என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

நட்பு தோற்று தான் போகிறது...

ஆண் ,பெண் நட்பு
இங்கு உள்ளவர்களுக்கு 
எப்படி கையாள்வது
என்று தெரியவில்லை...
இளமையில்
அடுத்தவர்கள் முன்பு
தனக்கு அதிக
ஆண் நண்பர்கள் உண்டு என்று
பெண்களும்...
அதிகபெண் நண்பர்கள் உண்டு என்று
ஆண்களும்
பெருமைக்காகவும்...
கவுரவதிற்காகவும் பழகுகிறார்கள்.....
தன்னை நிறைய பேர்
விரும்பவேண்டும் என்றும்  நினைக்கிறார்கள்...

நேரம் கிடைக்கும் போது
பொழுது போவதற்கு மட்டும்
இந்த நட்பு பயன்படுகிறது....
இதனை நம்பி
நேரத்தை தொலைத்தவர்களே அதிகம்...

அதிகமாய் நட்பை
தவறாக சரியாய் பயன்படுத்துகிறார்கள்...
நட்பு காதலாய் மலர்ந்தால் தான்
முக்கியத்துவம் பெறுகிறது....
இல்லை என்றால்
முகம் கூட தெரியா
நட்பாய் போய் விடுகிறது...
என்ன செய்வது?!!!....

உண்மையில்
காதல் முன்பு
நட்பு தோற்று தான் போகிறது...
நட்பு என்னவென்று புரியதவர்களிடம்
உண்மையான
நட்பு கொள்பவர்களுக்கு தான்
இங்கே
ஏமாற்றம் ..
கவலைகள்....
எதிர்பார்ப்பு இல்லாத 
நட்பு என்பதெல்லாம்
வார்த்தைகளில் மட்டும் தான் ...
நம் வாழ்க்கைக்கு அல்ல.....

கருத்துகள் இல்லை: