காதலிக்க
உலகில்
யாரும் இனி
பிறக்கமுடியாதடி...

கவிதையாய்...

உன் கடிதங்களை
மொழி பெயர்ப்பு
செய்கிறேன்
கவிதையாய்...
நம் காதல் பாஷைகள்
கொஞ்சம்
என் ஆண்மையை கூட
விழிக்க வைக்கத்தான் செய்கிறது...

பொறுமையாய் இரு ...

உன்னிடம்
உயிர் வாங்கி
உன்னிடம் தர
ஒரு பத்து மதம்
பொறுமையாய்  இரு ...
அட
வெட்கமாய் இருக்குதடா...
உன்னுடன் பழகிய
இந்த
பத்து மாதங்களும்....

என்
உயிர் ஆனவனே...
உன்
உயிர் நானடா....

ஒதுங்க வேண்டாம்.....

மீன் கடலுக்குள்
கண்ணீர் சிந்தியபடி...
நான் உன் கனவுக்குள்
கண்ணீர் சிந்தியபடி...
யாருக்கும்
தெரிய வேண்டாம்...
நம் காதல் 
மரிப்பதற்காக
கரை
ஒதுங்க வேண்டாம்.....

ரத்தமாய்....

சிக்காய் சிக்குதடி
காதலால்
என் இதயத்தில்
உன் கூந்தல்...
கவனமாய்
நீ அதை
கலைத்து போவதாய்
நினைத்தாலும்
அங்கங்கு
அறுந்து போகுமடி
என் இதயம்...
உன் நினைவுகளை
ரத்தமாய்
சிந்தியபடி...

ஒரு நாள் ....

மொவுனம்....
             ஏழை சொல் 
             அம்பலம்  ஏறாது....

உப்பு தின்னவன்
தண்ணி குடிக்கணும்...
காதல் செய்தவன்
ஒரு நாள்
கண்ணீர் விட்டுதான்
ஆகணும்....




நம் நட்பு....

என்னை பிரிவதற்க்காக...
எனக்காக
என்னிடமே அழுத
உன் கண்களில் நனைகிறது
நம் நட்பு....

பதிந்த...

நீ கொடுத்த
முத்தத்தில் பதிந்த
என் இதழின் ஈரம்
உன்னை நினைத்தும்
உஷ்ணத்தில் 
மறைந்து போனதடி....

சுகம்...

முன்பெல்லாம்
நான்
சந்தோசத்துடன் இருந்தேன்....

ஆம்..

நான்
உன்னை காதலித்ததை விட
நீ
என்னை காதலிக்கிறாய் என்ற
நம்பிக்கையில்
திரிந்த நாட்கள்
அவை...

காதலிப்பதை விட
காதலிக்கபடுவது
தனி சுகம்...

உனக்கு ...

உன்னை
வர்ணிக்கும் போது
நான் கவிஞன் ...
உனக்கு
அறிவுரை கூறும் போது
நண்பன்...
உன்னை பிரிந்து
அழும் போது
குழந்தை...
உனக்காக
உயிர் தரும் போது
காதலன்...

என்னை...

உன்  பார்வையில்
என்னை 
எடுத்து சென்றுவிட்டாய்.... 
என்  நிழல்
தேடி கொண்டிருக்கிறது
என்னை...

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

புரிந்தது....

பிரியும் போது தான்
காதல் புரியும் என்பார்கள்...
உன்னை பிரிந்த பிறகு தான்
தெரிந்தது
காதல் மட்டுமல்ல...
என் முட்டாள் தனமும்.....

இறுதி ஊர்வலம்...

இரண்டு புகழ்ச்சி..
இரண்டு இகழ்ச்சி...

கொஞ்சம் கண்ணீர்...

கலைந்தது
கூட்டம்...

அவரவர்
திசை தேடி...

நீயடி...

நான் சொல்லவே
தயங்கிய வார்த்தை
"காதல்"
நீ கேட்டவுடன்
சம்மதித்தது ஏனடா!!!?....


சொல்ல
நினைக்கின்ற
சொல்லமுடியாத
கவிதை
நீயடி...

என்னை
காதலிக்க வைத்த
உன் கண்களுக்கு
நன்றி கடனாய்
உன் நினைவு கவிதைகள்  ....

அப்பட்டமான பொய்...

அடுத்த ஜென்மம்
இணைவோம் என்று
நீ சொல்வது
என்னை விட்டு
இன்னொருவரை 
நீ மணந்து
செல்வதற்கு கூறும்
அப்பட்டமான பொய்....

என்னை திட்டியபடி....

தோழியாய் இருந்து
என்னை
நீ
நேசிப்பதை விட...
காதலியாய் இருந்து
வெறுப்பதையே விரும்புகிறேன்...
வெறுக்கும் போதே
நீ
அதிகமாய்
என்னை
நினைத்து கொண்டிருப்பாய்
என்னை திட்டியபடி.....

இருக்ககூடாது....

என்னை
நினைப்பதே
கஷ்டம் என்றால்
என்னை நினைக்காதே
உன்னை கஷ்டபடுத்தியதாய்
என் காதல் கூட
இருக்ககூடாது....

நீ என்னை...

என் வெற்றிக்கு
உன் பெயரை
வழிமொழிந்து
கொண்டு இருக்கிறேன்...
நீ என்னை
வஞ்சித்து போனது
உன்னை தவிர
வேறு யாருக்கும்
தெரியாதென்பதால்...

காதல் செய்த படி...

நீ என்னை
மறந்து விட்டதாக 
நானும்..
நான் உன்னை
மறந்துவிட்டதாக 
நீயும் ...
மறக்காமல்
நம் காதலை
நினைத்து கொண்டு இருக்கிறோம்...
நான் உன்னையும் 
நீ என்னையும்
காதல் செய்த படி...

இது தான் காதலா?....

என்னை
 நீ
காதலிப்பதாய் சொன்னாய்...

இனகவர்ச்சி என்று
அறிவுரைகளை அள்ளி வீ சினேன்
நான்  ...

நீயும்  
அறிவுரைகளை ஏற்று
அன்போடு விலகினாய்...

நான் மட்டும்
இன்னும்
உன்னை காதலித்தபடி...

இது தான் காதலா?....

காதல் இப்படி தானோ...

இரண்டு
முறையே 
சந்தித்திருக்கிறோம்...

காதலை சொன்ன
முதல் நாள்....

கடைசியாய்
பிரிய போகிறோம் என்று
தெரியாமல் பிரிந்த
இரண்டாம் நாள்....

எழுத படாத சட்டமா?...

காதலித்து
பிரிந்து விட்டால்
பேச கூடாது என்பது
எழுத படாத சட்டமா?...

கண்ணீர்....

கண்ணீர்
உப்பென்று
உன்னை
காதலித்த பின்பு தான்
உணர்ந்து கொண்டேன்...


எப்போதும் போல்....

எப்போதும் போல்
நாம் ஒன்றாய்
பயணிக்கும் பேருந்தில்
ஏறி விட்டேன் ...
நீ
பயணம் மாறி
போனதை மறந்து....

நீ மறக்காமல்

அடிகடி
உன் கைபேசி எண்ணை
அழுதுகிறேன்
உன் குரல் கேட்பதற்கு மட்டும்...
மொவுனமாய்
என் காதலை
சொல்ல முடியாமல்....

உன் பிறந்த தினத்திற்கு
என் வாழ்த்துகளை
மேகங்களிடம்
அனுப்பிவைக்கிறேன்...
நீ மறக்காமல்
என்
வாழ்த்துமழையில்
நனைந்து கொள்...


இது காதல் ....

என் இதயம்
திடீர் என்று படபடக்கிறது..
இங்கு தான்
எங்கோ நீ
என்னை
கடந்து சென்று
கொண்டிருக்கிறாய்...


என் இதயம்
திடீர் என்று படபடக்கிறது..
இங்கு தான்
எங்கோ நீ
என்னை
கடந்து சென்று
கொண்டிருக்கிறாய்...


மின்னலாய்
மறைந்து போனாய்
என்னை கடந்து சென்ற
பேருந்தின்
கடைசி இருக்கையில்
அமர்ந்து
என்னை பார்த்து
கண் சிமிட்டியபடி....

உன் உருட்டு விழிகள்
என்னை மிரட்டி செல்கிறது...
ஏய்!..
என்னை "காதல் செய்"
என்று...

உன் பார்வையில்
என்னை
எடுத்து சென்று விட்டாய்..
என் நிழல்
தேடிகொண்டிருகிறது
என்னை...

எல்லோர்
கண்களுக்கும்
நான்  ஊமையாய் ..
தனிமையில்
நான் மட்டும்
உன்னோடு பேசிய படி...

உன் பெயரை
விண்வெளியில்
ஒவ்வொரு எழுத்துகளாய்
விதைத்திருக்கிறேன்.....
நட்சத்திரங்களாய்
எப்படி
மின்னுகிறது பார்...

நீ என்னை காதலிப்பதை
உடனே சொல்லி விடாதே ...
கொஞ்ச நாள் ஒத்தி வை ...
இந்த வலி
சுகமாய் இருக்கிறது
உன் பதிலுக்காக
காத்திருக்கும் போது...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நீ மனிதனா?...சாத்தானா?...

பிச்சை கேட்டு நிற்கும் வறியவனிடம்
நான் உன் மதம் இல்லை....
"பிச்சை போட முடியாது" என்கிறாய்....

உன் மதம் கற்று கொடுத்தது
மனித நேயதையா?
மத வெறியையா?....
உன் மதத்தை
பின்பற்றுபவன் மட்டும்
மனித இனமா?....

உண்மை சொல்...
யார் கற்று கொடுத்தது
இந்த கேவலமான மத உணர்வை?...
பிச்சைக்காரன் என்ன
வேற்று கிரக உயிரியா?....

மனிதனுக்கு
தீங்கானவற்றை
சாத்தான் என்கிறோம்...
மனித இனத்தை
மதத்தால் பிரிக்கும்
உன்னை போன்றவர்களை
எப்படி சொல்வது?....
நீ சாத்தானா?..
மனிதனா?...

இன்னொரு மனிதனின்
பசி அறியாதவன்
மனிதனாக இருக்க முடியாது....

இந்த உலகத்தை படைத்தவன்
கடவுளாக இருக்கலாம்
ஆனால் 
மதத்தை படைத்தவன்
உன்னை போன்ற
கேவலமான
மனிதனாக தான் இருக்க முடியும்....

நீ....

நான் அதிகமாய்
காதல் செய்வது நிலவையா?...
உன்னையா?.....என்றால்
நான்
உன்னை தான் சொல்வேன்...
ஏன் என்றால்?!!!...

நிலவானவள் 
தேய்கிறாள்...
வளர்கிறாள்...
மேகத்தில்
அவ்வப்போது ஒளிகிறாள்...
மறைந்தும் போகிறாள்.....

ஆனால் 
பெண்ணே...
நீ மட்டும்
என்னுள் என்றும்
வளர்கிறாய்....


ஏங்கி...

நான்
வெளிநாட்டில் வாழும்
தமிழன்...

எனக்கு ஆடம்பரம்
வசதிகள் வந்து சேர்ந்து விட்டன...
என்னை ஊரே
புகழ்ந்து கொண்டிருக்கிறது...
பணம்
இது நம்மை தவிர
அடுத்தவர்களுக்கு தான்
அதிகமாய்
பயன்பட போகிறது...

பணம் இல்லை என்றால்
நீ ...
நான் ....
நாம் என்று
யாவரும்  பிணம்...

இந்த வெளிநாட்டில்
சாப்பிடுகிறேன்...
தூங்குகிறேன்...
வேலை செய்கிறேன்
பணம் அதிகமாய் சேர்க்கிறேன்...

உண்மை சொல்லவா...
அங்கே நடந்து செல்லும்
ஒரு குடும்பத்தை பார்க்கும் போது
என் குடும்பத்தை பிரிந்து தவிக்கும்
நான்
பெரிதாய்
கண்ணீர் கொட்டுகிறேன் என்னுள்....

என்னடா வாழ்க்கை?....

"பணம் வேண்டாம்
நீ மட்டும் போதும் "என்று
என்னை கூப்பிடுமா
என் குடும்பம் என்று
ஏங்கி
கனவு கூட கண்டு இருக்கிறேன்....

நிஜம்
என்னவென்றால்  
என்னை
பணம் கொண்ட
பிணமாய்
மாற்றிவைத்திருக்கிறது...

என்னை சாப்பிட்டாயா? என்று
கேட்க கூட
யாரும்  இல்லையடா....

அட போடா
என்னடா வாழ்க்கை?...... 

முடிவு கூட உங்கள் கைகளில் உண்டு...

வெறும் தேர்தல் அறிக்கைகளை
நிறைவேற்றியும்
நிறைவேற்றாமலும்...
சாதனையாளர்களாய்
தன்னை சொல்லி கொள்ளும்
அரசியல் தலைவர்களே!!!...
சற்றே வரலாற்றை
திருப்பி பாருங்கள்....

தான் என்று வாழ்ந்தவன்
யாரும்  இல்லை...
நூற்றண்டுகள்
நிஜத்தில்
நம்மை மறந்து போகும்.....

வாழ்ந்ததற்கு
சில அடையாளங்களை
விட்டு செல்லுங்கள்...
இன்னொருவனை
வாழவைத்து பாருங்கள்....
நீங்கள் நுற்றண்டுகள் கடந்தும்
வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்....

நாம் மறக்க படவேண்டியவர்களா?...
நினைக்க படவேண்டியவர்களா?...
இதில் முடிவு கூட
நீங்கள் நினைத்தால் தான்
சாத்தியம்.....




அதான்டி கவிதை...

உனக்கு கவிதை
வந்து கொண்டே இருக்குமா?
என்கிறாய் நீ !!!...

உன்னை நினைத்ததும் 
கவிதை வந்து
கொண்டே இருக்கிறது 
ஏனடி?...என்கிறேன்
நான்....

நிஜம் என்னடி...

கவிதை
சொல்ல வைத்தவளே...

கவிதை என்றால்
என்ன தெரியுமா?...
"மனசு முழுதும்
நீ தான்னு கத்துறேன் பாரு"...

அதான்டி கவிதை...

எப்படி இருக்கிறாயோ?...

நான் பேசும் 
மவுனம்
என் கவிதை...

நீ எனக்கு அமாவாசையாய்
இன்னோருவனுக்கு
பவுர்ணமியாய் ஏனடி?....
உன்னை
நிலவென்று
நான் சொன்னதாலா?.......

நான் அழுத தருணங்கள்
மற்றவர்களுக்கு
விளையாட்டாய்...

என் கண்ணீர் சொல்லும்
உன்னிடம்
நான்
தோற்று போன காதலை...

தோற்று போன காதலுக்கு
தேற்ற ஆள் இல்லை என்கிறாய்...
நினைவுகள் என்று சொல்லி
நிஜத்தை தொலைப்பதா
காதல்?......
இன்னும் எத்தனை நாள்
இப்படி சொல்லி கொண்டு
காதலை ஏமாற்ற போகிறீர்களோ ?..

படித்துறையில்
பாதம் நோக காத்திருந்தேன்
உன் திருமணதிற்கு
உனக்கு காற்றிடம்
தூது விட்டு
வாழ்த்துரை கூறியபடி..

உன்னை நினைத்தால்
சில நேரம் வருத்தமாய் இருக்கும்...
என்னை
நீ
இழந்து
எப்படி இருக்கிறாயோ?...
என்று...

அது எப்படி
அத்தனை வலியும்
ஒரு குழந்தையின் புன்னகை 
கண்டால்
தொலைந்து போவது 
ஏனடா?...
உள்ளேயும் வெளியேயும்
நிஜமாய்
நிஜத்தை வெளிபடுத்துவதாலா?...


சூதாட்டகாரனாய்...

வேசி பெண்ணே ...
உன் உடல் அழகு
என்னை
சிலிர்க்க வைத்தடி...

உன் வார்த்தைகள்
என்னை
உன்னுள் இழுத்தடி...

என் உடல் சுடு
உன்னிடம் தணிந்ததடி...

மது மயக்கமாய்
எல்லாமே
நீ என்றேன்
மாது நீ
விலகிய பின்பும்...

இன்று ஒன்றை பெற்று
நூறை இழக்கும்
சூதாட்டகாரனாய்
நான்
யாருக்கும் பயன்படாமல்...

நினைத்து பார்.....

என் நண்பனே...
உன்னோடு
மது பருகினால் தான்
நம் நட்பு நிஜம் என்கிறாய்...

இங்கு நட்பு
எதை வளர்கிறது?......

நினைத்து பார்.....

ஒரு நாளாவது
நான் உனக்கு ஏதாவது
அறிஉரை சொல்லி இருப்பேனா?...
இல்லை...
மதுவால் நீ
தடுமாறிய போது கூட
தடுத்திருப்பேனா?...
இல்லை...
விலகி நின்றே
வேடிக்கை பார்த்திருக்கிறேன்
வழிபோக்கன் போல் ...

நீ தான் சொல்லி கொண்டிருக்கிறாய்
உன் நண்பன் நான் என்று
நட்பிற்கு அர்த்தம் தெரியாமல்!!!...

நட்பு என்பது
தவறுகளை
தூண்டுவதற்காக அல்ல...
தவறுகளை
செய்ய விடாமல்
தடுபதற்காக என்றே
நான் நட்பிடம் எதிர்பார்க்கிறேன் ...
நட்பு கூட
ஒரு தாய் போல்
இருக்கவேண்டுமடா?......

இப்போது சொல்
நீயே  என் நண்பனா?....
நான் உன் நண்பனா?...

நான் இன்னும்
காத்திருக்கிறேன்
நல்ல நண்பனுக்காக
வெகு நாட்களாய்.......






தனங்களின் வலி ....

வெறும்
பணத்திற்காக
காதல் வார்த்தைகளில்
இன்று
காமம் உமிழும் பெண்ணே!....

உனக்கும்
காதல் உண்டு என்பது
அறியாமல் பலர்
உன்னிடம்
வந்து போய் இருக்கலாம்...
என்னால்
உன் விரலை கூட
தீண்ட முடியாது....

ஏன்?...
உன்
முதல் காதலுக்காக..
நீ
பச்சை குத்திய
உன் காதலனின்
பெயரை சுமக்கும்
தனங்களின்
வலி
என் கண்களில்
தெறிக்குதடி....




புதன், 25 ஆகஸ்ட், 2010

நான் தவிக்கும் போது...

கவிதைகள் கூட
சில நேரம்
கண்ணீர் வடிக்கும்...
நான் நினைத்ததை சொல்ல
வார்த்தைகள் கிடைக்காமல்
நான் தவிக்கும் போது....

உப்பிலாத கண்ணீர் இல்லை...
நிஜம்...
ஆனால்..
இன்று அதில் கூட
சுத்தம் இல்லை...?....

வரையறை கொண்டு
எழுதும் கவிதையை விட
வரைமுறையோடு
நாம் வாழும் வாழ்க்கைதான்
அழகான கவிதை...

கேள்வி குறியாய்
நான்
 ?
விதி மட்டும்
எனக்கு விடை கொடுக்க மறுப்பதேன்?...
கேள்வி குறி போல்
நான் மட்டும் குறுகியே
ஏன்?....

நிஜமோ?.......

முட்டாள் மனிதன்
கையாலாகாத மனிதன்
முறை இடுகிறான்.....t
இன்னொரு மனிதனை
தேவதூதனாய் உருவாக்கி
எல்லோரையும் முட்டாளக்கியபடி...
ஏமாற்ற நினைப்பவர்கள்
ஏமாந்து
போவது நிஜமோ?...

அழுதால் அழும்...

நட்பும்
ஒரு வகை காதல் தான்...
சிரித்தால் சிரிக்கும்...
அழுதால் அழும்...

பிரிந்தால்
ஒருவரை ஒருவர்
தூற்றி கொள்ளும்...
அன்பை கேவலபடுத்தும்
காதல் அல்ல...
........................
இது நட்பு...

பிரிந்தாலும் நலத்தை விரும்பும்...
விசாரிக்கும் நட்பு...
நட்பிற்கு சரியான சொல் காதல்...
காதல் நட்பை விட்டு கொடுப்பதே இல்லை...

நீ மறுத்த போதும்...

உன்னையும்
அறியாமல்
என்னை நீ
காதலித்து கொண்டிருக்கிறாய்....
தொட்டாசிணிங்கிக்கு தெரியாது
தான் வெட்கப்பட்டு கொண்டிருப்பது?!!!....

மழை
நீ
என்னுள்
வர போகிறாய் என்றே இருந்தேன்...
இடியுடன் வந்தாய்...
இன்று
ஈரமான கண்களுடன்
நான்....

கடவுளே நீ என்னை...
படித்ததிலிருந்து
உனக்கு எவ்வளவு கஷ்டம்?......
நானும் விடாமல்
எதாவது கேட்டு கொண்டே  இருக்கிறேன்
நீ மறுத்த போதும்....

காதலில் நான் தீவிரவாதி....

நான்
கண்ணாடி பார்க்க துவங்கியதே
நீ என்னை நேசிப்பதாய்
சொன்ன பின்பு தான் ...
எனக்கே பிடிக்காத
என்னை......
என் முகத்தை
எப்படி உன்னால்
ஏற்று கொள்ள முடிகிறது?!!!....

கஷ்டமில்லாமல் இருக்க
ஒரு வழி சொல்கிறேன்
நான் உன்னை
காதலிப்பதை சொன்னதும்
உடனே மறுத்து விடு...
என்னை நீ காதலிப்பது
அத்தனை கடினம்...
என்னை போல்
உன்னால்
என்னை காதலிக்க முடியாது....
காதலில் நான் தீவிரவாதி....
நொடி பொழுதும்
உன்னை
என்னிடம் இருந்து தரமாட்டேன்....

நிராயுதபாணியாய் நான்....

ஒரு பார்வை மட்டுமே பார்த்தாய் ..
நிராயுதபாணியாய் நான்...
உன்
அக்குரோணி விழியின்  
தாக்குதல் அத்தனை வேகமடி.....

அக்குரோணி என்றால்
என்ன தெரியுமா?....
      தேர் படை  = 21,870
யானை படை  = 21,870
குதிரை படை  = 65,610
காலாள் படை =1,09,350

இத்தனை படைகளும்
மொத்தமாய் என்னை  தாக்கிய 
உன்  விழியின்
பலம் இவைதானடி....

வருவாய் என்று...

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் நீ எப்படியும்  வருவாய் என்று.....
ஆனால்
உன் பொல்லாத நினைவுகளால்
மறந்துவிட்டேன் உறங்க......


ஏனடி நான் இப்படி?!!!!....

உனக்கு தெரியுமா?
உதிரும் உன் புருவ முடிகள் கூட..
என் இதயத்தைதானடி
அடிக்கடி குத்தி
செல்கிறது
உன் பெயரை சொல்லியபடி...

இன்னும்
உனக்கான கவிதை
தொண்டை வரை வந்து
மனதிற்குள் மறைவதும் ஏனடி?...

நான் உன்னிடம்  ஏதோ சொல்ல
நினைக்கும் போதெல்லாம்
நீ
வெகு தொலைவில்..
நிழல்
நம்முடனே இருப்பதில்லை...
சில நேரம் விலகி போனாலும்
நம்முடன் தானே
பயணம் செய்தாக  வேண்டும்?....
..............
இப்படி கூட தேற்றி கொள்கிறேன் ஏனடி?...

நான் சொல்ல வந்ததை
உன் விழிகள்
விழுங்கி விடுகின்றன...
வார்த்தைகள் தொலைந்து
போனவனாய் நான் ...
உன்னிடம் மட்டும் ஊமையாய்
ஏனடி?!!!!!.....

யாரடா?!!...

மொவுனமாய் 
நான் சில நேரம்...
மயக்கமாய்
உன்னோடு சில நிமிடம்...
எல்லாம்
இந்த சில நாட்களாய்..
ஏனடா?...
எனக்கு முன் பிறந்தவனே....
என்னை யாரடா
உனக்கு அடையாளம் காட்டியது??!!!....

காமம் எச்சில் போன்றது...

காமம்
எச்சில் போன்றது...
நிற்கும் இடம்
குப்பைதொட்டியோ...
கோபுரமோ...
உமிழ்ந்து விட வேண்டும்....
இல்லையென்றால்.....
நாறிவிடும்....
உள்ளும் வெளியும்....

சில வினாடிகளில் ...

நான் வற்புறுத்தியே
உனக்கு காதல் வந்ததென்கிறாய்...
இன்று தானடி
எனக்கு வலிக்கிறது...
இதற்கு
என்னை நீ வேண்டாம் என்று
அன்றே 
விலக்கி இருக்கலாம் ....
விலகி கூட  போய் இருக்கலாம்...
சில வினாடிகளில் 
போக வேண்டிய வலியை 
பல ஜென்மங்களாய்
ஆக்கிவிட்டாயடி......

என்னவென்று?....

வாழ்க்கை
வாழ்ந்து
முடித்த பிறகு தான் தெரிகிறது...
இழந்தவை இங்கு எத்தனை ?...
என்ன
என்னவென்று?!!!!....

உமிழ்ந்திருக்கிறது...

நாம் நினைக்கும் அளவிற்கும்....
பெருமை படுவதற்கும்
காதல்
ஒன்றும் பெரிதாய்
இந்த உலகத்திற்கு
கற்று தரவில்லை...
காமத்தையும்
கலாசார கெடுதலையும் மட்டுமே
உமிழ்ந்திருக்கிறது...

வழி தெரியவில்லை....

என்னை பார்த்து
எல்லோரும் சிரித்த முகமாய்
எப்போதும் இருப்பதாய் சொல்கிறார்கள்...
புகழ்கிறார்கள்...
உண்மை அது வல்ல...
எனக்கு இதைவிட
அழுவதற்கு
சிறந்த வழி தெரியவில்லை....
அதனால் தான்
இந்த புன்னகை....

இந்த பயணம் எதனை நோக்கி?....

எங்கோ தினம் போகிறோம் ?..
எத்தனையோ கடக்கிறோம்...
எங்கு போகிறோம்?..
ஏன் போகிறோம்?..
எதுவும் புரியவில்லை...
ஆனாலும் போய் கொண்டே இருக்கிறோம்?....
இந்த பயணம் எதனை நோக்கி?....
மரணம்...
மரணம் மட்டுமே நிஜம்...
பிறந்தது முதல்
மரணத்தை நோக்கி நாம்
ஓடிகொண்டே இருக்கிறோம்?!!!!!....

ஆனாலும்
நாம் வேறு ஏதோ தேடி கொண்டே செல்கிறோம்....
பணம்...
மனம்...
வாழ்க்கை...
இப்படி நாம் பட்டியல்  போடுவது கூட
எது வரை?....

இந்த பயணம் எதனை நோக்கி?....
?????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சில கேள்விகள்....
சில ஆச்சரியங்கள்....
இந்த பயணம் எதனை நோக்கி?....

ஏனடி?!!!...

வாழ்க்கையை
உதறி போகும் எண்ணம் 
வரும் போதெல்லாம் ..
நம்  நினைவுகளை 
அசை போடுகிறேன்
அடுத்த  நிமிடமே ...
உன்னையும்  
இந்த  வாழ்க்கையையும் 
மீண்டும் காதலிக்க தொடங்கிவிடுகிறேன்....
ஏனடி?!!!...

வருத்தம் கொள்கிறாய்...

உன்னை பற்றி
கவிதை சொல்லவில்லை என்று
வெகுவாய்  வருத்தம் கொள்கிறாய்...
ஒன்று தெரியுமா?.....
நீ வார்த்தை அல்ல சொல்வதற்கு....
நீ என் உயிர்.....
என்னுள் இருந்து வர
உன்னை நான்
எப்போதும்
எந்த வழியாகவும்
வெளி வர அனுமதிப்பதில்லை......

மறதி மட்டும் இல்லையென்றால்.....

நினைவுகள் மட்டும்
வைத்திருப்பவன்
நிம்மதி இழக்கிறான்..
நிலை குழைகிறான்..
ஆம்...
மனிதனுக்கு
மறதி மட்டும் இல்லையென்றால்....
என்றோ
மனித இனம்
முழுதும் கூட
உலகத்தில்
அழிந்து போய் இருக்கும்?!!!...

என் ஆசை தமிழட்சியே !...

அழகானவளா ?
நீ?...
தெரியவில்லை...
அமைதியானவளா?
நீ?..
புரியவில்லை...
என் ஆசை தமிழட்சியே !...
கடல் தாண்டி
 நீ போகலாம்..
என் காதல் தண்டி
போக முடியாது..
உண்மையானவளே...
உன்னை விட
நான் யாரை நேசிப்பது...
என் யாழ்ப்பான காதலியே!...
அகதியாய்
உன்னோடு வாழ ஆசை...

உன்னை பற்றி...

என் இதழ் பருக வா...
உன் மது பழக்கம்
இன்றோடு மடிந்து போகட்டும்...

இத்தனை நாள்
மருத்துவனிடம்
என் கண்ணின் கீழ்  இருக்கும்
கருவளையம் போக
மருந்து வாங்கி தடவி கொண்டு இருந்தேனடா ...
நிமிடத்தில்
உன்னை தடவினால்
மறைந்து போகும் என்பது அறியாமல்.....

திகட்ட திகட்ட
நீ என்னை
அனுபவித்த போது தான் தெரிந்தது ...
என் காதலனே...
என்னை நீ அனுபவிக்க
காத்திருந்த
உன்  வலி.....

என் காதலன் பற்றி...


நான்
கண் முடி தூங்க.... 
உன் புல்வெளியில் இடம் கொடு..
புரியவில்லை...
உன் மார்பு  முடி பஞ்சனை கொடு...

மெல்லிய தூறல்...
நான் முழுதும் நனைந்தபடி...
என் காதலனே...
உன் நெஞ்சு சூட்டில்
கொஞ்சம் குளிர் காய ஆசை...

மறுமுறை
தழுவ ஆசை...
என்னை வருடியது
உன்  கைகள் அல்ல...
உன் மார்பு முடிகள்...

பனிகாற்று
என்னுள் ஏற்படுத்தியதை விட
உன் மூச்சு காற்று
என்னை
கூச்சபடுத்துகிறது..
ஆம்...
நான் வேண்டாம் என்றாலும்
உன் இறுக்கமான
தழுவலை தளர்த்தாதே.....

உன்னை பற்றி சில...

இயற்கையே உதவி செய்..
இருவரும் ஒன்றாய்
மழையில்  நனைய...

உன் இதழ்களை
மலர் கொண்டு வருட வந்தேன் ...
மலர்கள் வாடி போனது
உன் இதழ் அழகை கண்டு.....

பனி காற்றின் ஈரபதம் போல்
என்னை இம்சை செய்தவளே ...
உன்னை சந்தித்த வேளை...
அந்த
பனி  படர்ந்த மேகம்
உன் கூந்தலை வருடியது
மேகத்தின் ஏக்கமா?...




உன் பழைய காதல் கதை

அடிக்கடி
தொலைத்த உன் காதல்
உன்னை
ரணமாக்குவதாய்  சொல்வாய்...
நானும் மவுனமாய்
ஆறுதல் சொல்வேன் ...
என்னை காயபடுத்தும்
உன் பழைய காதல் கதை
நீ கூறும் போது
நான் படும் ரணங்களை
மறைத்த படி....
 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

இந்த கோடுகள் பல அர்த்தங்களை சொல்லும்?......

ஆணுக்கு பெண் நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......

காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற  விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...

பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....

 பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
...........................
.....................................
........................................
இந்த கோடுகள்
பல அர்த்தங்களை சொல்லும்?......

நட்பில் சுகமும் உண்டு
காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சில நாட்களில் நட்பு
மறந்தே போய் விடும் அதிசயம் ஏன்?...
.............................
.............................
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் காதல் வரும்....
ஒரு நாள் காமம் வரும்......
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்....

நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...


சில நேரம் நட்பு பிடிக்கும்....
சில நேரம்
அத்தனையும் வெறுக்கும்....
இவை அனைத்தும் நட்பில் ...
நட்பென்ற காதலில்....

நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....

நம் மனம் சிலரை விரும்பும்.....
நம் உடம்பு சிலரை விரும்பும்....
ஆனால்...

நம் உயிர்
ஒருவரை மட்டும் விரும்பும்

அதுதான்டி காதல்?....

இது மாறாது...
மாற்று தேடாது
இந்த உயிர் உள்ள வரை
உனக்காக மட்டும்.........

இத்தனை சுகமாய் இருக்குதடி....

                                                                               
 காதல்.....                                                                                                                                                                                இது என்னடி
இத்தனை சுகமாய் இருக்குதடி....

உன் பார்வைக்காக
நான் ஏங்கிய போது தான் தெரிகிறது
எனக்கு சிரிக்கவும் தெரியும்...
எனக்கு சிரிக்க வைக்க கூட  தெரியும் என்று...
அது எப்படி
ஒரு பார்வையில் என்னை
மாற்றி போக முடிந்தது உன்னால் மட்டும்?!!!!....

அழகான உலகம் உனக்காக ....

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதலை விட ...........

காதல் கிடைக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்
ஏனோ 
இந்த  காதலை அசிங்கபடுத்துகிறார்கள்.....

உண்மையில்
ஒரு நொடி காதல் என்றாலும்
அதன் சுகம் தனி தான் ...
காதல் திருமணத்தில்  முடிந்தால்  தான் 
உண்மை  காதல் என்கிறார்கள்......

அப்படி  என்றால் 
உண்மையாய் திருமணதிற்கு பின்
காதல் செய்பவர்கள்
எத்தனை  பேர் ?....

காதல்...
காதல் தான் ....
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்
உண்மை காதல் ...

காதலை விட
நட்பை சிலர் பெரிதென்கிறார்கள்...
அவர்களுக்கு தெரியவில்லை
நட்பும் கூட
ஒரு வகை காதல் என்பது.....

வழிகாட்டிகள்...

எப்போதும்
இரண்டு பேர்
நம்மை சுற்றி
நமக்கு
எதிரான கருத்துகளை
சொல்லி கொண்டே இருப்பார்கள்....

அவர்கள் தான்
நம் வாழ்கையில்
நமக்கு முக்கியமானவர்கள்...
நம் தவறுகளை சுட்டி கட்டும் நண்பர்கள்...
நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கும் வழிகாட்டிகள்...

அவரவர் வாழ்க்கையை கவனிக்காமல்
அடுத்தவர் கள் வாழ்க்கையை கவனித்து
குற்றம் சொல்லியே வாழும்
நிறைய முட்டாள்களுக்கு
நிரூபித்து காட்ட வேண்டி இருக்கிறது

"நாம் சாதனையாளர்கள் "என்பதை.......

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சுதந்திர தினம்...

நாம் போற்றும் சுதந்திரம்....
நமக்கே சில நேரம் பிடிக்கவில்லை....

சனி, 14 ஆகஸ்ட், 2010

உணர்ச்சிகள் இல்லாத....

உணர்ச்சிகள்
இல்லாத
மனிதர்கள் இல்லை....
வெளி உலகத்திற்கு
தன்னை
தூய்மையாய்
காட்டி கொண்டாலும்...
சுய இன்ப இரவுகளில்
படுக்கையில்
ஈரமாய் அசுத்தம்
செய்யாதவர்கள் உண்டா?....

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

உன் நோக்கம் தான் என்ன?!......

தெய்வமே!....
பூமியில் 
அங்கங்கு
விதவிதமான
மதங்களில் காட்சி தருகிறாய்?!......

மனிதனை
அவ்வப்போது
ஒவ்வொறு  விதமான
உருவங்களில்
காப்பாற்றுவது போல்
அருள் தருகிறாய்...
உன் நோக்கம் தான் என்ன?!......

மனிதர்களை
வேடிக்கையாய்
பிரித்து விளையாடும்
நீ இருப்பது உண்மையா?...
இன்னும்
ஒரு அறிவு கொடு....

"நீ ஒருவனே" என்பது
மனிதர்களுக்கு புரியட்டும்...
உன் பெயரால்
சண்டை
இடுவதையாவது நிறுத்தட்டும்...

ஆறறிவால் மனிதன்
இதை கூட
இன்னும் மனிதனால்
உணர முடியவில்லை....

அலட்டி கொள்கிறார்கள்..

காதலில்
தோற்று போனவர்கள்
ரெம்பவே
அலட்டி கொள்கிறார்கள்..
தன்னை
ஒரு அப்பாவி போல்
நினைத்து கொள்கிறார்கள்...
"தன்னை தானே
ஏமாற்றி கொள்வது தான் காதல்"
என்பது தெரியாமல்...

ஏமாந்த அந்த நாட்களை .....

நான்
காதலித்து
ஏமாந்த
அந்த நாட்களை
யாரிடமும்
சொல்லி அழ கூட முடியவில்லை...

ஆம்...
அந்த கொச்சையான
காதலின் வலி
எனக்கு மட்டுமே தெரியும்....

வலி அதிகம் என்பது....

ஒரு துளி
கண்ணீரில்
என்னை
தோற்க்கடித்தவளே...

ஏமாற்றம்
உன்னை தீண்டும் போதே தெரியும்...
ஏமாந்து போனவர்களை விட
ஏமாற்றியவர்களுக்கே
வலி அதிகம் என்பது....

மறைக்க முடியாமல் போவது ஏன் ?........

மனதில் உள்ளவற்றை  
அப்படியே  
எல்லாரிடமும் 
எல்லாவற்றையும்
சொல்லி விட முடியாது
என்பார்கள் ...

ஏனோ
நட்பிடம் மட்டும்
மறைக்க முடியாமல் 
போவது ஏன்?..........
 நம்பிக்கையா?........
 வடிகாலா?...

உன்னை தீண்டி இருக்குமா?....

தோழியே!
என்னை
சதை திண்ணியாய் எண்ணி
என் காதலிக்கு
சக்களத்தியாக ஆக்கத்தான்
உன்னிடம் பேசுகிறேன் என்று
என் நட்பை
சாக்கடையில்
தள்ளி விட்டாயடி...

உன் சதை
நரம்புகளிடம் கேட்டு பார்...
நாம் நட்பாய்
பழகிய காலத்தில்
என் வார்த்தைகளாவது
உன்னை
தீண்டி இருக்குமா?....

வாடகைக்கு காதலிகள் தேவை....

உண்மை காதலை
உதறி செல்லும்
பெண்களை பார்க்கும் போது....

பணத்திற்காக
பொய்யாய் பேசி...
பொய்யாய் பழகி....
பொய்யாய்
அன்பை பொழியும்
பெண்கள் இருந்தால் சொல்லுங்கள்...

நானும் கொஞ்சம்
பொய்யான மடியில்
உண்மையாய் உறங்க...

ஆம்...
வாடகைக்கு
காதலிகள் தேவை....

காரணம் கூட அறியாமல்....

உன் நினைவுகளை
கவிதை பூக்களாய்
மாற்றி

உன்னிடம்
ஒப்டைக்க
நெடுநாட்களாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

நீ என்னை
மறந்து போனதற்கான
காரணம் கூட
அறியாமல்....

அமைதியாய் ...

நேரில்
நான் பேசும் போது
அமைதியாய்
அத்தனையும்
கேட்டு விட்டு
பதில் கூறாமல்
சென்று
வன்முறையாய்
வார்த்தைகளால்
என்னை சுறையாடுகிறாய்
கவிதையால்....

கண்கலங்கியபடி....

நாம்
காதல் செய்த இடங்களை
அவ்வப்போது
பார்வையிடுகிறேன் ...
நீ கூறிய
பொய்யான வாக்குறுதிகள்
கற்பனையாய்  போனதை
நினைத்து
கண்கலங்கியபடி....

சேர்த்து....

என்னை
புரிந்து கொள்ளாத 
உன் மேல்
எனக்கு தீராத கோபம்....
உன்னை நிறையவே திட்டி
கடிதம் எழுதி விட்டேன் ...
நீ வருத்த படுவாய் என்று
பத்திரமாய்
மறைத்து விட்டேன்
மவுனமாய்
என்  காதலையும்  சேர்த்து....

அவனவன் அனுபவம்...

ஒருவன்
நட்பை பெரிதென்கிறான்...
ஒருவன்
காதல் பெரிதென்கிறான்...
ஒருவன்
சுற்றம் பெரிதென்கிறான்....
ஒருவன்
சொந்தம் பெரிதென்கிறான்.....
இப்படி
சூழ்நிலை கைதிகளாய் ...
மனிதன்...

எந்த மனிதன் யாருக்கு
கஷ்ட நேரத்தில் உதவுகிறானோ
அவனுக்கு அந்த உறவு பெரியது தான்...
அது அவனவன் அனுபவம்...

சுயநலமாய் சிந்திக்கும்
மனிதனுக்கு
அன்பை கற்று கொடுப்பது யார்?....

தள்ளியே நிற்கிறது....

சமூகம்
என்னை விட்டு
தள்ளியே நிற்கிறது....

பொய் முகங்களை
தேவையான நேரத்தில்
தேவையான படி
மாற்றி மாற்றி
வேஷம் போட்டு கொள்ள
எனக்கு
தெரியாமல் போனதால்....

காப்பற்ற நினைப்பது....

உன் பெயரை உச்சரிக்க
இன்னொருவன் வந்தவுடன்
என் பெயர் கூட
மறந்தவளாய் நீ...

உன் இதழ்களை
இன்னொருவன் பருகியவுடன்...
என் எச்சில் பட்ட
பாத்திரதிற்காக  
ஏங்கிய
உன் உதடுகள் மொவுனமாய்...

என் முகம் பார்க்க ஏங்கிய
உன்  கண்கள்
பாதையோரம்
என்னை பார்த்தும்
என் மேல் பார்வை படாதவளாய்
பதுங்கி நீ...

எனக்கு நீ
உனக்கு நான் மட்டும் - இப்படி
பொய்யாய்
உளறிய நாட்கள்
பொய் தானே?...

இன்று நீ
காப்பற்ற நினைப்பது
நீ தொலைத்த கற்பையா?
காதலையா?....

நான் கோழை தான் ...

நான் கோழை தான் ...
 அன்று
உன் மவுனத்தால்...
உண்மைகளை
உரக்க பேச முடியாமல்
போனதால்
எழுத்துகளில்
உமிழ்ந்து  கொள்கிறேன் என்னையே...

ஒரு நிஜம்...
நான் தைரியசாலி தான்...
நானாவது
எழுதி வைத்திருக்கிறேனே....
மாறாக முடியாமல் இருக்கும்
நம் நினைவுகளை....

பிணத்தையாய் தழுவினேன்? ....

என்னை
நீ நேசிக்காமல்
என்னோடு இருந்தது
இன்று வரை தெரியவில்லையடி...
இத்தனை நாள்
இருட்டறையில் இருக்கும்
பிணத்தையாய்
தழுவினேன்?!!! ....

நீ என்று...





நீ
என்று
நெருங்கிய போது தான்
தெரிந்தது...
பறந்து சென்றது
பட்டாம் பூச்சி
கூட்டம் என்று...

நிறை மாத கர்ப்பிணியாய்...

உன்னை
கண்டது முதல்
என் உயிர் கொடுத்து
காதலை வளர்க்கிறேன் 
கடந்த பத்து மாதங்களாய்...
இன்று நிறை மாத
கர்ப்பிணியாய்
உன் பதிலுக்காக
காத்திருகிறேன்
என் காதலின் சுக பிரசவத்திற்காக....

கடற்கரை காதலும் ......


கடற்கரை காதலும்
தெருவோர நாய்களும்
சுற்றி இருபவர்களை
சலனபடுத்தியபடி...
பன்றியோடு சேர்ந்த
கன்றுக்குட்டியாய்
சமூகம்...

கருவை கலைத்த அன்னை....



கருவறையிலே
உன்னை
கொலை செய்து விட்டு
உனக்காக
கண்ணீர் விட  கூட
தகுதி இல்லை -எனக்கு....
கற்பில்லாதவனிடம்
என் கற்பை
தொலைத்ததனால்...

மனித பரிணாம வளர்ச்சி...

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?....
கடவுளால் மனிதன்  படைக்கப்பட்டானா?...
நெடு நாட்களாய்
இந்த விவாதம் உண்டு....

அதிகமாய் சிந்திக்க ஆரம்பித்த மனிதன்
ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கினான் .....
இன்றும் ஆராய்ச்சியில்
இருக்கிறான் .....

குரங்கிலிருந்து மனிதன்
வளர்ச்சி பெற்றான் என்பதற்கு
ஆதாரங்கள் இன்னும் தேடுகிறார்கள்...
மனிதனை படைத்தது கடவுள் தான் என்று பலர் வாதாடுகிறார்கள்.....
சில ஆதாரங்கள் இருவரும் சொல்கிறார்கள்....
அனைத்தும் நிரூபிக்க முடியாத ஆதாரங்கள்....
இன்று வரை முடிவான பதில் இல்லை....
இனியும் கண்டுபிடிக்க முடியாது....
ஏன்?....

குறிப்பிட்ட வயதுகள் மட்டுமே
இந்த பூமியில் உயிர் இனங்கள் வாழ முடியும் .....
இது நிரூபிக்கபட்டவை....
இதற்கு ஆராய்ச்சி தேவையா?....

ஒரு அறிவியல் மேதையாலும்
ஆன்மிக மேதையாலும்
சொல்ல முடியாத விசயம்....
இறந்த பின்
எங்கே போகிறது உயிர்?...
இன்று வரை
தன்னை கடவுள் என்று சொல்லி கொண்டவனாலும்...
அனைத்தும் அறிவியல் தான் என்று சொல்லி கொண்ட
அறிவியல் மேதையாலும்
முதலில் தன் உயிரை
காப்பற்றி கொள்ள ஏன் முடியவில்லை?....
எந்த மனிதனாலும்
சொல்ல முடியாது....

ஏன்?
ஏன்?
நாம் அடிக்கடி மறந்து போகிறோம்....
நாம் சாதாரண மனிதர்கள் என்பதை....

விண்வெளியில் போய்
கடவுளை தேடுவதும்....
தவ வலிமையால்
கண்டு பிடிக்கிறேன் என்றும்
இன்னுமெத்தனை மனிதர்கள் தோன்றுவார்கள்
என்று தெரியவில்லை....
ஆனால்
நாம் யாரோ ஒருத்தரால் படைக்க பட்டு விட்டோம்
மீண்டும் புதைக்க பட்டு விடுகிறோம்....

படைக்க பட்ட நாம்
இங்கிருந்து எப்படி
மனித வளத்தை ஒழுங்குபடுத்தி
மனிதநேயத்தோடு வாழ்வதை பழகி கொள்ளாமல்....
கடவுளை கண்டுபிடிக்க தவமிருக்கிறார்களாம் ?
தன்னை ஆன்மீகவாதி என்றும்
சித்தன் என்றும் சொல்லி கொள்வதில்
பெருமை கொள்கிறார்கள்.....

உண்மையான ஆன்மீகமும்
அறிவியலும்
கிடைத்த பூமியையும்
அருகில் இருக்கும் மனிதர்களையும்
அழிக்காமல் இருக்க கற்று கொடுத்தால்
இன்னும் கொஞ்ச நாள்
உயிர் இனங்கள்
சுவாசிக்கும்
தூய்மையாய்.....

மீண்டும்...
ஒன்றை மறந்து விடாதீர்கள்....
நாம்
சாதாரண மனிதர்கள்....










திங்கள், 9 ஆகஸ்ட், 2010

அறிவுரை .....

யாரும்
கேட்காமல் அறிவுரை
சொல்வது முட்டாள் தனமானது.....

சந்தோசத்தின் உச்சத்தில்
இருப்பவனிடம்
அறிவுரை சொல்ல கூடாது ....

அதே போல்
விரக்தியின் விளிம்பில்
இருப்பவனிடம் போய்
அறிவுரை சொல்வது கூடாது ....

விரக்தியில் இருபவர்களுக்கு தேவை
நிவாரணம்....
தீர்வு....
ஏட்டு சுரக்காய்
அறிவுரை தேவை இல்லை.....

அறிவு பூர்வமான கேள்வி.....

நட்பை கொட்சை படுத்தும்
சம்பவங்கள்
நிறையவே இங்கு
இப்போது நடந்து வருகிறது....
ஆனாலும்
இந்த "காதல் இருக்கிறதே"
நட்பையும் அழித்து
நம்மையும் அழித்து விடுகிறது...

எப்படி?.....

நன்றாக பழகி வரும் போதே
தெரியாத ஒருவரை மணப்பதற்கு
நம்மை புரிந்து கொண்ட....
நம்மோடு இருக்கும்
தெரிந்த நட்பை ஏன் மணக்க கூடாது ?என்ற
அறிவு பூர்வமான
கேள்வி எழுப்பி
சபலத்தால்
அடி வாங்கி.......
கேவலபட்டு
பிரிவை தந்து
நம் வாழ்க்கையை
அழிக்கும் காதலால்
நட்பை அழித்தவர்கள் ஏராளம்.....

எங்கு இருக்கிறது?....

கற்பு
உடம்பிலா?
மனதிலா?
எங்கு இருக்கிறது?....

இப்படி
அறிவு பூர்வமாய்
கேட்பது போல் கேட்கும்
உடம்பு கெட்டவர்கள்
"மனது கெட்டாலே
கற்பு கெட்டு விட்டது"என்கிறார்கள்
தங்கள் பக்கம் நியாயம் இருப்பது போல்......

நீ கெட்டு விட்டால்
திருந்த முயற்சி செய்....

"நான் மட்டுமா
செய்கிறேன்"
பக்கத்துக்கு வீ ட்டில்.....
இந்த ஊரில்....
இந்த உலகமே
செய்கிறது என்று தன்னை
நியாயபடுத்தி
முந்தி கொள்கிறார்கள்
கலாசாரத்தை கெடுத்தபடி ...

இப்படி பட்டவர்களுக்கு
தானும் கெட்டு
ஊரும் கெட்டால் தான் கொண்டாட்டம்...

காலமெல்லாம் காதல்

காதலி ஏற்று கொள்ளாதவரை
விட முயற்சி செய்ய துண்டும்
ஒரு தலை காதல்....
காதல் கிடைக்காதவரை
ஏக்கம் இருக்கும் ...
ஆனால்
அது ஒரு சுகம்...
காதல் கிடைத்து விட்டால்
திருமணம் முடியும் வரை
அது தூக்கம் கெடுக்கும் துக்கம்...
சுகமும் துக்கமும்
கொண்டதே வாழ்கை...
அதற்காக
சுகத்தை இழந்து
துக்கத்தை பெறும் காதல்
கிடைத்தவர்களுக்கே
அந்த வலி புரியும்....
"உன்னால் தான் என் வாழ்கை"
இப்படி போய் விட்டது என்று
சொல்லும் போதெல்லாம்
சிந்தும் கண்ணீருக்கு தான் தெரியும்
காலமெல்லாம் காதல்
அழவைத்து கொண்டே இருப்பது....

இது தான் சரி...

எதார்த்தமாய் வாழ
இங்கே நிறைய இடர்கள் உண்டு...

இது தான் சரி...
இங்கு இப்படிதான் வாழ வேண்டும்
என்று இங்கே
யாராலும் யாருக்கும்
வழி சொல்லி விட முடியாது...
யாரும் கேட்டு விட போவதில்லை...

இந்த மனிதர்களுக்கான
சரியான தீர்வு
தீர்ப்பு யாராலும் கொடுத்து விட முடியாது...
ஒரே குற்றத்திற்கு
இந்த பூமியில் உள்ள நாடுகளில்
ஒவ்வொரு நாட்டிற்கும்
தனி தனி சட்டங்கள்....
தீர்ப்புகள்
மனிதனுக்கு மனிதன் மாறுகிறது...

நம் மனதை பற்றி
நம்மால்
நாம் இப்படிதான் என்று கூட
சொல்லி விடமுடியாது....

நொடிக்கு
நொடி மாறும் நாம்....

நம் பேச்சை
நாமே
பல நேரம் கேட்பதில்லை....

மனசாட்சி

மனிதனின்
மனதிற்கும் உடம்பிற்கும்
யுத்தம் எப்போதும் உண்டு...

சில காரியம் உடம்பு செய்ய சொல்லும்
மனம் தடுக்கும்....
மனது செய்ய சொல்லும் போது
உடம்பு மறுக்கும்...

உடம்பு கெஞ்சம் ....
"இந்த ஒரு முறை மட்டும் "என்ற போது
மனசு தடுக்கும்...
தண்டனை பெறும் போது
"நான் தான் அப்போதே சொன்னேன் கேட்டியா ?"என்று
மனசு தாண்டவம் ஆடும்...

"சரி ...
நான் தப்பு பண்ணிடேன்
மன்னித்து கொள்...
அப்புறம் திட்டு....
இப்ப தப்பிக்க வலி சொல்லு"....
இப்படி எல்லோர்
மனதுக்கும் மனசாட்சிக்கும்
உள்ளுக்குள்
ஒரு வாதம் பிறக்கும்....
இதனை மனசாட்சி என்றும்
சில நேரம்
கடவுள் என்றும் கூட சொல்கிறோம்.....

நாம் தவறு செய்தாலும்
தண்டனையில் இருந்து
காப்பற்ற வேண்டும் என்று சொல்லுகிற
சாதாரண மனிதர்கள் தானே நாம்...
காப்பாற்றியவர்களை கடவுள் என்று வர்ணிப்போம்
காப்பாற்ற வேண்டுதல்கள் வேறு...
தப்பித்த பின்
மீண்டும் தவறுகளோடு..........

பெறும் பாலான மனிதர்கள்
சூழ்நிலையால்
அநாகரீகமனவர்களாய்
மாறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது ...

நம்மை பற்றி சொல்ல...
நம் தவறை சுட்டிகாட்ட
நம் மேல் அக்கறை கொள்ள...
சுய விமர்சனம் செய்வதில்
நம் மனசாட்சியை விட
சரியான நண்பன்...
நலம் விரும்பி....
வேறு யாருமில்லை....

"பெரிய மனசாட்சி"
மனசாட்சி என்ற ஒன்று
இல்லாத மனிதர்கள்
எத்தனை பேர் என்று
அடுத்தவர்களை
சொல்லி விட்டு
நீங்கள் தப்பிக்க முயலாதீர்கள்...

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ஆசை இல்லை......

உன் கூந்தல் மேகம்......
உன் விழிகள் என் நெஞ்சம் ....
அதனால் தான்
நான் விழித்து கிடக்கிறேன்  
உன்னுள்......
இப்படி
ஆயிரம்
ஆயிரம் பொய் சொல்லி
காதல் செய்ய ஆசை இல்லை....
நிஜமாய்
நான்
இவ்வளவு தான்.....
உன்னால் முடியும் என்றால்
நாம் பயணிப்போம் ........
இல்லை என்றால்
விலகியே விசாரிப்போம்
நண்பர்களாய் ........

தொலைதூரம்.........

நான் தொலைதூரம்
சென்று விட்டேன்......
நாம் காதல் செய்த ஊரை விட்டு ........
நீயும் என்னோடு இல்லை
இப்பொழுதெல்லாம்......
ஆனாலும்
நம் நினைவுகள்
என்னை தொடர்ந்தே
வந்து காற்றில்
உன்னை சுவாசிக்க வைக்கிறது.........
உன் கூந்தல் மேகம்
உன் விழிகள்
என் நெஞ்சம்
அதனால் தான்
நான்
விழித்து கிடக்கிறேன்
உன்னுள் ...........

உன்னை பிரிந்து வந்த நொடிகள்..........

நீ
மறுத்த அந்த காதலை.....
நான்
அடிக்கடி
நியாபகம்
வைத்து கொல்வேன்.........
நான்
ஏக்கபடும்
விசயங்களை
தொலைக்கும் போதெல்லாம் .....
நான் கடந்து வந்த
வருடங்களை விட .........
உன்னை
பிரிந்து வந்த நொடிகள்......
இன்னும் வலிக்குதடி ....

உனக்காக
நான் துடித்தது போல்
நீ துடிக்கவும் இல்லை...
அந்த தூக்கமும்
என்னிடம் வருவதில்லை....

தன் மானத்தை தொலைத்து அழும் போது........

நண்பனே...
பணத்திற்காக...
பொய்யாய் சிரித்து
பொய்யாய் பேசி........
பொய்யாய் பழகி...
இப்படி...
இப்படி...
ஆனாலும்
உள்ளுக்குள் வலிக்குதடா
தன் மானத்தை
சில நேரம்
தொலைத்து
அழும் போது........
உனக்கு தெரியுமா?......
நான் குழந்தையாய்
சிரித்து மகிழ்ந்த
காலத்திற்காக
இன்று நான் ஏங்குவது?!!! .......

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

மரங்கொத்தி அல்ல ...நம் மனம் கொத்தி ....

ஒண்ணும் இல்ல........ அதுதான் காதல்.................

இந்த உலகத்தில்
எல்லோரும் தான் நினைப்பது மட்டுமே
சரி என்கிறார்கள் ...........
 
ஒரு காதல் மட்டுமே
வாழ்கையில் வரும்
அதுவே உண்மை காதல் என்கிறார்கள்
ஒரு காதல் செய்தவர்கள்.................

மறு காதல் செய்தவர்கள்
இது தான் உண்மை காதல் என்கிறார்கள்..............
பல பேரிடம் காதல் செய்பவர்கள்
அன்பிற்கு எல்லை இல்லை என்கிறார்கள்.............

காதல் கிடைக்காதவர்கள்
காதல் பொய் என்றே சொல்கிறார்கள்..........

ஆக மொத்தம் காதல்
என்ன ?.....

ஒண்ணும் இல்ல
அதுதான் காதல்.................

நம்ம நினைத்தால் அது காதல்
இல்லைனா
இல்லை ................
வேலை இல்லாதவர்களின்
ஆராய்ச்சி...........


காதல்.....
  


உன்னை போய் காதல் செய்து.....



அன்பான காதல் திருடி............
நான் உன்னை
பார்த்ததும் இல்லை................
பார்க்கவும் வேண்டாம்............
உன்னை யாரடி
என்னிடம் அறிமுகம்
ஆக செய்தது............
களவாடிய பொருட்களை
எங்கோ வீசி விட்டு
எதையோ வாங்கி செல்பவள் தானடி
நீ ...............
நீ எடுத்து சென்றதில்
நானும் கூட உன்னோடு................
எனக்கே தெரியாமல் நான் உன்னோடு
இருப்பதில் ஆச்சரியம் இல்லை........................
நான் உன்னோடு இருப்பதே தெரியாமல்
நீ வாழ்கிறாய் ...........
என் உயிர் தனியாய்........
உன் உடல் தனியாய்............
சுகமாய் நான் இல்லையடி..........
உன்னை நான் காதல் செய்து.......
உன்னை போய் காதல் செய்து...............
 

பொய் தானடி ......



உன்னை
நான்
காதலிக்கிறேன் ......................
உன்னை மட்டுமே காதலிக்கிறேன் ...................... இப்படி
காதல் செய்வது தான் சுகமானதடி...............
இதை உச்சரிக்கும் போதே  
ஒரு தாகம் வரும்
அது
காமம் என்கிறார்கள்..........
"காமம் என்ற 
காதல் "தான்
நீ............
நான் ..........
நாம் ..............
காமம் இல்லாத
காதல் கூட பொய் தானடி .................
 

வீணாய் போன அனுபவங்களை.....

 காதல் ,வீரம் ,
அன்பு ,பாசம்
இன்பம், துன்பம்,
நட்பு ,கற்பு,
பகை ,சொந்தம்,
வெற்றி,தோல்வி,
இப்படி இங்கு ஏராளமாய் ...................
ஏன் இத்தனையும் கற்கிறோம் ?...........

நாம் பெற்ற
பணம் , பேர், புகழ்,
அவமானம்,சாதனை
எதற்காக?.....
இத்தனை அனுபவங்களால்
என்ன பயன்?...............

மனிதர்களுக்கு மரணம் என்பது
மற்ற முடியாதது....
சந்தோஷமான வாழ்க்கையோ
துக்கமான வாழ்க்கையோ
எதுவானாலும்
நம்மை மரணம்
எப்படியும் கூட்டி சென்று விடும் ....

வீணாய் போன அனுபவங்களை
மரணம்
எங்கு கொண்டு போய் புதைக்கிறது?...............
 

அதிசயத்து போனேன்

என் கல்லறையில்
சில வருடங்களுக்கு பின்
தோண்டி பார்த்து
அதிசயத்து போனேன் ..........
ஆம்
அதில் நீ
உறங்கி கொண்டு இருந்தாய்.........
என் இதயத்தை
பாதுகாப்பாய்
வைத்து
எனக்கும் சேர்த்து
காதல் செய்தபடி...............

நான் இருட்டுக்குள் அழுதது போதும் ....

 உன் பெயர் என்ன என்பது தெரியாமல் ...
நான் தவிக்கும் வலி ...
உன் மனம் புரியாமல்
உன்னை கடக்கும் என்  காதலில் புரியும் ...

தீபங்களில் கொண்டாடும் இந்த தீபாவளியில் ....
நீயாவது ஒளி காட்டு என் அன்பு தோழியே!....
நான் கொஞ்சம் இந்த உலகைப்  பார்க்கிறேன் ....

அவள் நினைவாய்
நான் இருட்டுக்குள்
அழுதது போதும் ....

இப்படி சொல்வது பொய் ...............

 என்னை விட்டுபோன
என் அன்பான காதலனே!............
என்னை விட்டு போன
என் அன்பான காதலியே!...........
நீ என்னோடு
வாழ்வதை விட
நீ சென்ற இடத்தில
சந்தோசமாய் வாழ வேண்டும்........
அதற்காக
நான் பிராத்தனை செய்வேன் ......
எங்கிருந்தாலும்
நீ நலமோடு வாழ வேண்டும்...........
இப்படி
சொல்வது
பொய் ...............

என்ன விட்டு போய்
கஷ்டபட்டால் தான்
என் அருமை
புரியும்.............
நம்மை காதலித்தவர்கள்
நம்மை விட நன்றாக இருக்கிறார்கள்
என்பதை கேட்டு
காதலனோ
காதலியோ
சந்தோஷ படுறவங்க
அதிகமா குறைவு........

இது காதல்
இப்படித்தான்..........

பிரமித்து போன இரவுகள்....

பிரமித்து போன இரவுகள் ..................
ஆம்
நான்
விடிய விடிய
தூங்காத
அந்த இரவு ............

இத்தனை அழகியா நீ?!!!...........

உன்னை நான் பார்த்த
அந்த இரவு
உன்னை தூங்கவிடாமல்
தடுத்திருக்க வேண்டும்
என் உளறல்களால் ...

ஆம்....
அந்த கன்ன குழியில் தானடி
நான் தவம் கிடக்கிறேன்
உன் பெயரை உச்சரித்தபடி
உன் வரவுக்காக
தினமும் .............

இறந்த பின் யோகி ஆக்கிவிடுகிறார்கள்....

                       
                        உண்மை பேசும்
மனிதர்களை மட்டும்
அவன் வாழும் போது 
யாரும் கவனிப்பதில்லை ........ இறந்த பின்
யோகி ஆக்கிவிடுகிறார்கள்.........

அவன் புகழ்பாடுவதும்
அவனை கடவுளாக்கி ,...
தன்னை
ஒரு ஆன்மீகவாதியாக
வெளிபடுத்துவதையே
வேலையாக்கி விட்டார்கள் .........
யோசிக்க கூலி கேட்பவர்கள்
அதிகமாகி விட்டார்கள் ...............
ஒரு விசயம்...........
 
அந்த மனிதன் ............
இவர்கள் சொல்லும் அந்த தெய்வம் .................
சொன்ன வார்த்தைகளை
யாரும் கடைபிடிப்பதில்லை .............


இந்த உலகத்தில்
முட்டாள் தான்
அறிவுரை சொல்லி கொண்டிருப்பான்.......
எல்லாம் தெரிந்தும்
வெகுளி போல்
நடித்து கொண்டிருப்பவர்களே
இங்கு ஏராளம்................