என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

நாகரீகம் பிறப்பதாய் ...

நட்பு என்று
ஆரம்பித்து
அந்தரங்கங்களை அலைபேசியில்
அவிழ்த்து போடும்
உறவை கொண்டாடுகிறார்கள்....

உண்மையான
நட்பையும்
காதலையும் கொல்கிறார்கள்....

எத்தனை பேர்
உண்மையாய்
கடைசிவரை
ஒருவரோடு மட்டும்
காதல் செய்கிறார்கள்...
காமம் கொள்கிறார்கள்?!!!...
கடைசியில்
தன்னையே
கெடுத்து கொள்கிறார்கள்
என்பதை யாரும்
ஏற்று கொள்ள கூட தயாரில்லை
அத்தனை வறட்டு பிடிவாதம்......

காலம் மாறும் போது
மாற்றம்
உலக நியதி தான் ...

காலம் மாறி போனதால்
உணவை வாய் முலம் சாப்பிடாமல்
பிறப்புறுப்பின்  மூலமா சாப்பிடமுடியும்?....

அதிமேதாவிகளாலும்
எதிர்வாதகாரர்களாலும் தான்
இன்று
எந்த கிரகத்திலாவது
காற்று இருக்கிறதா?என்று
தேடிக்கொண்டு இருக்கிறோம்......

இருப்பதை
தொலைப்பதில் தான்
நாகரீகம் பிறப்பதாய்
எண்ணுகிறார்கள்....

கருத்துகள் இல்லை: