அன்றொரு நாள்...
உன்
ஈர இதழின் ஸ்பரிசத்தை
என் இதழில் பதித்ததும்....
நானே
மறைந்து போனேனடா......
சில இரவுகள்
அந்த ஈரம்
என் விழிகளில் தெளித்து
என்னை எழுப்பி விடுகிறது....
உன்னை
தேடியபடி நான்
இரவு முழுதும்
தேம்பி தேம்பி
அழுகிறேன்......
என்னை
விட்டு போக
உனக்கு
எப்படி மனம் வந்தது?!!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக