என்னால் தாங்கி
கொள்ள முடியாது
நான் உன்னை நேசிப்பதை விட
நீ என்னை நேசிக்கிறாய் என்றால்...
நானே
இந்த உலகில்
உன்னை
அதிகமாய் நேசித்தவனாய்
இருக்க வேண்டும் ...
உன் விஷயத்தில் மட்டும்
நான் சுயநலகாரன்...
நீ
கனவாய் இருந்தாலும்
என் கனவில்
மட்டும் தான்
வர வேண்டும்.....
உன்னை
யாரும் ரசிப்பதை
மட்டும் இல்லை...
உன் பெயரை சொல்லி
என்னை
தவிர யாரும்
அழைப்பதை கூட
விரும்ப மாட்டேன்...
உனக்கு தெரியுமா?
உன்னிடம் இருந்து வரும்
உன் உணர்வுகள் மட்டுமல்ல...
நீ வெட்டி போடும்
நகங்கள் கூட
எனக்கு
சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ....
என்னை தவிர
நீ யாரையும்
நேசிப்பதை
என்னால் தாங்க முடியாது...
என்னை விட்டு
நம் குழந்தைகளை
நீ நேசிப்பதை கூட
நான் விரும்ப மாட்டேன்....
உனக்கு தெரியுமா?...
" நான் இறக்கும் தேதி
தெரிந்து விட்டால்...
அதற்கு முன்
உன்னை கொன்று விடுவேன்"....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக