என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

மனிதன் கூட மண்டி போடுகிறான்....

காமம்
இந்த வார்த்தை கேட்டாலே
ஒரு அருவருப்பு...
சத்தமாக பேசினால்
நம்மை தவறாக நினைப்பார்களோ ?.
ஒரு பயம் ...

ஒழுக்கம்  கெட்டவர்கள் 
உபயோகபடுத்தும் சொல் ..
இப்படி
காமத்தை கலங்கபடுத்தும் 
மக்களே அதிகம்...
காமம் என்ற பெயரின்
மறைமுக சொல் காதல்...
புனிதமானதாக சொல்லி
முடிவுரை காமத்தில்..

எத்தனையோ பிரிவுகள்
ஜாதி,மதம் இனம்...இப்படி....
இந்த உலகத்தில்....

இந்த காமம் மட்டுமே
அனைவரும்
உயிர் இனம் என்பதை
நிரூபிக்கிறது ...

தன்னை
உயர்திணையாய் சொல்லும்
மனிதன் கூட
மண்டி போடுகிறான் காமத்தில்....

மனிதன்
தன் சந்ததிகளை தவிர
என்ன மிச்சம் வைத்திருக்கிறான்
பெரிதாய் இந்த உலகத்தில்.......

கருத்துகள் இல்லை: