என் கல்வி
செலவுக்காய்
நான் வாங்கிய
கடனை கட்டுவதற்கும்....
குடும்பம் நடத்த
அப்பா வாங்கிய
புறநோட்டு காகிதங்களை
திரும்ப பெறுவதற்கும்.....
என்னை நம்பி இருக்கும்
என் தங்கை,தம்பிகளுக்காகவும்
எப்படி சொல்வது?...
என் வயது கடந்து போவதையும்...
என் இளமை தொலைந்து போவதையும்....
என்னை காதலிப்பதாய் சொல்லும்
என் காதலனும் கூட
என் சம்பள பணத்திற்காக
கணக்கு போட்டு
காத்திருப்பதை...
எப்படி
யாரிடம் சொல்வது?....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக