அறிவுரை என்பது
யாரும் கேட்காமல்
சொல்ல கூடாது என்பார்கள்...
இன்று
கேட்டாலும் சொல்ல கூடாது....
எல்லாம் தெரிந்தவர்கள்
அதிகம் ஆகிவிட்டார்கள்...
ஆம்,..
ஏதும் தெரியாதவர்கள்
அதிகம் ஆனதால்...
இன்றேபயிரிட்டு
இன்றே முளைத்து
இன்றே தின்று
இன்றே வெளி ஏற்ற வேண்டும்.....
இப்படி தானே அதிகம் இருக்கிறார்கள்...
அதனால் தான்
இன்று விதைகளுக்கு கூட
வெளிநாடுகளிடம்
எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம்...
நம் அகராதியில்
"வினை விதைத்தவன்
வினை தான் அறுக்க முடியும்"
என்று சொன்னவர்கள்
முட்டாள்கள் தானே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக