என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

காதலுக்காய் தவிக்காதவரை...

எனக்காக நீ
வாழ்ந்தவளும் இல்லை..
ஆனால்
உனக்காக
நான் இறந்திருக்கிறேன்...

ஏன் என்றே
புரியாத வயதில்
அத்தனை வெறி உன் மேல் ..
அதனை காதல் என்றார்கள்...
அதை நீ என்ன சொன்னாய் ?
ஞாபகம் இருக்கிறதா?
இனக்கவர்ச்சி என்றாய்..
உன்னை போல்
மூடர்களுக்கு தெரிவதில்லை......
இனக்கவர்ச்சி
இருந்தால் தான்
காதல் வரும் என்று ...

என்னை போல்
இனக்கவர்ச்சிக்காய் இறந்தவர்கள் ,
வாழ்க்கையை
தொலைத்தவர்களின் வலி
உனக்கெப்படி புரியும்  
நீயும்
காதலுக்காய் தவிக்காதவரை....

கருத்துகள் இல்லை: