என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 30 செப்டம்பர், 2010

மனிதன்...

மனிதன் பயந்தவற்றை
எல்லாம்
வழிபட தொடங்கினான்...
மின்னல்,இடி,
புயல்,
வெப்பம், குளிர்,
இவைகளுக்கு
பயந்த மனிதன் ...
இயற்கையை வணங்கினான்...

இயற்கையை
வெல்ல வெல்ல
அடுத்தவற்றை வழிபடுகிறான்...
அவனவன் இஷ்டம் போல்
வழிபாட்டு முறைகள்...
முன்னோர்களையும்
அவர்களுக்கு
உதவியவர்களையும்
கடவுளாய் வழிபட்டான்...

இன்று
நம்மையும் மீறிய
ஒரு மஹா சக்தி இருப்பதை
யாரும் மறுப்பதற்கில்லை...

அந்த சக்தி யார்?...
யாருக்கும் தெரியாது?...
"தான் கண்டதே தெய்வம்" என்றால்
பரவாயில்லை...
"தான் கண்டது  மட்டுமே
கடவுள்" என்றான் ...

தான் மட்டும்
வழிபட்டு கொண்டால் மட்டும்
போதாது
தன்னை சார்ந்தவர்களும்
வழிபடவேண்டும் என்று
கட்டாய படுத்துகிறான்...

தான் வழிபடும் தெய்வம் மட்டுமே
வலிமையானது...
மற்றவை சாத்தன் என்றெல்லாம்
சொல்லுகிறான்...

மதங்களால்
மனிதர்கள் பிரிந்து
சண்டை இடுகிறார்கள்...

இன்று
மொழி,இனம்,
நிறம்,மதம் ,
நாடு கடந்து
மனிதன் சிந்திக்க ,
பயணிக்க நினைத்து
மனித நேயம் தேடி அலைகிறான்!?...

ஏன்
இந்த மனிதர்களுக்கு மட்டும்
புத்தி வர
பல நூற் றாண்டுகள் தேவைப்படுகிறது?...

ஓ...
இதை தான்
ஆறறிவு கடவுள் என்கிறார்களோ?...

மடையர்களா!?..

இந்திய வரலாறு
நிறைய விசயங்கள் கொண்டது...
இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான்
ஒன்றாய்  இருந்தது என்பதை
மறுக்க முடியாது......

மக்கள் எப்போதும்
ஒற்றுமையாய் இருந்ததில்லை...
இங்கு மட்டும் இல்லை
உலகம் முழுதும்...

குறுநில மன்னர்களால்
அங்கங்கு கூட்டம்  கூட்டமாய்
மனிதர்கள் வாழ்ந்தவர்கள்...
பத்து தலைமுறைக்கு முன்னால்
எந்த மதமும் இல்லை
ஜாதிகளும் இல்லை...

நம் ஒற்றுமை குறைவை
காரணமாய் வைத்து
ஆங்கிலேயர்கள்
நம் நாட்டின்
இயற்கை வளங்களை
கொள்ளை அடித்து
தன் தேசத்தை(லண்டன்)
சொர்க்கபுரியாய் மாற்றி கொண்டார்கள்...

நாம் ஒன்று பட
எத்தனை ஆண்டுகள் ஆனது?..
செல்லும் போது
பிரிவினை செய்து விட்டு
வினை விதைத்தே சென்றார்கள்...

நாம் அனைவரும்
ஏதோ ஒரு விதத்தில்
உடன் பிறந்த சகோதரர்கள்...
இது வரலாற்று உண்மை...
ஆனாலும் நாம் அப்படியா?...
இன்னும்
நாம் வெறி கொண்டு
எதை சாதிக்கிறோமோ இல்லையோ...
நம்மையே அழித்து கொல்வோம்...

முஸ்லிம் இனவுணர்வுகளை கொண்டு
காஷ்மீர் பிரதேசத்தால்
இந்தியாவை அழிப்பதாய் சொல்லியே
பாக்கிஸ்தான் அழிகிறது...
தீவிரவாதிகளிடம் இருந்து
இன்னொரு சுதந்திரம் வாங்க
பாகிஸ்தானியர்கள் 
போராடித்தான் ஆக வேண்டும்...

தமிழ் உணர்வுகளை கொண்டே
இலங்கை அழிகிறது....
சிங்களனும், தமிழனும்
அடித்துகொண்டால்
வேற்று தேசத்தின்
அடிமைகளாய் மாறி
இன்னொரு சுதந்திரத்திற்காய்
அலையத்தான் போகிறார்கள்?...


இன்று
நாம் இந்தியர்களோ இல்லையோ
நாம் சகோதரர்கள்...
பிரிந்த பின்
நமக்கு நாமே
சண்டை இட்டு கொள்வதற்கா
சுதந்திரம் பெற்றோம்?...

சுதந்திரத்தை
தந்திரமாய் தந்து
நம்மை நாமே
கொன்று கொல்ல
செய்துவிட்டார்கள்...

வரலாறு என்பது
பொழுது போக்கிற்காய் படிப்பதல்ல...
நம்மை
திருத்தி கொள்ளதான் என்பதை
படிக்க மறுக்கிறார்கள்...

நம் ஒற்றுமைக்கெல்லாம்
வானத்தில் இருந்தெல்லாம்
கடவுள் குதிக்க முடியாது
மடையர்களா!...

மரணத்திற்கு பின்னால்...

மரணத்திற்கு பின்னால்...
நாம் யார்?...
எங்கே போகிறோம்?...
சொர்க்கமா?
நரகமா?..
சென்று வந்தவர்கள் யாராவது
இருந்தால்
தெளிவு படுத்தி கொள்ளலாம்...
அப்படி யாரும் இல்லை...

உயிர்,ஆத்மா...
அப்படி என்றால் என்ன?...
சரியானதை சொல்ல
எந்த மனிதனும் பிறக்க வில்லை...
பிறக்க போவதும் இல்லை...

எத்தனையோ நம்பிக்கைகள்...
எத்தனையோ மதங்கள்...
எத்தனையோ கடவுள்கள்... 
நாம் படைத்தாலும்...
"உயிர் போகும்"
"உடல் அழிந்து போகும்...


ஆத்மா அழியாது"
"மீண்டும்
வேறு உடலில்
ஆத்மாஜெனிக்கும்"...என்கிறோம்...
உலகில் முதன் முதலில்
எத்தனை மனித உயிர்கள் இருந்தன?...

உலகின் அன்றைய
மக்கள் தொகை என்ன?..
உலகின் இப்போதைய
மக்கள் தொகை என்ன?...
எத்தனை ஆத்மாக்கள் இருந்தன?..
இத்தனை ஆத்மாகளும்
எங்கிருந்து வருகின்றன?..
எங்கே போகின்றன?....
மனிதர்கள் குட்டி போடுகிறோம்?...
ஆத்மாக்களும் குட்டி போடுகின்றனவா?..

கேள்வி சரியா?...
பதில் யாருக்கும் தெரியவில்லையா?..
கடவுள்  நம்பிக்கையை
அழிக்க கேட்கப்படும்
கேள்வி இல்லை...
நம் மூட நம்பிக்கையை
ஒழிக்கும் கேள்வி?!...

எத்தனை நாள் தான்
நம்மையே
நாம்
ஏமாற்றி
கொள்ள போகிறோமோ?...

இருக்கட்டும்...
எல்லாவற்றிற்கும்
நாம் சொல்லும்
அதே பதில்
"நம்பிக்கை தான் 
வாழ்க்கை "என்று
இதற்கும் சொல்லி
தப்பித்து கொள்வோம்
மரணம் வரை...

நாம இருக்கமே....

இந்த பேரண்டத்தில்
சுற்றும்
பல கோடி நட்சத்திரங்களில்
ஒரு மூலையில்
நாம் பிறக்கிறோம்
மடிந்து போகிறோம்...

நாம்
பிரித்து போட்டு இருக்கும்
இந்த பூமியில்
பலநாடுகளாய்
நமக்குள்
பிரித்து கொள்கிறோம்...

பூமியில் இருக்கும்
மனித இனத்தில்
நிறத்தில்
இனத்தில்
மொழியில்
இந்தியன்...
அமெரிக்கன்...
மலேசியன்...
ஸ்ரீலங்கன்..
இப்படி சொல்லி கொண்டு
நம் தேசம்...
தேச பற்று...
மண்ணின் மைந்தர்கள் என்று
சொல்லுவதுமாய் இருக்கிறோம்.....

உலகம்...நாம்
அதில் வசிக்கும்
மனித உயிரினம்
என்றால்
நாம் ஒத்து கொள்ளுவதில்லை....
உலகம் பொதுவானது என்று
சொல்பவர்களை...
"இனப்பற்று இல்லாத துரோகியே"
"தேசபற்று இல்லா குடிமகனே" என்று
வெறுப்பாய்
ஒதுக்குகிறோம்...

இப்போது
சொல்லும் எதுவும்
ஏற்று கொள்ள போவதில்லை...

வேற்று கிரகவாசிகளால்
ஒரு நாள்
நாம் தாக்கபடும் போது தான்
நாம் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாய்
சொல்லுவோம்...
"நாம்
பூமியின் சொந்தக்காரர்கள்...
நமக்குள் பேதம் வேண்டாம்"...

"நம்மை அழிக்க நினைக்கும்
வேற்றுகிரகவாசியை
அழிக்கவேண்டும்
ஒன்று சேருங்கள்"...

"நாம் அனைவரும்
பூமியில் வாழும்
மனிதர்கள்...
சகோதரர்கள்"...

"ஒன்றுபடுவோம்...
வெற்றி பெறுவோம்"...
என்றெல்லாம் பேசுவோம்...
ஆனால்
அதுவரை
மண்ணுக்காக போராடுவோம்....
மனிதனை மனிதன்
அடித்து கொள்வோம்...
அடிமை கொள்வோம்...

நாம் இப்படி தானே...
தனக்கென்று
பாதிப்பு  வந்தால் தானே
"ஒற்றுமை ஓங்குக"என்று
குரல் கொடுப்போம்...
குரல் கொடுக்க சொல்லுவோம்....

நம்ம இருக்கோமே....
சொந்த மண்ணில்
மக்களுக்காய்
வாழும் மனிதர்களை
சொந்த தலைவர்களை
காட்டி கொடுத்து
கொன்றவர்கள் தானே
நாம்...

நமக்கெப்படி புரியும்?....
புரியாத விலங்குகளுக்கு தான்
சொல்லி தர வேண்டும்...
புரிந்தும் தெரிந்தும்
தவறு செய்யும்
நமக்கு யார் சொல்வது?...
"நாம்
மானிட அற்பப்பதர்கள் "என்பதை...

புதன், 29 செப்டம்பர், 2010

உன்னால்....

அழகான அவஸ்தைகள்...
எனக்கே
என்னை
மீட்டு கொடுத்தாய்....
நானும் கூட
தடுமாறுகிறேன்...
கொஞ்சம் வெட்கமாய்
வெட்கத்தில்...
அத்தனையும்
அழகாய் ஏன்?...

வெட்ட வெளியில்
நான் நடக்கிறேன்
இங்கும் அங்குமாய்...
இந்த வாடைகாற்று
என் மேல் உரசுகிறது ...
உனக்கும் அனுப்பி வைக்கிறேன்...
நான் சுகபடுவதை விட
நீ சுகப்பட
நான் ஏன் ஏங்குகிறேன்?!...

நானாய் வாழ
ஆசை கொள்கிறேன்...
நீ மட்டும் ஏன்?
ரெம்ப காதலாய்...
ஒன்று சொல்லவா?...
ஆம்
எனக்கும் வெட்கம்
உன்னால்...

இந்த இரவெல்லாம் நீ...
இனி  வரும் இரவெல்லாம் நீ...
நீயே சொல்
எது சுகம் எனக்கு?!...

மெல்லியதாய் நாட்கள் ...
மெலிதாய்
வெகுவாய்...
ரிதமாய்...
ஏன்?
பல நாட்களாய்...
இல்லை
இல்லை...
இந்த சில நொடிகளில்
ஏன்?
மெல்லிசையாய்....

நான் யார்?..

நான் யார் என்றேன்...
நீயா என்றேன்?...
நீ தானா என்றேன்...
நீ தான் என்றேன்...
இத்தனை
அருகில் இருந்தது
நீயா?...
என்னுள்
இடைவெளி தந்த
காதல் நீயா?...
 
வாழ்க்கை புதிராய்
இருக்கிறதென்றார்கள்...
அப்படியா என்றேன்..
இன்று
புதிராய் இருக்கிறது
நானே நானா?...

வானம் ஏதோ
தூரமாய்
இருக்கிறதென்றார்கள்..
நான்
இப்போது வானத்தில் பறக்கிறேன்...
இது ஒன்றும்
தூரமாய் தெரிய வில்லை...
ஆஹா..
நட்சத்திரங்கள்
ஏதோ நினைவு படுத்துகிறது...
ஆமாம்
நீ யார்?...

.


காதல்

என்
கடந்த  கால
கால்தடங்களை கண்டுபிடித்து
பின் தொடர்ந்தேன் ..
உன்னில்
போய் முடிவதேனடி...

காதல்
எதையும்
செய்யும் என்று கேட்டேன்?...
நீ
அதற்கும் மேலே
அத்தனையும்
செய்தாய் ஏனடி?......

மவுனமாய்
நகர்கிறேன்...
என்னோடு பேசுபவர்களிடம்
பதில் சொல்லாமல் உளறியபடி...
நானாய் வெட்கம் கொள்கிறேன்...
நீ அருகிலும் தொலைவிலும்
இல்லாத பொழுதுகளில் கூட...
சுகம்...
சுகமாய்...
உன் சுகம்
என்ன என்று தெரியாமலே!...

எனக்கு காதல் பிடிக்கும்...
எனக்குள் காதல் வருமா?...
என்னையே
கேட்டு கொண்டிருந்தேன்
இத்தனை நாள்...
ஏன் உன்னிடம்
இத்தனை நாள் கேட்கவில்லை?....





வெள்ளி, 24 செப்டம்பர், 2010

21st Century . . .







21st Century...

Our communication - Wireless

Our  dress - Topless

Our  telephone - Cordless

Our  cooking - Fireless

Our  youth - Jobless

Our  food - Fatless

Our  labour - Effortless

Our  conduct - Worthless

Our  relation - Loveless

Our  attitude - Careless

Our  feelings - Heartless

Our  politics - Shameless

Our education - Valueless

Our follies -  Countless

Our  arguments - Baseless

Our  boss - Brainless

Our Job  - Thankless

Our Salary  -  Very less !!!



  



 
 









நிலைகள் கடந்தது...

காதல்
விட்டு கொடுத்தலில் மட்டும்
வந்து விடுவதில்லை....
நமக்குள் இருக்கும் அன்பின்
வெளிப்பாடு தான் காதல்...

காதல்
கற்காலம் முதல்
எத்தனையோ காதலர்களை
சந்தித்து வருகிறது...
இந்த மண்
எத்தனையோ
காதல் கண்டிருக்கிறது?...

"காதல் என்பது
பிச்சை இல்லை...
யாசித்து பெற்று கொள்வதற்கு
ஒருவருக்கு மட்டும்
தன்னையே கொடுக்கும் தானம்"...

உண்மையான
காதல் பயப்படுவதில்லை...
உண்மையான காதல்
மலர்ந்து விட்டால்
மறைத்து மூட முடியாது...
நேசித்தவர்களிடம்
உடனே
வெளிப்படுத்தி விடும்...

தெய்வீக காதல் என்பது...
நேசிக்க தொடங்கியதிலிருந்து
ஒன்றாய்
உயிர் பிரியும் வரை
நிமிட நிமிடமாய்
காதலிக்கும்
அற்புதமான அதிசயம்...

காதல் வயப்படாத
மனிதர்கள் இருக்க முடியாது...
காதல்
பல்வேறு நிலைகள் 
தாண்டி இருக்கிறது...

தனிநபர் ஒழுக்கம்...

காதல் ,கற்பு இரண்டும்
வெவ்வேறல்ல...
அனைத்தும்
ஒழுக்கத்தை மையபடுத்துவதே....
ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கொள்கையை
உருவாக்குவதே காதல்...

நம்மால்
கற்பை
கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக
கற்பு நெறியை பற்றி
தவறான கருத்தை
வகுக்ககூடாது...
ஏளனபடுத்தகூடாது...

கற்பு நெறி என்பது
தனி நபர் ஒழுக்கம்...
எப்போதும் 
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்...
அது
நம் வாழ்க்கையை
உருவாக்கும்...

"உயர்ந்தோர் பத்தினியை சிறப்பிப்பர்"...
கற்பு
"பெண்ணை அடிமை படுத்த 
பயன்படுத்தப்படும் ஆயுதம் "என்று
பெண்களே
இழிவு படுத்தி கொள்ள வேண்டிய
அவசியம் இல்ல...

கற்பு ஆண்,
பெண்
இருவரின்
தனி நபர் ஒழுக்கமே....

யார் சொன்னது?...

யார் சொன்னது?...
நான் காதலிக்க மாட்டேன் என்று...
பாதி பல்லை வைத்து கொண்டு
பேருந்தில் ஏறுவதற்கு
முன்பிருந்து
பற்பசை விளம்பரம் போல்
பல்லை காட்டி கொண்டிருந்தால்
எங்கிருந்து
எனக்கு காதல் வரும்?...

எனக்கு
காதல் வராதென்று
யார் சொன்னது?..
பேருந்தில்
பயணசீட்டு கூட வாங்காமல்
நிறுத்தம்
வருவதற்கு முன்
இறங்கி ஓடும்
அக்கறை இல்லாத
ஆடவனிடம்
எனக்கு
எப்படி காதல் வரும்?...

காதல் கடிதம்
எனக்கு கொடுக்கும் முன்பே
ஏற்கவில்லை என்றால்
அடுத்த வாரம்
அருகில் இருக்கும்
என் தோழிக்கும் சேர்த்து
பார்வை பதித்து
புன்னகையுடன் கடிதம் கொடுத்தால்
எங்கிருந்து
காதல் வரும் எனக்கு?...

கோமாளிதனமாய்
இவர்கள்
காதலித்தால் கூட பரவாயில்லை...
காதலை கபடபடுத்துகிறார்கள்...

நானும்
கட்டாயம்
காதல் செய்ய வேண்டுமானால்
ஒரு வேண்டுகோள்
"என் மேல் கூட ஆசை படாத
ஏக பத்தினி விரதனாய் காட்டுங்கள்"...
"மேகனையாய் கூட
போக தயார்
அவர் உள்ளம் கவர"....


கடவுள் எந்த மதம்?...

ஏசு நாதர்,
முகமது நபி,
புத்தர்,
மகாவீரர்,
போன்ற
இறை தூதர்கள்...
"என் பெயரில்
மதம் ஆரம்பித்து இருக்கிறேன்...
உலகம் முழுதும் பரப்புங்கள்...
என் மதத்தில்
அதிகமாய்
ஆட்களை சேர்த்து விட்டால்...
நீங்கள் செய்த பாவத்திற்கு
சிறப்பு சலுகை கொடுத்து
மன்னிப்பு வழங்க
கடவுளிடம்
சிபாரிசு செய்கிறேன்"
என்று சொன்னார்களா?!...

"மனிதர்களிடையே
ஜாதி,மதம்,இனம் என்ற
நிறைய பேதங்கள் உண்டு ....
நீங்கள்
உங்களுக்குள்
ஜாதி ,இன மத கலவரங்கள்
உண்டு பண்ணி,
எங்கள்
பெயரை சொல்லி கொண்டு
சண்டையிடுங்கள்"...
என்று சொன்னார்களா?... 

எத்தனை பேருக்கு தெரியும்?...
உலகில் மொத்தம்
எத்தனை
மதம் உண்டு என்று தெரியுமா?...
எத்தனை
கடவுள் உண்டு என்று தெரியுமா?...

கடவுள்
எந்த மதம்?.....

"உலகில் அனைவரும்
கடவுளின் குழந்தைகள்"...

"ஒருவருக்கொருவர்
அன்பாய் இருங்கள்"....

"தவறுகள் செய்து
பாவத்தை தேடாதீர்கள்"...
"
அன்பை வளர்த்து
மகிழ்ச்சியாய் இருங்கள்" என்று...

அவர்கள் சொன்ன
நல்ல கருத்துகளை
எல்லாம் மறந்து
மனிதர்களுக்கிடையே
பிரிவினை ஏற்படுத்தி
இறை தூதர்களையும்...
இறைவனையும்
கலங்கப்படுத்துகிறார்கள்...

"பிறரை
நேசிக்கா விட்டாலும்
பிறரை துன்புறுத்த கூடாது"...

உங்களுக்கு கிடைக்காத
அன்பை
நிலை பெற செய்ய
உங்களால் முடிந்த
அன்பை
பிறருக்கு பரிசளித்து செல்லுங்கள்...
இந்த உலகம்
உங்களை
நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கும்....

அழிக்க முடியாது...

"ஒரு பெண்ணின்
காதலை அழிப்பது
அவளை
கற்பழிப்பதற்குச் சமம்"...

கற்பழிப்பதற்கு
எந்த
மதமோ ,மனிதர்களோ
ஆதரவு அளிப்பதில்லை...

ஒருவரிடம்
காதல் கொண்ட
பெண்ணை
வலு கட்டாயமாக
இன்னொரு ஆணுடன்
நம் சுய நலத்திற்காகவோ
சுய கவுரவதிற்காகவோ
இணைத்தால்
அது
விபசாரத்திற்கு ஒப்பானது...

நம்மால்
காதலர்களின்
காதலில் உண்டான
சாட்சிகளை அழித்து விடலாம்...
அவர்களின்
மனசாட்சியை
அழித்து விட முடியாது....

ஆன்மிகம்...

இறைவா!
விளையாட்டுதனமாய்
உன்னை சுற்றி வந்ததும்
உன் மேல் ஏறி
ஆட்டம் போட்ட போதும்
நீ
என் மேல் அன்பும்
அக்கறையும் கொண்டிருந்தாய்...
இன்று 
நான் பத்தியம் இருந்து
உன் காதில் எதிர்பார்ப்போடு
என் குறையை
உன்னிடம் கூறியும்
நீ
அதை பெரிதாய்
எடுத்து கொள்ளவில்லை...
உன்னிடம் தான் கற்று கொண்டேன்
"எதிர்பார்ப்போடு
யாரிடமும்
அன்பை பொழிய கூடாதென்று"...

கடவுள்
நம்மைக் கேட்டுத்தான்
நமக்கு
எதையும் கொடுப்பதில்லை...
கேட்காமலேயே
நிறைய கொடுத்திருக்கார்...
கொடுத்ததற்கு
நன்றி சொல்லலாம்...

"எனக்கு
கேட்டதையெல்லாம்
தந்தால் தான் இறைவன்"என்று
வாதாட கூடாது...

நம்ம பெரிய ....


தன்னை ஒரு
பொதுநலவாதியாய்
மற்றவர்கள் நினைக்க வேண்டும்...
கடவுளே கூட
நம்மை பெருமையாய்
நினைக்க வேண்டும் என்றெல்லாம்
நாம் நினைப்பதுண்டு...

"எனக்கென்று
நான் கடவுளிடம்
வேண்டி கொள்வதில்லை...
உலகத்தில் இருக்கும்
எல்லோரும்
நன்றாக இருக்க வேண்டும்" என்று தான்
வேண்டுகிறேன்...

இப்படி மற்றவர்கள் பேசி
நான் கேட்டிருக்கிறேன்...
இவை உண்மையா?...
நாம் வேண்டினால்
எல்லோரும்
நன்மை அடைந்து விடுவார்களா?...

முதலில்
நம்ம வேலைய பார்க்காமல்?...
பெரிய ....??....

நல்லவர்களை மட்டும்...

நல்லவர்களை  மட்டுமே
நாம் சந்திக்க வேண்டும்...
நல்லவர்களோடு
மட்டுமே பழக வேண்டும்...

உலகில் எல்லோரும்
நல்லவர்களாகவே
இருக்க வேண்டும்....
இப்படி நல்லவர்களை
தேடி கொண்டே இருந்தால்...
நம்மால்
வாழவே முடியாது....

நல்லவர்களோடு மட்டுமே
பேசுவேன் என்றால்...
பேச தெரிந்தும்
ஒரு நாள்
நாம் ஊமையாய்
போய் விடுவோம்...

நம்மிடம்
எப்படி நடந்து கொள்கிறார்களோ?...
அதை மட்டும் பார்த்து
நமக்கு பிடித்திருந்தால்
நாம்
பழகி கொண்டு
பயணிக்க வேண்டும்....

எத்தனை வருடங்கள்
வேண்டுமானாலும்
மற்றவர்களின் குறைகள்
பேசி கொண்டு போனால்
பேசி கொண்டே இருக்கலாம்...
"குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை"....
நமக்கே சில நேரம்
நாம்
நல்லவர்களாய்
இருக்க முடியாது....

வேலை அற்ற
வீணர்களா நாம்?...











தெரிவதில்லை...

காதலர்கள்  இணைவதற்கு
காதலர்களுக்குள்
இனம், ஜாதி ,மதம்
எப்போதும் தடையாய் 
இருந்ததில்லை....
உலகத்தில் உள்ள
மற்ற மனிதர்களுக்கும்...
ஊரில் உள்ள
மற்றவர்களுக்கும்
தடையாய் இருப்பதன்
காரணம் புரியவில்லை...

உலகில்
ஜாதி ,இனம் ,மதம்
"இப்படி ஒன்று உலகில் இல்லை" என்பதை
காதல் சொல்லி இருக்கும்...
இல்லை
அவர்கள் கொண்ட காமம்
சொல்லி கொடுத்திருக்கும்?...

இனபெருக்கம் கொள்ள
ஆணுக்கு ஆணுறுப்பும்...
பெண்ணுக்கு பெண்ணுறுப்பும்
இருந்தால் போதும்...
மனித இனம்
தோன்றி கொண்டே இருக்கும்
மதம்
ஜாதி இல்லாமல்
இருந்தால் கூட...

காமம்
மனிதர்களை
தக்க சமயத்தில் 
அடிமையாக்கி  விடும் என்பது
நிறையா பேருக்கு
தெரிய வில்லை...





வியாழன், 23 செப்டம்பர், 2010

கேவலமாய் தான் யோசிப்போம்....

பெண்கள்
அழகு நிலையம்
தொடங்கிய காலத்தில்
அதனை நடத்துபவர்களை
கேவலமாய் பேசியவர்கள் உண்டு...

இன்று
அந்த தொழில்
கவுரவமான தொழிலாய் மாறி விட்டது...
போட்டி போட்டு
ஆரம்பித்து விட்டார்கள்...

எல்லாம் பணம்...

ஒரு காலத்தில்
செருப்பு தொழிலை செய்பவர்களை ...........என்றும்....
தப்பு அடிபவர்களை ..........என்றும்.....
சலவை செய்பவர்களை .............என்றும்....
முடி திருத்துபவர்களை ...........என்றும்....
தொழில் அடிப்படையில்
அவர்களை
கீழ் ஜாதி இனத்தவறாய் பிரித்து
மனிதர்களுக்குள்ளே
மனிதர்களை
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றோம்...

இன்று
இதே தொழில்களை
உயர் ஜாதி என்று சொன்னவர்கள் கூட
செய்கிறார்கள்...

எங்கே  போனது
இவர்களின்
மானம் தாங்கிய பேச்சுகள்?....

எல்லோருக்கும்
உணவு ,உடை
வாங்க தேவை பணம்...
இதில் மனமோ..
மானமோ..
யாரும்
பார்க்க தயாரில்லை....

ஜாதி தொழில் அடிப்படையில்
பிரிக்கப்பட்டது என்பது
எல்லோருக்கும் தெரியும்...
அப்படி பிரித்தது போல்
இன்று
இப்போது அதை செய்யலாமே?...

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்...
மனிதன்
ஏதாவது காரணம் சொல்லி
அடுத்தவர்களை
குறை பாடுவதில் 
மட்டபடுத்துவதில்
கெட்டிக்காரன்!!!?...


"ஜாதிகள் இல்லையடி பாப்பா"என்று
சொல்லி தரும் ஆசிரியரை கூட
ஜாதி என்ன? என்று
கேட்பவர்கள் தானே நாம்...

ஆனால்
பணம் என்றால்
எந்த தொழில்
செய்யவும் தயங்க மாட்டோம்...
கொஞ்சம் பணம் சேர்ந்தால்...
யாரையும் மதிக்கமாட்டோம்...
மற்றவர்களை அடிமை படுத்த
எதையும் செய்பவர்கள் தானே
நாம்...
விபசாரம் கூட...

இத்தனை
வியாக்கியானமாய் பேசும்
நம்மை
யாராவது கேட்டால்
நம்மை
உயர்ந்த ஜாதியாய்
காட்டி கொள்வதில் தானே
பெருமை கொள்கிறோம்...

உலகில்
எல்லோருக்கும் தெரியும்
இனம், ஜாதிகள் இல்லை...
எல்லோரும் மனிதர்கள் தான் என்று..
நாம் கொஞ்சம்
வறட்டு பிடிவாதம்
பிடித்தவர்கள் தானே...

விலங்குகள் செய்யாத
ஒன்றை செய்தால் தானே
நாம் மனிதர்கள்...
விலங்குகள்
என்ன ஜாதி,இன சண்டையா போடுகிறது?...

அவையெல்லாம்
ஐந்தறிவு  படைத்தவைகள்...
நாம்
ஆறாம் அறிவு படைத்தவர்கள்
இல்லையா?...

கேவலமாய் தான்
யோசிப்போம்...


வெற்றி தானாய் வரும்...

நீங்கள்
செய்து முடிக்க வேண்டிய
வேலைகளை
முதலில்
கற்பனை செய்து கொள்ளுங்கள்...

அடுத்ததாய்
அதற்கான
முறையை வகுத்து
கண்டுபிடித்து
ஏற்ப்பாடு செய்து
ஒரு வழியை  உருவாக்குங்கள்...

அதில்
மேலும்
முன்னேற்றங்களை
கண்டுபிடியுங்கள்...

அதில்
அனுபவம் உள்ளவர்களிடம்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...

வெற்றி தானாய் வரும்...
வெற்றி பெற்றவர்கள் யாரும்
கவுரவம் பார்த்ததும் இல்லை...
கவுரவம் பார்ப்பவர்கள்
வெற்றி பெறுவதில்லை...
நமக்கு வேண்டியதெல்லாம்..
வெற்றி....
வெற்றி...







தன்னம்பிக்கை...

நம்மால் மட்டுமே
எல்லாம் நடக்கிறது ...
நாம் இல்லையென்றால்
எதுவும் நடக்காதது போல்
நினைக்கிறோம்...
நம் குடும்பத்திலும் சரி...
நாம் வேலை பார்க்கும் இடத்திலும் சரி...
கண்டிப்பாய்
நாம் இல்லாமலும் நடக்கும்
மறந்துவிடாதீர்கள்......

நம் தாத்தாக்கள் இல்லாமல்
நம் அப்பாக்கள் இல்லையா.?....
நம் அப்பாக்கள் இல்லையென்றால்
நாம் வாழ மாட்டோமா?...
நாம் இல்லையென்றால்
நம் சந்ததிகள் வாழாதா?..
நாம் இல்லையென்றால்
உலகம் நின்றுவிடுவது போல்
நாம் நம்மையே
உயர்வாய்
நினைத்து கொள்வோம்
சிலநேரம்...

பாசம்,அன்பு என்பதை
ஒத்திவைத்து
யோசித்து பாருங்கள்....

நம் குடும்பத்தில்
முக்கியமான பொருளாதாரம்
தரக்கூடியவர்
இறந்து விட்டால்...
முதலில் அதிர்சி அடைவோம்...
மயங்கி கூட விழுவோம்....

இல்லை...
அப்படி
இறந்திருக்க வாய்ப்பில்லை என்று
ஏற்று கொள்ள மாட்டோம்....

அடுத்து
நடந்துவிட்டதோ என்று
பயம் வரும்...

அடுத்ததாய்
கோபம் வரும்
ஏன்?...
இப்படி
இடையில் விட்டு போனால்
என்ன செய்வதென்று தெரியாததால்...

அடுத்ததாய்
நம் வாழ்கை
என்ன ஆகுமோ? என்ற
கவலை பிறக்கும்...

கொஞ்ச  நேரம்...
கொஞ்ச நாட்கள் கழித்து..
இப்போது மனதை
தேற்ற தொடங்குவோம்..
அதிலிருந்து
வெளி வரயோசிப்போம்...
வேறு வேலையில்
ஆர்வத்தை மாற்றுவோம்...
நம்மை
நாமே
சுயமாய் இயக்க கற்று கொள்வோம்...

யாரும் யாருக்காகவும்
இறந்து விட முடியாது...
தற்கொலை
செய்து கொள்ளும்
கோழை அல்ல நாம்...
மற்று வழியில்
பயணம் செய்யலாம்...
மரணம்
தானாய் வரும் வரை...

நாம் மட்டும்
இல்லையென்றால்
நம் குடும்பம்
நம் பரம்பரை
அழிந்து போகும் என்று யோசிக்காமல்
வாழ வழி கற்று கொடுங்கள்...

உங்களை மட்டும் நம்பி
இருப்பவர்களுக்கு
நீங்கள் நன்றாய் இருக்கும் போதே
தன்னம்பிக்கைகளை
விதைத்து செல்லுங்கள்......
சுயமாய்
வாழட்டும்...

நீங்கள் பொருளாதாரம் தருவதால்
சில வருடங்கள் வேண்டுமானால்
உங்களால்
உங்கள்
குடும்பத்தில் உள்ளவர்கள்
சுகமாய் வாழ முடியும்...
தன்னம்பிக்கை
கற்று கொடுத்து பாருங்கள்...
நீங்களும் நெடுநாட்கள் வாழலாம்....



எனக்கும் மனசாட்சிக்கும் ஏற்படும் யுத்தம்...

நான்
எழுதியவற்றை  கவிதைகள்
என்று சொல்ல முடியாது...
அதற்கு தகுதியானவை கிடையாது....
என் மனதில் பட்ட
நான் பார்த்த,கேட்ட
வார்த்தைகளின் தொகுப்பு...
உரைநடை கட்டுரைகளே இவை...

நான் யாருக்காகவும்
இதனை எழுதுவதில்லை...
என்னோடு மனசாட்சியோடு
சண்டை போடுவதை
மடக்கி மடக்கி எழுதி வைக்கிறேன்...

நான் சிலநேரம்
என்னை
என்னில் இருந்தே
என்னையே
சிலநேரம் 
உமிழ்ந்து கொள்கிறேன்...
என்னை காப்பற்றி கொள்ள
உதவும்
இந்த உளறல்களை
நானே சில நேரம் ரசிக்கிறேன்...

சமூகத்தில் நான்
காண்கின்ற விசயங்களுக்கு
என்னால் தீர்வுகள்
கொடுக்க முடிவதில்லை...

என் மனம்,உடல்
கெட்டு போகாமல் இருக்கவும்...
"நமக்கு ஒவ்வாதவற்றை
நாம்  சுமப்பது
நமக்கே  பாதிப்பு தரும் "என்பதால்
என் பேனா முனை
வழியே
என் சில வலிகளை
வாந்தி எடுத்துக் கொள்கிறேன்...

நாம் பிறரை திருத்த முடியாது
அது நம் வேலையும் அல்ல...

"நம் எதிரிகளுக்கு
பாடம் புகட்ட
சரியான வழி
அவர்கள் முன்பு
நாம் சிறப்பாக
வாழ்த்து காட்டுவது தான்"...

அதற்கான வழியில்
எனக்கு உதவுவது
இந்த உரைநடை கவிதைகளும் தான்......

கண்ணீர் துளிகள்...

உன்
அன்பான கணவன்
நான்...

உன் வாழ்க்கையில்
நீ விருப்பப்பட்ட
நிறைய ஆசைகளை
உன் தந்தை
நிராகரித்ததுண்டு...
அதையெல்லாம் கேட்டு
நான் உனக்காய்
நிறைவேற்றி வைத்தேனடி........

உனக்கு தெரிந்திருக்காது...
நானே
உணவின்றி
இருந்த நாட்கள் உண்டு...
நீ
என்னிடம் வந்த பிறகு
ஒரு நாளாவது
உண்ணாமல் இருந்திருப்பாயா?...

உன் தந்தை
உனக்கு தராத..
என் தந்தை
என் தாய்க்கு தராத...
சுதந்திரம்
நான் உனக்கு தந்ததுண்டு....
எங்கள் பரம்பரையில் 
பெண்களுக்கு சுதந்திரம் 
இதுவரை
தந்தது இல்லையடி....

உனக்கு
கை பேசி
வாங்கி கொடுத்தது
என்னையும்
நம் குழந்தைகளை தொடர்பு
கொள்ளதானடி...
நம் குடும்பகவுரவத்தை
வீசி எறிய இல்லையடி...

பெண்ணடிமை
கொடுமை பற்றி
உனக்கு தெரியுமா?...
என் தாய்க்கு
கல்வி கற்க கூட
அனுமதிக்கவில்லையடி...
உன் சுதந்திரத்தின் அருமை
உனக்கு தெரியவில்லையடி...

எனக்காய் நீ
உடன்கட்டை ஏறி
உயிர் தர வேண்டாம்...
ஒன்றை யோசித்து பார்...
நம் பிஞ்சு குழந்தைகள்
என்ன குற்றம் செய்ததடி?....

என்னால்
இதற்கு மேல்
சொல்ல நா.... கூசுதடி...
உன்மேல் இத்தனை
பிரியம் கொண்ட
எனக்கு
துரோகம் செய்ய
உன்னால் எப்படி
..................
..................???







புதன், 22 செப்டம்பர், 2010

நுகர்வு கலாச்சாரம்.....

தற்போதைய
தலைமுறை
ஆண்,பெண்களிடம்
புதிது புதிதாய் 
எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்ற
எண்ணம்
இருபாலருக்கும் பெருக
ஆரம்பித்து உள்ளது...

வருடகணக்கில்
கார் வைத்திருந்த
காலம் போய்..
வருடத்திற்கு
ஒரு முறை கார் 
மாற்றவேண்டும் என்ற
எண்ணம் பெருகி விட்டது...
செல்போனைகூட 
மாதாமாதம் மாற்றும்
மனநிலை வந்து விட்டது...

அம்மா,அப்பா,
அண்ணன்,தம்பி,
அக்கா,தங்கை என
முன்பு உறவுகளுக்கு
முக்கியதுவம் இருந்தது...
இதன் அடிப்படையில்
நமது சமூகமும்
மேன்மையாக இருந்தது...

முன்பெல்லாம்
குடும்ப கவுரவம்,
மானம் போய் விடும் என்ற
பயம் கூட
பலரை பாதுகாப்பாய்
வைத்திருந்தது நிஜம்...

இன்று உறவு முறைகள்
பின்னே தள்ள பட்டு
சுயநல சுகங்கள் மட்டுமே
முதன்மைபடுத்தபடுகிறது...
நுகர் பொருட்கள் போல...

குடும்பம் என்றால்
இப்படி தான் இருக்கும் என
பேசி தீர்த்து கொண்டவர்கள் கூட
இன்று கணவன்
மனைவிக்குள் பிரச்சனை என்றால்...
தான் எதிர்பார்க்கும்
சுகம் கிடைக்கவில்லை என்றால்...
தனக்கு அறிமுகமான
எதிர் பாலினதவரிடம்
அதை தேடி கொள்ள
மனரீதியாக தயாராகி விடுகிறோம்...

செக்ஸ் கூட
நுகர் பொருளாய் மாறிவருகிறது...
இப்படியே போனால்
நாளை
அன்பு,நேசம்,காதல் போன்ற
உறவு முறைகள்
நம்மிடம் தொலைந்து போகும்...
நாளைகளில் 
மனிதர்கள் இருப்பார்கள்
மனிதம் இருக்காது...

நமக்கென்ன என்று
நாம் போய் கொண்டிருந்தால்
நாளை 
நம்மை சார்ந்தவர்கள்
தடம் மாறி
நமக்கு அவமானம் தேடி தரலாம்...

என்னால் மட்டும்
இந்த
உலகை மற்ற முடியுமா?என்ற
கேள்வி கேட்டு விட்டு
எல்லோரும்
அமைதியாக இருக்கலாம்...

நம்மால்
எந்த அளவு முடியுமோ
அதை முயற்சிக்கலாமே?...
குறைந்த பட்சம்..
நாமாவது
தவறு செய்யாமல் இருக்கலாமே?...

நீங்களும் சாதிக்கலாம் ...

பெண்களுக்கு
என்ன சுதந்திரம் வேண்டும்?...
விரும்பியவரை
திருமணம் செய்ய வேண்டும்...
விருப்பமில்லை என்றால்
தனித்து வாழ வேண்டும்...
திருமண பந்தம் இன்றி
ஆணுடன் சேர்ந்து வாழ வேண்டும்...
இவை போதுமா?..

பல ஆண்களோடு
உறவு கொள்ளும்
பாலியல்
சுதந்திரத்திலா
பெண் சுதந்திரம் இருக்கிறது?...

ஆண்கள் போல்
இருக்க வேண்டும் என்பதற்காக
மது அருந்துதல்
புகை பிடித்தாலும் அல்ல சுதந்திரம்...
அவை
ஒரு பழக்கம் தானே தவிர
சுதந்திர மனப்பான்மையோடு
தொடர்புடையவை அல்ல...

பெண்மை என்றால்
மென்மை...
கனிவு...
சாந்தம்...
அழகு மட்டும் அல்ல...

அறிவு,
வலிமை,
ஆற்றல் என்று
ஏன் யோசிக்க கூடாது?...

உங்களை
யாரும்
சாதிக்க கூடாது என்று
சட்டம்
போட்டு வைத்துள்ளார்களா?...
நீங்களும் சாதிக்கலாம்
வாருங்கள்...





நரபலி...

யாரையும் அத்தனை
சாதாரணமாய்
குறை சொல்லி விட முடியாது...
அடிப்படை காரணம் இன்றி
யாரும்
எந்த தவறும் செய்வதில்லை...
எங்கோ?
ஏதோ?
ஒரு தேவை ஏற்பட்டிருக்கும்...
பற்றாக்குறை இருக்கும்...

காதலிலும் சரி
காமத்திலும் சரி...
முதல் பலி
பெண்ணாக தான் இருக்கிறார்கள்...
காதலையும்
காமத்தையும்
அடக்க முடியாதவர்களா 
அவர்கள்?...

உண்மையாக
கணவனின் தொல்லைகளில்
இருந்து தப்பிக்க நினைக்கும்
பெண்களுக்கு கூட
"கள்ளகாதல்" என்று
அசிங்கபடுத்தி
பெண்களை நரபலி
கொடுக்க தான் செய்கிறோம்?...

ஞானி....

ஞானி என்றால்
முற்றும் துறந்த முனிவர்
காமம் சுரக்காத
மனித  கடவுள் என்றல்லாம்
சொல்லிகொள்கிறோம்...
காமம் வராமல் இருக்க
அவன் ஒன்றும்
பசி இல்லாத மனிதன் அல்ல...

மனிதனாய் பிறந்தால்
பசியும் காமமும் உண்டு...
இரண்டையும் அடக்கினாலும்
உடல் கெட்டு போகும்...

இரண்டும் வரவில்லை என்றால்
ஏற்கனவே
உடல் கெட்டு போய்
இருக்கிறதென்று அர்த்தம்...

உயிர் போய் விடும்...

மனிதனாய் பிறந்த
அவனை கட்டுபாடாய் இருக்க
சொல்லி கட்டாயபடுத்துவது ஏன்?...
கடவுளை தொழும்
மனிதன் மட்டும்
காமம் கொள்ள கூடாதென்று
கடவுள் யாரிடமாவது
சொல்லி இருக்கிறாரா?..

காதல் என்றாலே திருட்டு தனம் தான்...

காதல் என்றாலே
திருட்டு தனம் தான்...
இதில் நல்ல காதல் ,
கெட்ட காதல்
என்றா இருக்கிறது?...

திருமணத்திற்கு முன்பு என்றால்
பெற்றோர்களுக்கு தெரியாமல்...

திருமணத்திற்கு பிறகு என்றால்
மணம் முடித்தவர்களுக்கு தெரியாமல்...

பெற்றோர்கள் பயப்படுவார்கள்
தன் பிள்ளை
தவறான முடிவு எடுத்து
வாழ்க்கை  இழந்து விடுமோ என்று...

திருமணம் முடித்தவர்கள் பயப்படுவார்கள்
தன் குடும்ப வாழ்கை
அழிந்து போய் விடுமோ  என்று...

காதல் என்றாலே
எதிர்பாலினரிடம்
மனதிற்காகவோ...
உடம்பிற்காகவோ  ..
பணத்தேவைக்காகவோ...
இல்லை
எதாவது
ஒரு தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ள
பயன்படுத்தப்படும்
இன்றைய
அன்பான ஆயுதம் தான்....

காதலை பற்றி
உயர்வாய் சொல்லி கொண்டே
இன்னும்
எத்தனை நாட்கள்
நம்மை நாமே
ஏமாற்றி கொள்ள போகிறோம்?!!!..




உடல் தோற்றம் முக்கியம்....

நமது மனம்
இல்லாத
ஒன்றை பற்றி தான்
ஏங்கும்...
அதை எப்படியாவது
பெற வேண்டும் என்று
விரும்பும்...

மேனி நிறத்தை மெருகூட்டுவதற்காக
நிறைய விளம்பரங்கள்
வருவது
உலகில்
பெரும்பாலானவர்களுக்கு
சிவந்த தேகத்தில் இருக்கும்
அக்கறையை எடுத்து காட்டுகிறது...
உண்மையாய்
எந்த பொருளும்
இயல்பான
வண்ணத்தை மாற்றிவிடாது என்று
எல்லோருக்கும் தெரியும்!!!...

ஆனாலும்
அந்த ஏக்கத்தில்
அத்தகைய  பொருள்களை
உபயோகித்து கொண்டிருக்கிறார்கள்...
ஏக்கம் கொண்டவர்களுக்கு
மனம்
சமாதானத்திற்கு
வேண்டுமானால்
இந்த பொருட்கள்
உதவலாம்...

நிறம் மாறுவது மட்டும்
நிஜம் என்றால்
உலகில் ஒரு கருப்பு மனிதனையும்
காணவே முடியாது!!!!...

சமூகத்தில்
உடல் தோற்றத்திற்கு
மிகுந்த மதிப்பு அளிக்கப்படுவது
நிஜமே...

உடல் தோற்றம்
முக்கியமில்லை என்று
ஆறுதலுக்காகவும்...
வாதடுவதற்காகவும்
வேண்டுமானால் வைத்து கொள்ளலாம்...

குழந்தை பிறந்தவுடன்
ஆணா? பெண்ணா?..என்றதும்
அடுத்த கேள்வி?..
கறுப்பா?
சிகப்பா ?என்று தானே கேட்கின்றோம்...

நீங்களே சொல்லுங்கள்..
திருமண ஊர்வலத்தில் கூட
பெண் அழகாய்
நல்ல நிறமாக இருக்கிறாளா?
என்ற கேள்வி
கேட்க தானே செய்கிறோம்?...

ஒருவரின் தோற்றம்
நிறம் மட்டுமே
இங்கு நிஜம் என்றால்?!!!....

வலி இன்றி...

என் முதல் பிரசவத்திற்காய்
நான் காத்திருந்தேன்...
ஒவ்வொரு இரவுகளும்
என்னுள் ஒரு உயிர்...
என் உயிர்...
ஏக்கமான அந்த நாட்கள்
பிரசவ வலியில்
நீ ஜெனித்தாயடா...
நான்
இன்று தான் உணர்கிறேன்...
வலி இன்றி
எதுவும் கிடைக்காதென்று...

என்ன செய்ய?...

கை பேசி
இங்கே நிறைய மாற்றங்கள்
கொண்டு வந்திருக்கிறது...
யாருக்கு
உதவுகிறதோ இல்லையோ
காதலர்களுக்கு
நன்றாக உதவுகிறது....

எத்தனையோ
யோக்கியர்களாய்
நம்மை சொல்லி கொண்டாலும்... 
நாம் இருந்தாலும்...

நாம் நண்பராய் பழகும் போது
ஆணோ பெண்ணோ 
நட்போடு
எத்தனை நாள்
பழகி விட முடியும்...
சாப்பிட்டாயா?...
தூங்கினாயா?..
என்று?!!!......
எத்தனை நாள்
கேட்டு கொண்டிருக்க முடியும்?...

உங்கள் நண்பர்கள் காதல்...
உங்கள் காதல் ...
அப்படி இப்படி என்று பேசி....
கடைசியில்...

காதல் செய்து

ஒரே ஒரு
குருஞ்செய்தி(s .m .s  )யில்
இந்த காதலையும்
காமத்தையும் தீர்த்து விடுகிறோம்...
தீர்ந்தும்  போய் விடுகிறது...

நம் வாழ்க்கையில்
அடுத்து இணைய போகும்
ஆணுக்கோ
பெண்ணிற்கோ 
வெட்கத்தை  கூட
மிச்சம் வைக்க போவதில்லை
நாம்...

இதை சொல்லும் போதே...
வெட்கமாய் இருக்கிறது...
வெட்க கேடாய் இருக்கிறது...




உண்மையோ ?..

ஆணின் கற்பு
பெரும்பாலும்
காதலில் காப்பாற்றபடுகிறது...
ஏனோ
இந்த பெண்கள் தான்
காதலில் மட்டும் இல்லை
நட்பில் கூட
கற்பை தொலைக்கிறார்கள்...

பாவம்
பெண்களை விட
இந்த ஆண்கள் தான்
கற்பை பற்றி அதிகம்
பேசுகிறார்கள்...
அலட்டி கொள்கிறார்கள்...

எந்த ஆணும்
தன்
தாய்,தங்கை
தன்னுடன் இருக்கும்
பெண்ணினம்
கெட்டு போவதை
விரும்புவதில்லை...
கெட்டு போனவர்கள் என்று
யாரும் சொல்லி கேட்பதை
சகித்து கொள்வதுமில்லை...

ஏமாற்றி போன காதலியை
தவறாய் பேச கூடா
எந்த காதலனும்
அனுமதிப்பதில்லை...

ஆம்
காதலால்
ஒழுக்கம் கெட்டவர்கள்
ஆண்களில் குறைவு...








வஞ்சித்தவரால் வாழ முடியாது...

மிருகங்களில்
பெண் விலங்கு தான்
யாருடன்
கலவி கொள்ள வேண்டும்
என்பதை தீர்மானிக்கிறது...

போட்டியிட்டு
சண்டை போட்டு 
ஜெயித்து வரும்
வீரமான விலங்குடன் மட்டுமே
உறவு கொள்கிறது...

"தன் கருவினுள்
தோன்றும் இனம்
வீரியமானதாய்
இருக்கவேண்டும் "என்று 
விலங்கினம் கூட
யோசித்து கூடும் போது
படித்த பெண்ணினம்
எப்படி இருக்க வேண்டும்?...

இன்னும்
இன்றும்
ஏமாந்ததாய் புலம்புவது  
யார் குற்றம்?...

ஆணினம்
விலங்கை போல் இருக்க
அதன் தலையை துண்டித்து
"தான் பெரிய கொம்பன் " என்பதை
நிரூபிப்பது போல்
விலங்கின் கொம்புகளை
கிரீடம்  போல் அணிய தொடங்கினான்...

"தன்னுடைய மரபணு
மற்றவர்களை
விட  உயர்ந்தது" என்பதை
காட்ட
செயற்கை அலங்காரம்
செய்து கொண்டான்...

பலருடன்
கலவி கொண்ட
பெண்ணினத்தை
கட்டுப்பாடுகளால்
வசப்படுத்தினான்..

மீறி சென்ற பெண்களை
ஆன்மிகம் கொண்டு அடக்கினான்....
ஒவ்வொன்றாய்
ஆணடிமை உடைத்து 
படிப்படியாய்
பெண்கள்
வளர்ச்சி அடையும் போதெல்லாம்
ஏதாவது ஒன்றால்
பெண்ணினத்தை கட்டுபடுத்துகிறான்...

சிந்திக்க தொடங்கிய பெண்களை
வஞ்சகமாய் அடைய
உருவாக்கபட்டது தான்
காதல்...

சுயவரம் கொண்டு
ஆணை தேர்ந்தடுத்த
பெண்கள்
வாழ்ந்த பூமியில்
இன்றைய பெண்கள்
தோற்று போவது ஏனோ?..

பெண்கள்
வஞ்சிக்க பட்டு
இன்று பெண்களாலும் 
ஆண்கள்
வஞ்சிக்கபடுகிறார்கள்...

ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும்
இந்த மண்ணில்
யார் யாரை
வஞ்சிதாலும்
யாராலும்
சுகமாய் வாழ்ந்திட முடியாது...









நிஜங்கள்...

காதலித்து பிரிந்தவர்கள்
உண்மையை
ஒத்து கொள்வதில்லை....

தாங்கள் காதலித்து பிரிந்து
இன்னொருவருடன் வாழும் போது
துயரத்தில் இருப்பதாகவோ...

"என்னமோ விதியேன்னு 
வாழ்க்கை வாழ்கிறேன்  "என்றும்..

இரண்டு, மூன்று
குழந்தை பெற்ற பிறகும் கூட
வாழும் வாழ்க்கை
பிடிக்காதது போல்...
பேசுகிறார்கள்...

உண்மை
அதுவா?...

இருட்டறையில்
பகிர்ந்து கொள்ள படும்
காமத்திற்கு
காதலும் தெரியாது...
உடம்பும் தெரியாது...
மனசும் புரியாது...
காதலித்து பிரிந்தவர்களின்
இருட்டறைகள் ஒன்றும்
உறங்கி போவதில்லை...

காதல் செய்யும் போது
மட்டும் தான்
உடம்பு தெரியாது..
மனசு...
மனசு...
மனசு....
என்று பேசுகிறோம்...

அத்தனை பொய்களும்
பேசுவதற்கும்...
கவிதைகளுக்கும் மட்டுமே
வெளிச்சம்...

உண்மை....
இந்த உடல்
யாரோடு
வேண்டுமானாலும்
ஒட்டி கொள்ளும்
காமம் வந்து விட்டால்........

நிஜத்தை பேசினால்
நமக்கே
நம்மை பிடிக்காது....


.

சில நொடிகள்....

நீ எனக்காய்
உருகி உருகி
எழுதிய  கடிதங்கள்
பரிமாறிய
பரிசு பொருள்களை
சில வருடங்களுக்கு
பிறகு பார்க்க நேர்ந்தது...
தொலைந்து போனதாய் நினைத்த
அந்த பொருட்களை
தூசி  தட்டி பார்த்தேன் ...
தும்மலாய்
சிலநொடிகள்
நம் நினைவுகள்...




வெள்ளி, 17 செப்டம்பர், 2010

"காதல் சக்திவாய்ந்தது" தான்

காதல் செய்யும் போது
காதல் பற்றி
பேசினால் பிடிக்கும்...
காதல் கவிதைகள் 
பிடிக்கும்...
காதல்
சினிமாக்கள் பிடிக்கும்...
காதலிப்பவர்களை
உற்சாகப்படுத்துபவர்களை பிடிக்கும்...
காதலை ஊக்கபடுத்தும்
அத்தனையும் பிடிக்கும்...

தோற்று போன காதல்
யாராவது சொன்னால் கூட...
தங்கள் காதல்
முதிர்ச்சி அடைந்த காதல் என்றும்...
நாங்கள் மற்ற
காதலர்கள் போல் இல்லை என்றும்
புது விளக்கம் தருவார்கள்...

காதல் பொய் என்று சொன்னால் கூட
கோபம் வந்து விடும்...
காதலை புகழும் போது
காதலை விட
காதல் கொண்டவர்கள்
சந்தோசமடைகிறார்கள்...
காதல் உண்மை என்று
சண்டை போடுகிறார்கள்...
கொலை செய்கிறார்கள்...
தற்கொலை செய்கிறார்கள்...

ஆம்...

காதல் ஒரு மாயை...
காதல் ஒரு போதை...

காதலில்
ஜெயித்தவர்களாய் சொன்னவர்கள்
உண்மையில்
அனைவரும்
தோற்று தான் போய் இருக்கிறார்கள்...

காதலால்
தன்னை இழந்து
தன் மானம் இழந்து
அழும்போது தான்
காதல்
நம்மை விட்டு விலகுகிறது...

"காதல் அத்தனை கொடிது" என்றால்
தோல்வி அடையும் வரை
நாம் கேட்பதில்லை...

உண்மையில்
"காதல் சக்திவாய்ந்தது" தான்
நம்மை
எப்படி எல்லாம்
ஏமாற்றுகிறது?...

காதல் தோற்கும் போது மட்டும்...

ஆணும்,பெண்ணும்
தனக்கு மட்டும்
காதல் வர வேண்டும்...
தன்னை மட்டும்
யாரவது காதலித்து கொண்டே
இருக்க வேண்டும்...
தனக்கு மட்டும் காதல்
நன்மை செய்ய வேண்டும் என்று
ஆவலாய் காதல் செய்கிறோம்...

காதல் தோற்கும் போது
தனக்கு மட்டும்
காதல் துரோகம் செய்து விட்டது என்று
காதலை கோபித்து கொள்கிறோம்...
ஆமாம்...
காதல் என்றால் என்ன?...

காதலில் அறிவுரை வேண்டாம்...

காதல் வேண்டாம் என்று
எனக்கு எத்தனையோ
அறிவுரைகள் சொன்னார்கள்...
அன்று
நான் கேட்கவே இல்லை....
இன்று நானும்
என் சகோதரிக்கு சொல்கிறேன்...
அவளுக்கும் புரியவில்லை....
உண்மை தான்...

நாளை
என் குழந்தைக்கும்
சொல்லுவேன்...
என் பேரகுழந்தைகளுக்கும் கூட
சொல்லுவேன்...
ஆனால்
யாருக்கும்
அந்த வயதில் புரிவதில்லை...
ஏன் என்று
எனக்கே
எனக்கும் புரிய வில்லை...

காதலித்து
காதலால்
காதலுக்காக
காதலுக்காகவே இழந்த
என் காதல் பொய் என்றேன்...

என் கண்ணீரை 
உடைத்தும் காட்டுகிறேன்
என் சகோதரிக்கு ...
"காதலில்
இளமையை இழப்பதை
தவிர ஒன்றும் இல்லை" என்று...
அவளுக்கு
ஏன் புரியவில்லை?...

ஓ...
காதலில்
தோற்று போகும் வரை தான்
யாரும் ஏற்று கொள்வதில்லையே
என்னை போல...

காதல் ஒரு சாபம்...
இப்போது
நான் தவம் இருக்கிறேன்....
"உலகில் காதல்
என்னோடு போகட்டும்"...
காதல்
பரம்பரை நோய் என்றால்...
என்னோடு அழியட்டும்
காதல்
என்னை அழித்தது போதும்...

யாராலும்
புரிந்து கொள்ள
முடியாத வலி
இந்த காதல்...








பெண்கள் ஒரு காமகடை போல் ....

பெண்ணின்
தலைமுடி,
கண் ,புருவம் ,
காது,மூக்கு,
உதடு,வாய்
கழுத்து,மார்பு,
தொப்புள்,தொடை,
விரல்,நகம்
இப்படி அனைத்து
உடல் உறுப்புகளையும்
காம கிளர்ச்சி  உடையதாய்
காம பொருளாய்
கவிதையாய்
விற்பனை செய்கிறார்கள்......

இதனை பார்க்கும்
ஆண்கள்
பார்வையாலே
எல்லா பெண்களையும்
பலாத்காரம் செய்கிறார்கள்....

பெண்ணை
காம பொருள்களை
சுமக்கும்
காம கடை போல்
போதிக்கப்படுவது 
ஏன்?...

சமூகம்
பெண்ணை
நிர்வாணமாக்கி
வெறும் உடம்பாக
பார்ப்பது ஏன்?...

ஒரு வேடிக்கை
என்ன வென்றால்...
பெண்களே சில நேரம்
ஆண்களின் புகழ்ச்சிக்கு
அடிமையாகி...
"நாம்
ஆண்களின்
காமத்தை தீர்ப்பதற்காக தான் 
படைக்கப்பட்டு இருக்கிறோம்" என்று
பக்குவபட்டு கொள்வது தான்...

பெண்களே!
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
உங்கள் விழிகளை பார்த்து
ரசிக்கும் போது
கொஞ்சம் விழிப்புணர்வோடு  இருங்கள்...
அடுத்து
தோன்ற போகும்
சமூகமாவது
கவர்ச்சி மாயையில் இருந்து
தப்பி வாழட்டும்....

ஆம்
சகோதரிகளே...
நாம் படைக்க
இங்கே நிறைய இருக்கிறது!!!....







பெண்ணின் மார்பகங்கள்...

இப்போதெல்லாம்...
பருவத்திற்கு வரும்
ஆண்களை  சுற்றி...

பெண்ணின் அங்கங்கள் பற்றி
வர்ணனைகள் கொண்ட
பாடல்கள்..
சுண்டி இழுக்கும்
சுவரொட்டிகள்...
படிக்கும் பத்திரிகைகளில் வரும்
படங்கள்...
சினிமாக்கள்...
மேலும்....

கண்ணில் படும்
பல இடங்களில்
பெண்ணின் அங்கங்களை
கவர்ச்சியாய்  காட்டி
ஆண்களுக்கு
தீராத ஏக்கத்தை ஏற்படுத்தி
தீராத அவஸ்தைகள் கொடுத்து
சித்தரவதை செய்கிறது
சமூகம்...

குறிப்பாக...
பெண்ணின் மார்பகங்கள்...
பெரிய காட்சி பொருளாகவும்
வியாபார பொருளாகவும்
உலகே
உலா வருகின்றன...
இதனால்
ஆண்களிடம்
கள்ள தனம் பிறக்கிறது...
பெண்ணின் உடல் உறுப்புகளை
மறைந்து
ஒழிந்து
பார்க்க ஆசைபடுகிறான்...
அவதிபடுகிறான்...
ஏமாற்றி
அடைய நினைக்கிறான்...
யோசிக்கிறான்...
பெண்ணின் உடலை
காண்பதற்காகவே
காதல் சுழலில் சிக்கி
வாழ்க்கை கூட இழக்கிறான்...

மிக பெரிய கவர்ச்சி 
பொருளாய் இருக்கும்
பெண்ணின் மார்பகங்களின்
மாயையை உடைக்க வேண்டும்....

மனித உடலில்
இரண்டு வகையான உடலில்
ஒரு உடல்
இன்னொரு உடல் பற்றி
தெரிந்து கொள்வதில் தவறில்லையே....

மார்பகங்கள்
ஆண் ,பெண்
இருவருக்கும் ஒன்றே ...
பெண்ணின் மார்பகங்களில்
பால் சுரபி இருப்பதால் தான்
பெரிதாய் உள்ளது என்ற
சாதாரண உண்மையை
பருவம் வரும் ஆண்களின்
மனதில் பதிய வைக்க வேண்டும்...
உடல் கவர்ச்சி நோய் 
மாற வேண்டும்...

பெரிய விஞ்ஞான உலகமாய்
மாறி வரும்
இந்த நூற்றாண்டில் கூட
பெண்ணின் உடலை பார்ப்பதற்காக 
கேவலமான
கீழ்தரமான சமூகத்தை
உருவாக்கி வருகிறோம்...

இந்த கலாசார அவமானம்
ஏன்?
என்று புரியவில்லை...

பெண்ணை தெய்வமாய்
புனிதமாய் பார்க்க வேண்டாம்...
முதலில்
பெண்ணை
சக மனுசியாய்
பார்க்கச் சொல்லுங்கள்....










செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வாழ்க்கை...

வாழ்க்கை
சில நேரம்
நம்மை
சுவாசிக்க கூட
விடுவதில்லை...

தும்பிக்கை தேவனே...

நம்பிக்கை
கொடுக்கும் தும்பிக்கை தேவனே...
அருகம் போல் கொண்டு
அமிர்தம் தருபவனே...
ஐம்புலன்களையும்
பஞ்ச பூதங்களையும்
சரீரமாய் படைத்தவனே..
நீயே விதைக்கிறாய்..
நீயே அறுவடை செய்கிறாய்...
என் தலைமுறை காக்க
நல்வாக்கு கொடு
என் தேவாதி தேவனே...

என்ன பொளப்பு இது ?...

நாம் மற்றவர்களிடம்
பேசும் போது
யோகி போல் பேசுவோம்...
தவறு..
நாம் செய்து விட்டால் மட்டும்
"நானும்
சராசரி மனிதன் தானே "
"என்னை
மன்னித்து விடுங்கள்" என்று
மன்றாடுவது...
என்ன பொளப்பு இது?...

எப்போதும் போல்...

இருட்டறையில் கூட
எழுதி வைக்கிறேன்...
எழுத்துகள் கூட
சரியாய் விழுந்ததா என்று
தெரியவில்லை...
விடியும் போது புரட்டி பார்க்கிறேன்
உன் பெயர் மட்டும்
பளிசென்று....
எப்போதும் போல்
உன் நினைவுகள்
இருட்டாய்...

கடவுளே...

கடவுளே...
என் வாழ்கையில் வரும் 
ஒவ்வொரு  தோல்வியிலும்
எனக்கு நடப்பது
நன்மையில் தான் முடியும் என்று
உன் மேல் நம்பிக்கை வைத்தே வாழ்கிறேன்...
உண்மையில்
உன்னை ஜெயிக்க வைக்க
நான் எத்தனைமுறை 
தோற்று போகிறேன் தெரியுமா?
உன் புகழ் பாடி...
உனக்கு இன்னுமா புரியவில்லை...
நான் சந்தோசமாய் இல்லாதது...
கடவுளே...
நான் எதற்காக படைக்கபட்டேன்?...
அதை மட்டும் சொல்....

கண்ணீராய்...

உன்னை தேடி
என் கண்கள் களைத்து
கண்ணீராய்
வேர்த்த போதே உணர்கிறேன்
நீ என்னுள்
இருக்கும் இடம்
எதுவென்று...

கவிதை அல்ல..உனக்கான கடிதம்...

உனக்காக
நிறைய
பரிசு பொருட்கள்
வாங்கி தந்தேன்...
அதற்கு கணக்கு கூட
நான் பார்த்ததில்லை...
அந்த பரிசு
பொருள்களின் விலை
நீ அறியாமல் இருந்திருக்கலாம்...
தவறில்லை...
ஆனால்
அதில் வந்த
என் அன்பை  கூட
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
அது ஏனோ?.....

உன்னை வெறுத்தோ ...
கோபப்பட்டோ
நான் இந்த
முடிவை சொல்லவில்லை ...

உனக்காக
நான் எழுதி
அனுப்பிய கவிதைகளை
அனுப்பி வைக்கவும்...
நான் ஏமாந்து போன காதலை
புத்தகமாய் மாற்றி
உன்னை
இந்த உலகுக்கு
உயர்வாய்  காட்ட
ஆசைபாடுகிறேன்...

உனக்காய்
நான் அனுப்பிய
பரிசு பொருள்களை
அனுப்ப முடியாமல் போனால்
பரவாயில்லை...
அதற்கான தொகையை சொல்கிறேன்
அதை அனுப்பி வைக்கவும்...
இங்கே
ஒரே வேலை உணவிற்காய்
பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு
ஒரு நாள்
உணவாவது பரிமாற ஆசை...
நான் செய்த பாவ மூட்டைகளை
கொஞ்சம்
இறக்கி வைக்க ஆசை...

உனக்காக
நான் அனுப்பிய துணிமணிகளை
அனுப்பி வைக்கவும் .
இங்கே
உடம்பை மறைக்க
துணி இல்லாமல்
தவிக்கும் ஏழை பெண்களுக்கு
தர ஆசைபடுகிறேன்...

நான் தொடங்கிய காதலை
நான் அப்படியே விட்டு
செல்ல விரும்பவில்லை...
உலகில் சிறந்ததாய் மாற்றி காட்டுகிறேன்
அப்போதாவது புரியும்
நீ இழந்த என் காதல்........


உன்னை காதலித்தவன் மேல் ஆணை...

உன்னோடு
சிரித்து பேசும் போதெல்லாம்
உணராத காதலை...
உன்னை
திட்டும் போது மட்டும்
உணர்கிறாய்...

உனக்கே தெரியாமல்
நான்
உன்னை விட்டு
விலக போகிறேன்...
அந்த நாள்
நெருங்கி விட்டது கண்மணி
மன்னித்து விடு....

உன்னை
விட்டு பிரிய போகும்
நான் வருந்துவதெல்லாம் ஒன்று தான்...
என்னை விட உன்னை யாரும்
உலகில்
இத்தனை அழகாய்
காதலிக்க போவதுமில்லை...
இத்தனை அக்கறையாய்
கவனிக்க போவதுமில்லை...

உன்னோடு யாராலும்
பயணிக்க முடியாதடி...
நீ அத்தனை
கொடுமையானவள்...
உனக்கு
தெரிந்திருக்க முடியாது
உன்னால்
நான் தொலைத்து அழுத நாட்களை...

உனக்கு தெரியுமா?..
நீ இறக்கும் போது
உன் அருகில் யாரும்
இருக்க போவதில்லையடி...

உன் இறப்பு
யாரையும் அழவைக்காதடி...
காரணம்..
உன்னால் அழுதவர்கள் 
அதிகம் என்பதால்......
இது
உன்னை காதலித்து
இறந்து போன
உன் காதலன் மேல் ஆணை...
இது சாபம் அல்ல...
உண்மை...




என் கண்களிலும்...

என்னை
கறவை மாடு போல் இருக்கிறாய் என்று
ஆண்கள்
சொன்ன போதெல்லாம்
பெருமையாய் எண்ணிய துண்டு...
அப்போது தெரியவில்லை...
என்னை புகழ்த்து பேசியே
என்னை கறந்து
இரத்தம் வந்த போது தான் தெரிந்தது
என் பால் மடி கூட பழுதாய் போனது...

ஆசை கொள்ள தான் ...

பெண்கள் வாழ்க்கையை
எதார்த்தமாய் எடுத்து கொள்கிறார்கள்...
எதார்த்தமாக்கி விடுகிறார்கள்...
அதனால் தான்
ஆண்களை விட பெண்கள்
ஆயுள் காலம் அதிகம் வாழ்கிறார்கள்...

ஏனோ ஆண்களின்
ஆயுள் காலத்தை
குறைத்தும்  விடுகிறார்கள்....

இப்படி குறை சொல்லி
நம்மை
பெரிய தியாகியாய்
காட்டி கொள்வதிலும்
ஒரு சுகத்தை அனுபவிக்க
ஆண்கள்
ஆசை கொள்ளத்தான் செய்கிறார்கள்...
 

திங்கள், 13 செப்டம்பர், 2010

பசி...

ஒரு விபசாரியிடம்
கேட்டேன்...
இப்படி
பல ஆண்களோடு  போனால்
"உனக்கு
பால்வினை நோய் வராதா ?"என்று...

உலகில் அதை விட
பெரிய நோய்
இருக்கிறதென்றாள்... 

என்ன நோய் ?
என்று கேட்டேன்...
"பசி" என்றாள்...

அதை கேட்ட நாள் முதலாய்
இன்று வரை
என்னால் சரியாக
சாப்பிட கூட முடியவில்லை....

எது எதார்த்தம்.,..

காதலன்
என்ன வேண்டுமானாலும்
பேசி கொள்ளலாம்...
மன்னிப்பு உண்டு...
காதலில்
எத்தனை துன்பமும் கொடுக்கலாம்
மன்னிப்பு உண்டு...
ஆனால்
நண்பனாய் பேசும் போது மட்டும்
வரைமுறை உண்டு ..
எது எதார்த்தம்?...


நிஜம் தானே...

63வது சுதந்திர தினம்  கொண்டாடும்
சுதந்திர இந்தியா?...

அன்று
தேசத்தின் சுதந்திரதிற்காய்
பாடுபட்டவர்களை
ஆங்கிலேயர்கள்  கூட
இப்படி பாடுபடுத்தி இருக்க மாட்டார்கள்...

இன்று
இன்றைய அரசியல் வாதிகள்
அவர்கள் இறந்த பின்னும்
அவர்களின்
புகைப்படங்களை வைத்து கொண்டு
ஜாதி சங்க தலைவர்களாக்கி
அவர்களையும் 
அசிங்க படுத்தி
ஆதாயம் தேடுகிறார்கள்...
இந்த மனிதர்களுக்காய்
சுதந்திரம்...
சுதந்திர போராட்டம்?...

அடுத்தவன்
வெற்றியை தன்
வெற்றி போல் கொண்டாடுவது
ஒன்றும் புதிதில்லையே....
சுயநலவாதிகளின்
வாரிசுகள்
நாம்
இப்படி தான் என்பது
நிஜம் தானே...

இலங்கையை ஆள்பவர்களே!...

இந்தியர்களை
ஒழிக்க நினைக்கும்
சீனர்களுக்கும்
பாக்கிஸ்தானியர்களுக்கும்
தீவிரவாத பயிற்சி கொடுக்கும்
இலங்கையை ஆள்பவர்களே!...

இலங்கை சுடிகாட்டில்
புதைக்கப்படபோவது
மிஞ்சி இருக்கும்
இலங்கை குடிமகன்களான
சிங்களர்களும்...
தமிழர்களும் தான்
என்பதை
வரலாறு சொல்லும்......

தேசம் மீட்க...

மக்களுக்காக போராடுபவர்கள்
தீவிரவாதிகள்,
நக்சல்கள் என்றும்  சொல்வது
உலக மரபு தான்...
இன்னும் எத்தனை நாள்
தேடப்படும் குற்றவாளிகளாய்
தேசம் தாண்டி போய் 
தேசத்தை 
எப்படி
காப்பாற்ற போகீறீர்கள்?...
ஆயுதங்களால்
யாரையும் அடக்கி விட 
முடியாது என்பது  மட்டுமல்ல...
சுதந்திரத்தை கூட அடைய முடியாது...

துப்பாக்கி ஏந்தி
போராடி நம் பிள்ளைகள்
உறுப்புகள் இழந்து நிற்கும் போது
சுதந்திரம் கூட பயன்பட போவதில்லை......

அகிம்சை ஒன்றும்
அத்தனை கடினமானதில்லை...
அகிம்சையை
கோழைத்தனம் என்று யார் சொன்னது?...
போரிடுவது மட்டுமே வீரமல்ல...
வெற்றி பெறுவதே வீரம்...

ஈழ தேசத்தில்
உயிர் துறந்தவர்கள் எத்தனை பேர்?...
அதே தேசத்தில்
போர் பயிற்சிக்கு பதில்
கட்டுபாடுகள் இல்லாமல்
குழந்தை பெற்றிருந்தால்?...

பஞ்சம் வந்திருக்கும்...
பொருளாதாரம்
வீ ட்டுக்கு மட்டும் தேவை இல்லை...
நாட்டுக்கும் தேவை...
பணம்
மக்களுக்கு மட்டும் இல்லை
நம்மை ஆட்சி செய்பவனுக்கும் தேவை....
இது அகிம்சை இப்படி தான்...
ஆள்பவனை
ஹிம்சை செய்திருக்கும் ?...

நரம்பு புடைக்க பேசும்
யாராலும்
ஈழ மக்களுக்கு படையல் தான்
வைக்க முடியும்...
அவர்களை
மீண்டும் படைக்க முடியாது...

உலகம் முழுதும்
அகதிகளாய் வந்த
ஈழ தமிழ் பெண்களை
தேவிடியாளாக
விலை பேசும் கூட்டத்தை
கூறு போடவா முடியும்?...


தப்பி வந்த தமிழர்களாவது
தப்பித்து கொள்ளுங்கள்...
இனபெருக்கத்தின் மூலமாவது
நம்தேசத்தை காப்பாற்ற
கற்று கொள்ளுங்கள்......
அகிம்சையால்
இம்சை செய்யுங்கள்
தமிழ் இனம் வாழ
தேசம் மீட்க......

இந்த சமூகம் வாழ போகிறது?...

அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
நமக்கு முன் படித்த
லட்சகணக்கானவர்கள் 
பதிந்து வைத்து
வேலைக்காக காத்திருந்தாலும்
படித்து முடித்தவுடன்
நமக்கு மட்டும் வேலை வேண்டும் என்று
குறுக்கு வழி தேடும் நாம் ......

சக பணியாளர்களுக்கு
பணி நிரந்தரம் கிடைக்காமல் போக
தவம் இருப்பதும்...
பக்கத்தில் இருப்பவன்
முன்னேறாமல் இருக்க
முடிந்தவரை முயல்வதுமாய்
நாம்...

ஒரு இரண்டு ரூபாய்
கொடுத்து
வாங்கிய பத்திரிக்கையை
அருகில் பயணம் செய்யும்
பயணி படிக்கக்கூடாது என்று
மடக்கி மடக்கி படிக்கும்
நம் சுயநல இளயோர்களால் தானா
இந்த சமூகம் வாழ போகிறது?...




அரசியல் இவ்வளவு தான்...

இந்த உலகில்
மக்களுக்காக உழைத்து
மக்களுக்காக
உயிர் துறந்த மனிதர்களுக்காக
மக்கள் என்ன செய்திருக்கிறார்கள்?...

தன் குடும்பத்தை துரத்தி
தன் குடும்பம் தொலைத்து
தனக்கு குடும்பமே இல்லாமல்
இறந்தால் தான்
உண்மையான
தூய்மையான
அரசியல்வாதியா?...

அரசியல்வாதி
முற்றும் துறந்த முனிவனா?...
அவனுக்கு
குடும்பம் இருக்க கூடாதா?...
"யாரோ ஒருவன் போராடி
யார் யாரோ உயிர் துறந்து
உங்களுக்கு
உரிமை வாங்கி தர வேண்டும்"?...
நீங்கள்
அதில் சுதந்திரமாய்
குளிர் காய வேண்டும்...
நீங்கள் அவர்களுக்கு
என்ன சன்மானம் தருவீர்கள்?...

அவர்கள் குடும்பத்திற்கு
யார் உணவு தருவது?...
"அச்சச்சோ அப்படியா" என்ற
அனுதாபத்தால் யாரும்
மீண்டும் ஜெனிக்க முடியாது....

நேர் வழியில்
சம்பாதித்து பாருங்கள்...
முன்று வேளை
நன்றாக சாப்பிடுவதற்கே போதாது....
இந்த உலகில்
நேர் வழியில்
சம்பாதித்து
மக்கள் சேவை செய்ய
யாராவது வந்திருக்கிறார்களா?..
 

சுயநலம் இல்லாத
அரசியல்வாதிகளை
பிழைக்க தெரியாதவன் என்று
தூற்றுவதும்
நாம் தான்...
ஒழுக்கமானவர்களுக்கு
இதுவரை ஓட்டு போட்டு இருக்கிறோமா?...


சர்வாதிகாரம்
நம்மை என்ன செய்யும் என்பீர்கள்?...
அடிமை எப்படி இருக்கும் என்பது
நம் பண்டைய  வரலாறு...
சர்வாதிகாரத்தால்
அண்டைநாட்டு மக்கள்
படும் வேதனை
எத்தனை தெரியுமா?... 

அரசியல்வாதிகளுக்கு
பயந்து வாழ
நாம் வாழ்வது
சர்வாதிகார ஆட்சியில் இல்லை...
நாம் இருப்பது
நம்மால் ஓட்டு போட்டு
தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியில்...
 
இங்கே இன்று
ஓட்டுக்கு பணம் வாங்கி
ஓட்டு போடும் பரதேசிகள் தானே நாம்...
ஜனநாயகத்தை குறை சொல்லி
மேதாவிகளாய் பேசும்
நாம் சில நேரம்
ஓட்டு போட கூட
நேரம் ஒதுக்குவதில்லை..
தன்னலமற்ற
சுதந்திர போராட்ட வீரர்களை கூட
கிண்டல் செய்யும்
தரங்கெட்ட குடிமகன்கள் தானே நாம்....

நூற்றாண்டுகளாய்
அடிமை பட்டு வாழ்ந்த
நமக்கு
பேச்சுரிமை கிடைத்தும்
ஓட்டுரிமை உள்ள
சுதந்திரம் கிடைத்தும்
தெரியாமல்
அடிமைகளாய் வாழ்கிறோம்...
அடிமைகளாய்
வாழ்ந்து பழகிய
நமக்கு
சுதந்திரம் பற்றிய
அடிப்படை அறிவே இல்லை?...


அடிமையாய்
வாழ்ந்து கிடந்தவர்களின்
வாரிசுகள் தானே நாம்...
அடிமை உடைக்க
பாடுபட்டவர்களின்  வாரிசுகளை
வரலாற்றில்
எந்த நாடும்  உயிரோடு 
வாழ விடவில்லையே...

உலக வரலாற்றில்
சுதந்திர தாகம் கொண்டவர்களின்  
ரத்தம் சிந்தபட்டிருக்கிறது..
துரோகிகள் ரத்தம் மட்டுமே
விதைக்க பட்டிருக்கிறது...
மறந்து விட  வேண்டாம்
நாம் துரோகிகளின் பிள்ளைகள்...
சுயநல வாதிகளின் வாரிசுகள்
நாம் இப்படி தான் இருப்போம்...
நம் நாட்டை
அடுத்தவன்
ஆள்வதை விரும்பும்
அடிமைகள் தான் நாம்...

உலகம் முழுதும் வரலாறு
நாம்
மறந்து விடுவோம் என்றே
எழுதப்படுகிறது
உலகில்
மறதி தேசிய வியாதி என்பதால்...


தலை முறைக்கும்
சொத்து சேர்த்து வைக்க துடிக்கும்
இன்றைய என் நாட்டு
அரசியல் கனவான்களே...
ஒன்றை மறந்து விடாதீர்கள்...
உலகை ஆள  நினைத்த
பல மன்னர்களின் சந்ததிகள்
வரலாற்றில் மட்டுமல்ல...
இந்த உலகில் கூடா
இல்லாமல் போய் இருக்கிறார்கள்....

இது சுதந்திரமான பூமி
ஒருவனுக்கு மட்டும்
சொந்தமானதில்லை...
அரசியலும்
மன்னர்களும்
மக்களும் அழிந்து போனாலும்
பூமி நிலைக்குமடா...

ஒரு நாள்
காற்றிலாமல் கூட பூமி
சூரியனை சுற்றி வரத்தான் போகிறது
அற்ப ஆயுள் கொண்ட மனிதனே...
அரசியல்
மரணம் இல்லா வாழ்வையா
கொடுக்க போகிறது?...

ஆம்
அரசியல்
இவ்வளவுதான்...




நட்பு...

நல்ல நட்பு தான்
பெரிய பகையாகவும் மாறுகிறது...
நண்பர்கள் தான்
பெரிதாய் மோதி கொள்கிறார்கள்...

நட்பில்
நம்மையும் மறந்து
நம்மை பற்றி
முழுதாய் சொல்லி விடுகிறோம்...
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல்...

நண்பர்களுக்குள்
மோதல் வரும் போது
ஒருவருக்கொருவர்
தங்களின்
குறைகளை சுட்டிகாட்டி பேசி
நட்பை
கொச்சை ஆக்கி விடுகிறார்கள்...

நட்பிற்கு
இலக்கணமும் இல்லை
இலக்கியமும் இல்லை...
நாமாக பேசி கொள்ளலாம்
உலகில் உயர்ந்தது நட்பென்று...
நடைமுறையில்
நட்பால் பலியானவர்கள் அதிகம்...

ஆம்...
இங்கே
காலம் முழுதும்
பழி வாங்க அலைகிறார்கள்
நல்ல நட்பாய்
பழகியவர்கள் மட்டுமே ...

காரணம்...

நட்பிடம்
சில நேரம்
மறைக்க வேண்டியதை
மறைக்காமல் சொல்வதால் ...




எல்லை உண்டு...

நான் சுதந்திரமாய்
இருக்கவே விரும்புகிறேன்...

என் நட்பிற்கு
மரியாதை உண்டு...
ஆனாலும்
ஒரு எல்லை உண்டு...

என் வீ ட்டு
சமையல் அறையின்
ஜன்னலை  திறக்கவோ...
என் படுக்கை அறையை
எட்டி பார்க்கவோ
யாருக்கும் அனுமதி இல்லை...

என் நட்பிற்கு
மரியாதை உண்டு...
ஆனாலும்
ஒரு எல்லை உண்டு...
ஆம்...
நான் சுதந்திரமாய்
இருக்கவே விரும்புகிறேன்
 

நான் மிருகம் தான்...

நான் மிருகம் தான் ...
ஏன்?...

மனிதர்களுடன் இருக்கும்
நான் மிருகமாகவே
இருக்க விரும்புகிறேன்?...
ஏன்?...

மிருகம்
எதிரியை தாக்குவதற்கு
முன்பே
கோபத்தை
முகத்தில் காட்டிவிடும்...

எச்சரிகையாய் இருந்தால்
தப்பித்து விட கூட முடியும்..
ஆனால்
இங்கே மனிதர்கள்
சிரித்து கொண்டே
நம்மை கொன்றுவிடுகிறார்கள்...

அதனால்
நான் மிருகமாய்
இருக்கவே விரும்புகிறேன்... .



இப்படி யார் கேட்பது?...

படிக்கும் போதும்
வேலைக்கு போகும் போதும்
திருமணத்திற்கு
பெண் பார்க்கும் போதும்...
திருமணத்திற்கு பின்பும்
இப்படி வாழ்க்கை முழுதும் 
ஒப்பீடுகள்....

உன்னோடு
படிப்பவன் தானே அவன்..
எப்படி
மதிப்பெண் வாங்குகிறான்?...
அவன் மூத்திரத்தை வாங்கி குடி என்பது ...

"நீ படிக்க வைத்த
அரசு பள்ளியில்
இதற்கு மேல்
எப்படி மதிப்பெண் எடுப்பது"?....
பெற்றோர்களை
இப்படி யார் கேட்பது?...


உன்னோடு படித்தவன் தானே
எப்படி பெரிய  வேலைக்கு போனான்?...
எப்படி சம்பாறிக்கிறான்?...என்ற கேள்விகளுடன்
பெற்றோர்கள்...

பெற்றோர்களை 
யார் கேட்பது?
அவன் அப்பா எப்படி பாசம் கட்டுகிறார்?...
"அவன் அப்பா
எப்படி சம்பாறித்து
சேர்த்து வைத்திருக்கிறார்கள்"?என்று..

திருமணத்திற்கு...
மாப்பிள்ளைக்கு
அரசு வேலை உண்டா?...
வெளி நாட்டு வேலை உண்டா?...
எத்தனை கேள்வி?...

"நீ போடுற ரெண்டனா
வரதட்சணைக்கு
எத்தனை கேள்வி"?
பெண் வீ ட்டார்களை
இப்படி யார் கேட்பது ?...

திருமணம் பண்ணிய பின்...
அவள் வீட்டில் கார்  உண்டு
எவ்வளவு நகைகள்...
அவள் கணவன்
எவ்வளவு செய்கிறான் மனைவிக்கு?...

"நீ என்ன செஞ்ச
கணவனுக்கு"?...
இதை யார் கேட்பது ?..

இப்படி ஏக்கங்களும்
எதிர்பர்ப்புகளுடனும்
நம்மை சுற்றி இருக்கும் போது
நான் எப்படி
நானாய் இருக்க முடியும்...
வாழ்க்கையில் பிறந்தது முதல்
எல்லோரையும்
எல்லா நேரமும் திருப்தி படுத்த முடியாது...

இத்தனை என்னை கேட்கும்
என்னை சுற்றி இருப்பவர்களே...
ஆமாம்...
யார் தான் 
என்னை
திருப்திப்படுத்துவது?....

வெறுத்து
வேறு பாதை போகும் போதும்
ஏன் இப்படி
இந்த பையன் முடிவு எடுக்கணும்?..
கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம்...
வாழ்க்கை இப்படி தான் இருக்கும் என்பார்கள் ...
வாழ்க்கை
அதை நாம் தான்
கவனமாக
கையாள வேண்டும் என்ற
அறிவுரைகள் வேறு ...
இப்படி  ஒப்பீடுகளாய் மனிதர்கள் ?...
ஏன்?

நாம்
நம் வழியில்
போகாதவரை
ஒப்பீடுகளும்
நம்மை தொடரத்தான் செய்யும்......

வியாழன், 9 செப்டம்பர், 2010

உன் மேல் சந்தேகம்...

நீ
சுதந்திரமாய் இரு...
உலகில்
உன்னால்
என்ன என்ன சுகம்
அனுபவிக்க முடியுமோ
அனுபவித்து கொள்...
உனக்கு
பிடித்த படி எல்லாம் 
முழுதாய் வாழ்ந்து கொள்...

உன் மேல் சந்தேகம் என்ற
ஒன்று
என்றும்
எனக்கு வராது...
ஏன் என்றால்
உன்னோடு இருக்கும்
உயிர்
நானடி...

நமக்காக
நம் மேல்
உண்மையாய்
யாரும் இல்லையோ?..என்று
நமக்கு தோணும் போது தான்
இந்த வாழ்க்கை வெறுத்து போகும்...

உன் வாழ்க்கையில்
கவலை என்ற ஒன்று
வருவதை
என்னால் தங்கி கொள்ள முடியாது...

"தைரியமாய் இரு"...
உனக்காக யாரும் இல்லை
என்ற நிலை வரும் போது கூட
இங்கே
நான் உனக்காக
காத்திருப்பேன் என்பதை
மறந்து விடாதே...
வற்றாத அன்போடு
என் ஆயுள்
உள்ள வரை....

"என் மேல்
இத்தனை அன்பா"?...என்று
நீ கேட்கும் போது லேசாய் வலிக்குதடி....
என் அன்பின் ஆழம் 
இன்னும் உனக்கு புரியவில்லையோ?என்று....

நான்
எதனை கொண்டு
நீருபிப்பது என்
உண்மை காதலை?!!!...

என்
இதயம் கிழித்து காட்ட
நான்
தேவ தூதுவன் இல்லையடி...
உன்னை
உண்மையாய் நேசிக்கும்
சாதாரண மனிதனடி....

என் மனம் வலிக்குமடி...

நீ
என்னை ஏமாற்றுவது
தெரியாமலே இருந்து
ஒரு நாள்
தெரியும் போது தான்
வேதனை அதிகமாகி
என் மனம்
வலிக்குமடி...

இன்று
நீ என்னை
ஏமாற்றுவது தெரிந்தே
உன்னை
நேசிக்கும் போது தான் புரிகிறது...

உனக்கு புரியாத
என் காதல்
என் நேசம்
எத்தனை பெரிது என்று...

ஆனாலும்
நீ என்னை
ஏமாற்றும் போது
உன்னுள்
எத்தனை போராடி இருப்பாய்?...

உன் மனசாட்சி
உன்னை சுட்டிகாட்டும் போது
உன் அவஸ்தைகளில்  கூட
என்னால்
நீ கஷ்டபடகூடாது...

ஏமாந்து 
போவதை விட
ஏமாற்றும் போதே
வலிகள் அதிகம்...
நான் இஷ்ட பட்டே
காதலில்
உன்னிடம்
தோற்று போக தயார்...

ஒரு வேண்டுகோள்...
உன் புன்னகையை
மட்டும்
யாரிடமும் விற்று விடாதே
உன் புன்னகை  
என் செல்வமடி.......

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாம் தான்...

வாழ்க்கையில்
பல வாய்ப்புகள் வரும்...
ஆனால்..
சில வாய்ப்புகள் மட்டுமே
வாழ்க்கை தரும்...

போராடும் வரை
வீண் முயற்சி என்பார்கள் 
வெற்றி பெற்றவுடன்
விடா முயற்சி என்பார்கள்...

இது உலகம்
இப்படி பேசி கொண்டே இருப்பார்கள்...
நாம் தான்
நம்மை 
வெற்றி கொள்ள வேண்டும்...



பணத்தாலா?..

நல்ல
வேலையில் இருக்கிறார் என்றால்
என்ன அர்த்தம்?...

நிறைய
சம்பள பணம்
அது தான்...

ஒருவனிடம் நிறைய சொத்து இருக்கிறது என்று
தேடிபிடித்து பெண் தருகிறோம்...
விசாரிக்காமல்...

நாம் பெருமைப்படும் சில விசயங்களுகாய்
வரதட்சணை என்ற பெயரில்
நம் வாழ்நாள் உழைத்த பணத்தை கொட்டி......

தேடி பிடித்து காதல் கொள்கிறோம்...
அன்பை செலுத்த அல்ல
அன்பால் சொத்துகளை அபகரிக்க...

இப்படி ஆசை பட்டு 
ஏமாந்து
இன்று
விவாகரத்து கேட்டு
நிதிமன்றங்களில் கூட்டம்...
ஏன்?...
அன்பாலா?..
அதற்கும் மேலான
நாம் ஏங்கும்  பணதாலா?...




நாம் கேட்கவில்லையா?...

ஒருவரை மட்டும்
காதலித்தார்களா?..
என்ன ஆச்சரியம்!...

நம் தேசத்து பெண்கள்
அப்படியா இருந்தார்கள்?..
அப்படி பட்டவர்களா இருந்தார்கள்?....
அப்படியுமா இருந்தார்கள்?...
அப்படி ஏன் இருந்தார்கள்?...

அப்படி இருந்தது சாத்தியமா?...
அப்படி இருப்பது சாத்தியமா?...

இப்படி
அடுத்த தலை முறை
பெண்கள் கேட்க தான் போகிறார்கள்?...
இப்படி கேள்வி கேட்பவர்கள்
பிறந்து விட்டார்கள்..
இனி 
பிறக்க போகிறார்கள்...

நாம் கேட்கவில்லையா?...
கற்பிற்கரசி என்பவர்கள்
நிஜமாய் இருந்தார்களா என்று?!!!...


நான் ஆசிரியை...

என்னை பற்றி கேட்டு பாருங்கள்...
என்னிடம்
கல்வி கற்பவர்களிடம்...
ஆம்..
நான் அதிகமாய் கோபப்படுவேன்...
கட்டுப்பாடாக
இருக்க சொல்லி
கட்டாயபடுத்துவேன்...
என் மாணவர்களை வதைக்கும்
நான் இன்று
உன்னால் வதைபடுகிறேன்...
உன்னிடம் இன்று கோபப்பட்டேன்...
ஏனடா?..
என்னையும் கடந்து
நீ என்னுள் வந்து விடுவாய் என்பதால்...
உன்னை விட்டு
விலக
நினைக்கும் போதெல்லாம்
உன் அருகில்
என் மனம் போகிறது
ஏனடா?...
நான் கட்டுபாடில்லாதவளா?..
காதல்வயபட்டவளா?...


உனக்கு புரியவில்லையா?...

நான் மற்றவர்களிடம்
எல்லாம்
எரிந்து விழுகிறேன்...
ஏனடா?..
உன்னிடம் மட்டும் 
பதுங்கி வாழ்கிறேன்...
என்னை ஆள்பவனா?...
என்னை
அழ வைப்பவனா ?...

நம்மை
அதிகம் நேசிப்பவர்களால் தான்
நம்மை அதிகம்
அழவைக்கவும்  முடியும் 
சிரிக்க வைக்கவும் முடியும் என்பது
நிஜமோ?..

காதல் ஒரு...

காதல் பெரிய மன வியாதி...
காதல் பெரிய இம்சை..

காதல் ஒரு சந்தேக பிராணி...
எனக்கு முன்
"என்னை போல
உன்னை
யாராவது காதல் செய்தார்களா"? ...என்று
மறைமுகமாய் கேட்கும்..



காதல்  ஒரு பொசசிவ் என்ற பெயரால்
"என்னை மட்டும்
நீ காதலி"...
என்று சொல்லி வற்புறுதலாய்
அன்பை பொழியும் அவஸ்தை....

இத்தனை தெரிந்தும்
இந்த காதலை
ரசிப்பது

வயது கோளாறா?...

வாலிப ஏக்கமா?...




எப்படி உன்னால் யோசிக்க முடிகிறது?...

எனக்கு
உன்னை நன்றாக தெரியும்
நீ
நான் உன்னை நேசித்ததை
பலமுறை
பலர் மூலம் 
ஆராய்ச்சி செய்து
ஆர்வத்தோடு
காதல் செய்து
விலகியும் போனாய்
உன் மனசாட்சியை கொன்று...

சில மாதங்களுக்கு பிறகு
இப்பொழுதெல்லாம்
என்னை
புதிதாய் பார்ப்பது போல
புன்னகை செய்கிறாய்
என்னை நோகடித்ததை மறந்து...

நீ வார்த்தைகளால்
வன்முறை செய்பவள் தானடி...
ஒன்று தெரியுமா ?..
வன்முறையால் என்றும்
ஜெயிக்க முடியாதடி...
நான் மீண்டும் 
உன்னை காதலிப்பேன் என்று
எப்படி உன்னால்
யோசிக்க முடிகிறது?...

அந்த குழந்தைக்காக...

நான்
பிறந்து வளர்ந்ததை
என் தாய் சொல்லியே தெரியும்
கேட்கவே ஆசையாய் இருக்கும்...
எனக்கும்
நெடுநாட்களாய் ஆசை...
ஆம்...
நான்
வளர்ந்ததை பார்க்க வேண்டும்...
எனக்கு
ஒரு வரம் கொடு
நானும்
ஒரு குழந்தை பெற..
அந்த பிஞ்சு விரல்
என் மேல் நடக்க
வரம் கொடு...
நானும் வாழ ஆசை
அந்த குழந்தைக்காக...

துரத்தும் போது ...

நட்பிற்கு
இங்கு சரியான
அங்கீகாரம் கிடைப்பதில்லை...
அதுவும் 
ஆண் பெண், நட்பு
ரெம்பவே அவதிபடுகிறது...
என் நண்பன் என்றோ
என் தோழி என்றோ
அறிமுகபடுத்தும் அளவில் 
நம் சமூகம்இன்னும் பக்குவபடவில்லை..
நாமும் பக்குவபடவில்லை...

நாம் செய்தால் நட்பு
அடுத்தவர் செய்தால்
அது அசிங்கமான தொடர்பு?...
கள்ள காதல் கூட
சுதந்திரமாய்
கடற்கரை சென்று சுவாசிக்கிறது...

நம்மில் உண்மையான நட்பு கூட
திருமண திருவிழாவில்
தொலைந்து தான் போகிறது...
நட்பு மட்டும்
ஏனோ
தனிமையில்
அழுகிறது தனியாய்...

நாமே
சில நேரம்
நம் வாழ்க்கைகாக
நட்பை தொலைக்க விரும்புகிறோம்...
நட்ப்பால்
என்ன செய்ய முடியும்?
துரத்தும் போது......

விட்டு வைக்கலாமா?...

நாம்
இங்கு எத்தனையோ விசயங்கள்
பிறர்க்காக விட்டு கொடுக்கிறோம்...
பிடிவாதகாரர்களிடம்
நாம்
பிடிவாதம் கொள்ளாமல்
விட்டு கொடுக்கிறோம்...
" நாம் விட்டு கொடுக்கலாம்"
அதை
அவர்கள் ஏமாளிதனமாய் என்னும் போது
விட்டு வைக்கலாமா?...

கண்டிக்கலாம்...

கண்டிக்கலாம்...
ஆனால் தண்டிக்கபட கூடாது...
மன்னிப்பு
அகிம்சை மட்டும் இல்லை...
எதிரிக்கு 
தரப்படும் தண்டனையும் கூட...
தீவிரவாதம்
மனித சடலங்களை
மண்ணோடு புதைக்கும்...
மனித நேயத்தை  
மக்க செய்து விடும்......

கவலைபடுவோம்?..

உடம்புக்கு ஏதாவது
ஒன்று என்றால்
அக்காவுக்காக ஓடி வரும் தங்கை இல்லை...
தம்பிக்காக ஓடி வரும் அண்ணன் இல்லை..
இன்னும் சில தினங்களில்
கணவனுக்கென்று ஓடி வரும் மனைவியும்
மனைவிக்கென்று ஓடிவரும் கணவனும் கூட
இருக்க போவதில்லை...

பணம்..
எத்தனை ஆடம்பர சொத்துகளை தருகிறது?...
பணம்...
எத்தனை சொந்தங்களை துரத்தி விட்டது?...
நாம்
என்ன பெரிதாய்
வளர்ந்து விட்டோம்?...

பணம் சேர்த்து
புதிது புதிதாய் கண்டுபிடிக்கும்
அறிவியல் சாதனங்களை
தேடி தேடி வாங்கி உபயோகிக்கிறோம் ...
மண்ணிலும் விண்ணிலும்
மென்பொருள்
குப்பைகளை கொட்டி வருகி றோம்...
அதன் பாதிப்புகள் மறந்து...
ஆனாலும்
நாம் எப்படி அழிந்து வருகிறோம்...
எப்படி அழித்து கொள்கிறோம்
நம்மையே
இந்த பணத்தால்...

நம் சுய சந்தோசம்...
நம் சுய நலம்...
நாம் பணத்தால்
இன்று
எப்படி சுருங்கி போய் விட்டோம்....

நம்மையே 
அழித்து கொள்வதில்
கவலை படாத நாம்...
இந்த பூமி
மாசு அடைவதை பற்றியா
கவலைபடுவோம்?...

தொலைந்து போகும் ...

உலகில்
தனித்தனி மனிதர்களாய்
ஆணும்,பெண்ணும்
வாழ்ந்தனர்..
பின்னர்
ஒவ்வொரு  நூற்றாண்டுகளாய் தான்
ஒற்றுமை...
சொந்தம்...
குடும்பம்...
இப்படி கொஞ்சம்
கொஞ்சமாய் வளர்ந்தது சமூகம்...

நாம் பின்னோக்கி செல்கிறோம்...
ஒவ்வொரு நூற்றாண்டுகளில்
ஒரு சொந்தம் இழந்து வருகிறோம்...
ஒரு நூற்றாண்டில் பெரியப்பா...
ஒரு நூற்றாண்டில் சித்தப்பா...
ஒரு நூற்றாண்டில் மாமா..
ஒரு நூற்றாண்டில் அத்தை...
இப்படி
ஒவ்வொரு ஆண்டுகளில்
ஒரு சொந்தம்
தொலைத்து கொண்டிருக்கிறோம்...
சொந்தங்கள் பெயர்
உச்சரிக்க கூட ஆட்கள் இல்லாமல் போகும்...

இன்னும்
சில ஆண்டுகளில்
தனி தனி மனிதர்களாய்
நாம் மீண்டும் ....
இடையில் வந்த
நாகரீகம் இடையிலேயே
தொலைந்து போக தான் போகிறது!!!...

பின் நோக்கி.....

இன்னும்
கொஞ்ச நாளில்
அப்பா,அம்மா
அண்ணன்,தம்பி
அக்கா,தங்கை
இப்படிப்பட்ட உறவுகள்
தொலைந்து போக போகிறது...
தொழில் நுட்பத்தால்
உலகம் சுருங்கி விடுகிறது என்று
தம்பட்டம் அடிக்கும்
நாம்...
தாய் தொலைத்த மகன்..
தந்தை தொலைத்த மகள்...
கணவன் தொலைத்த மனைவி...
மனைவி தொலைத்த  கணவன்...
இப்படி அகதிகள் போல்
ஒற்றை மனிதர்களாய் மாறி வருகிறோம்...

நாம் முன்னோக்கி செல்லவில்லை
பின்னோக்கி
சென்று
கொண்டிருக்கிறோம்
கலாசாரத்தில்...

என் காதல்...

இமைக்க முடியாத
கண்களும்...
சொல்லபடாத  காதலும்
இருட்டறையில்
அழுவதற்கு மட்டும்...

காதலின் முகவரி
கண்கள்...

உன் கண்கள்
என்னை பார்த்து
உன் மனதிற்கு சொல்ல
எவ்வளவு  நேரம் ஆகுமோ?...
அந்த வினாடிகளில்
பிறந்தது
உன் மேல்
என் காதல்...

என் விழிகளும்
உன்  இமைகளும்
உன்னை பார்ப்பதற்காகவும்
பாதுகாக்கவும் படைக்கப்பட்டது...

காதல்
சுவாசிக்க மட்டும் அல்ல...

காதலிக்க மட்டும் இல்லை
கண்கள்...
காதலை பருகுவதற்காகவும்..

முதல் காதலின் வலி
கண்ணீருக்கு தான் புரியும்...

காதல்...

கண்ணீர்...
 
கண்கள்...
 
பிரிக்க முடியாதவை....

வெற்றி என்று சொல்லி கொடுத்தவர்கள் யார்?...

வாழ்க்கையில்
ஒரு குறிக்கோள் தான்
இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...
அதுவே
வெற்றி தரும் என்கிறார்கள்...
ஒருவனுக்கு
பல குறிக்கோள் கொண்டு
ஒவ்வொன்றாய் சாதிக்க கூடாதா?...

ஒரு வேலை செய்து
ஒரே வேலை செய்து
பொருளாதாரம்
பெருக்குவதில் தான்
வாழ்க்கை என்று
உங்களுக்கு கற்று தந்தது யார்?...

பணம் பண்ணும்
வித்தை மட்டுமே
வெற்றி என்று
சொல்லி கொடுத்தவர்கள் யார்?...

குறிக்கோள் கொண்டவனுக்கு
பெண் கொடுக்க மறுக்கும்
மாமனர்களிடமும்
அரசுவேலையில்
தன்னை சுகபடுத்தும்
பெண்களுக்காகவும்
இன்னும்
எத்தனை நாள்
மண்டிபோட்டு
மானம் துறந்து
உங்கள் லட்சியத்தை
தொலைக்க போகீறீர்கள்?!...






நீ அன்றோடு என்னை மறந்து போனது...

என்னோடு
நீ கோபித்து கொண்டு
பேசாமல் போனாய்...
ஆனாலும்
நான் என்னோடு என்றாவது
பேசுவாய் என்று காத்திருந்தேன்...
உன்னை தினம்
நினைப்பதுண்டு...

இன்னொருவனுடன் 
நீ செல்வதை பார்த்த
இன்று தான் தெரிந்தது...
நீ அன்றோடு
என்னை மறந்து போனது...
எப்படி
உன்னால் முடிந்தது
அத்தனையையும் மறக்க?...

நாம்
பழகிய நாட்களில்
ஒரு நாள் ஞாபகம் கூட
நான் கொண்ட காதல்
சொல்லவில்லையா?...




நான் எவ்வளவு பெரிய முட்டாள்?!...

நீ காதலிக்கும் போது
என்னை மட்டுமே விரும்பியதாய்
நினைத்தேன்...
இன்று இன்னொருவனுடன்
வாழும் போதும்
என்னை
நினைத்து கொண்டே வாழ்வதாய்
நீ சொல்வதையும் நம்புகிறேன்...
உனக்காக வாழும்
நான்
எவ்வளவு பெரிய முட்டாள்?!...

மரம்...

மரம்...
முன்னோர்கள்
கண்டுபிடித்த கடவுள்...
பூமிக்கு மரம்
ஒரு கற்று விழுங்கி ...
உயிர் இனங்கள்
சுவாசிக்க
இயற்கை தந்த இதயம்...
மனிதனின்
அடிப்படை வசதி
மொத்தம் தரும் உலக வங்கி...


திங்கள், 6 செப்டம்பர், 2010

காமம் ஒன்றும் கிடைக்காத அமிர்தம் இல்லை...

காதலும் காமமும்
மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல...
உயரினங்கள் அனைத்திற்கும் உண்டு..
காமத்தை மட்டும் யோசித்த விலங்குகள்
இன்றும் விலங்காய் வலம் வருகின்றன...

காதலும் இருந்ததால் மட்டுமே
மனிதனால் சிந்தித்து வளர்ச்சிபெற முடிந்தது...
இன்னும் சிந்திக்க தெரியாத
மனிதர்கள் மட்டும்
ஏனோ
காமம் தேடி
விலங்காய் அலைகிறார்கள்...
காமம் ஒன்றும் கிடைக்காத
அமிர்தம் இல்லை...

அந்த நிமிடங்களை...

ஒரு தலை காதலர்களே...
அன்பு தெரியாதவர்களிடம்
அன்பை காட்டி
அவமான பட்டது போதும்...

நம்மை
நேசிக்காத
அந்த நிமிடங்களை
மறக்க தான் வேண்டும்...

தெரிந்து கொள்ளுங்கள்...

காதல்
பிடிவாதம் கொள்பவர்களிடம்
முடவாதம் ஆகி விடும்...
எதிர்வாதம் கொள்பவர்களிடம்
தொலைந்து போகும்....

காதல்
உன்னிடம் உண்டு என்றால்
அதை சுவாசிக்க
நிறைய மனிதர்கள் காத்திருக்கிறார்கள்...

பூட்டி கிடக்கும்
உன் அறையை உடைத்து வா....

உலகம்
எத்தனை பெரிது என்பது புரியும் ....


எனக்கு மன்னிப்பே கிடையாது....

நீ என்னிடம்
மன்னிப்பு 
கேட்கும் நேரம் எல்லாம்
மன்னித்த
எனக்கு மன்னிப்பே கிடையாது...

ஏன் தெரியுமா?..
நீ என்னிடம் சொல்லாமல்
என்னை விட்டு சென்றதையும்
மன்னித்து....
மறந்தும்...
உன்னை இன்னும்
இன்றும்
பெருமையாய் காதலிப்பதால்....

எனக்கு என்றும்
என்னால் மன்னிப்பே  தர முடியாது...
எனக்கு மன்னிப்பே கிடையாது....

என்ன செய்வது?...

வாழ்க்கை இனிமையானது....
நாம்
நினைப்பதெல்லாம்
நடக்கும் போது மட்டும்.. ...
வாழ்க்கை கசப்பானது...
நாம்
நினைப்பது எதுவும் நடக்காத போது....
வாழ்க்கை
நாம்  வாழ வேண்டும் என்ற போதெல்லாம்
தோற்கடிக்கப்படுகிறோம் ....
நாம் எடுத்த முடிவுகள் தான்
தோல்விகளுக்கு காரணம் என்று
விதி வழி சென்றாலும்
அந்த முடிவும் கூட
பல நேரங்கள் 
தவறாய் போகிறது ...
வாழ்க்கை 
என்ன வென்றே புரியவில்லை...
விதியா?...
விதியை வெல்ல முடியும் என்று
சொல்லும் மதியா?...
நாம்
வாழ்க்கையை
வெறுக்கும் போது தான் தெரிகிறது...
வாழ்க்கை என்று
இங்கு ஒன்றும் இல்லை...
இருப்பதை வாழ்ந்து விட்டு
போய் தான் ஆகவேண்டும்...
இதை விதி என்பதா?...
வேறு வழி இல்லை என்பதா?....
என்ன  செய்வது?...

சொல்ல மாட்டேன்....

உலகம் உருண்டையானது  ...
யார்
எங்கு
தொலைந்து போனாலும்
எப்போது வேண்டுமானாலும்
சந்திக்க கூடும்....
உன்னை விட்டு பிரியும்
நான்
மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்.......
எதற்கு?...
.......................
..............................

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

என்றவளா நான்?...

நம் நினைவுகள்
என்னை விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
விலகுவதாய் உணர்கிறேன்...

எனக்கே தெரியாமல்
உன்னை மறந்து
போய் விடுவேனோ ?...

உன்னை மறந்து போகும்
என்னை
வெகுவாய்
வெறுக்கிறேன்...
இந்த உடலை
வேறு யாராவது
சுமந்து கொள்ளுங்கள்...

"உன்னை
நொடி பொழுதும் பிரியேன்"
என்றவளா
நான்?...

சொல்லடா?...

சொல்லடா?...

என்
கட்டுப்பாடுகளையும்
மீறி
என்னுள்
காதல் வந்து
அழித்தது...
 என்னய்யா?..
ரணமாக்கிய
என் உடலையா?...

மனசாட்சி மறைந்து போனது...

மனதேவைக்கு காதல்...
உடல் தேவைக்கு காமம்...
என் மனமும் உடலும்
கூட்டணி போட்ட போது
என்னை விட்டு
மனசாட்சி மறைந்து போனது...
இன்று
சாட்சிக்கு
ஆள் இல்லாமல்
கசங்கி கிடக்கும் 
என்
உடல் தேடுகிறது
ஆறுதலான
மனதிற்காக...

காதலில் மட்டும்...

கண்களில்
கண்களால்
காதல் தொடங்கும்...

இமைத்து
போகும் நேரத்தில்
கண்களே தேடும்
தொலைந்த காதலை..

ஏன் வந்தாய்?...
ஏன் மறந்தாய்?...
ஏதும் புரியாது
காதலில் மட்டும்...

காலம் போக போக....

உறைந்த
பனிக்கட்டியாய்
காதலில்
நாம்
இறுகி இருந்தாலும்

பிரிவு
வெயில் படப்பட
உருகும் நினைவுகள் கூட
மறந்தே போகும்
நம்
கண்களுக்கு கூட
தெரியாமல்
காலம்
போக போக....

மறந்த பொழுதுகளாய் தானே ...

கிடைத்த
சிறு இடைவேளைகளில்
எல்லாம்
என்னிடம் பேசி
காதல் செய்தாய்...
காலம்
புரட்டி போட்டு விட்டது...
நினைக்க நேரம்
கிடைத்தாலும்
என்னை
மறந்த பொழுதுகளாய் தானே
இன்று
உன் வாழ்க்கை....

ஆழம் அதிகம் என்பதாலா?...

பழகிய நாட்களில்
நான்
பேசிய வார்த்தைகளுக்கும்
பேசாத வார்த்தைகளுக்கும்
பதில் தந்தவள் நீ...
விலகி போகிறாய்
இன்று...
மாற்றங்கள் கொண்டது
வாழ்க்கை...
காதலில் ஏற்படும் 
மாற்றம் மட்டும்
வடுக்களாய்...
ஏன்?...
காதலின் ஆழம்
அதிகம் என்பதாலா?...

உயிர் வாழ....

ஏனோ "என்னை பிடிக்கிறது " என்றாய்..
இன்று
ஏனோ "என்னை பிடிக்கவில்லை" என்கிறாய்...

தாகத்திற்கு பருகும்
தண்ணீராய் காதல்
உனக்கு வேண்டுமானால் இருக்கலாம்......

நம் நினைவுகளை
உணவாய்
உட்கொள்கிறேன்...
அன்றாடம்
உன்னோடு
உயிர் வாழ....

தோற்று போகிறேன்

பொய் கலந்த
கவிதையே
நிலைக்கும் என்பார்கள்....
ஏனோ
எனக்கு
அப்படி கவிதைகள்
தோன்றவில்லையடி...

ஆம்...
பொய்யாய்
காதல் கூட செய்ய முடியாமல்
தோற்று போகிறேன்
நானே என்னிடம்...

பல நேரங்களில் ....

காதலை
முறையாய்
சொல்ல தெரியாதவனே
கவிபாடுகிறான்...

தன்னை படைத்த
கவிஞனின்
காதல்
சொல்ல முடியாமல்
கவிதை கூட
தவிக்குமடி
பல நேரங்களில் ....

அவன் தழுவலில் கூட உன் ஞாபகம்....

உன்னை பிரிந்து
நான்
இன்னொருவனுடன்
வாழ்வது
எத்தனை கொடுமையானது
தெரியுமா?..
அவன்
தழுவலில் கூட
உன் ஞாபகம்....

அந்த சில நாட்கள்...

தொலைப்பதற்கென்றே
சில நினைவுகள்...
நம்மையே
சில நேரம்
தொலைத்து விடுகிறோம்....

நம்மையே
தொலைத்து போக வைக்கும்
நாம்
காதலித்த
அந்த சில நாட்கள்...

உன் உயிரையாவது ...

எவருக்கும்
தெரியாமல் உன்னை
என்னுள்
புதைத்து வைத்திருந்தேன்...

யாருக்கும் தெரியாமல்
மறைந்து மறைந்து
மறைத்து 
காதல் செய்தோம்...
என்னடா...
என்னிடம் கூட சொல்லாமல்
மாயமாய்
மறைந்து போனாய்
இந்த பூமியை விட்டு.....

இன்று ஊரை கூட்டி
உனக்காக
ஒரு சொட்டு கண்ணீர் கூட
விட முடியாத
ஊமையாய் 
நான்....

எத்தனை முறை
சொல்லி இருப்பேன்
எனக்கு தாலி கட்ட சொல்லி...
அந்த தாலி
நம் காதலை
காப்பற்றி இருக்குமோ
இல்லையோ...
உன் உயிரையாவது
காப்பற்றி இருக்குமல்லவா?...

உதட்டு முத்தம்...

என் நெற்றியும்
உன் நெற்றியும்
உரசி ஏற்பட்ட வெப்பத்தை
உன் உதடுகளால் 
என்னோடு
பகிர்ந்து கொண்டது சுகம்...

இதை யாரிடமும் சொல்லாதே...

நான்
கால்கள் பிண்ணி
தவித்தேன்..
உன்னருகில்
நான் அமர்ந்திருந்த
அந்த நிமிடங்கள்...

காதலை
சொல்லவில்லை..
உண்மையை சொல்கிறேன்...
அதற்கும் மேலான
காம சுகம்...
உன்னோடு உரசும் போது
நிஜமாய் உருகி....
.........................
நனைந்து போனேன்...

இதை
யாரிடமும் சொல்லாதே...
நமக்குள்
நமக்கு மட்டும் இருக்கட்டும்....
இது காதலல்ல
நம் இல்லறம்....

உலகத்தில் சிறந்தது ...

உலகத்தில் சிறந்தது
காதல் என்கிறார்கள்...
என்னை பொறுத்தவரை
கண்ணீர் தான்....
காதலை
முந்தி கொண்டு
இன்பத்திற்கும்
துன்பதிற்கும் வரும்...
காதலை
சொல்ல கூட முடியாத
எத்தனையோ பேர்
இங்கு உண்டு...
ஆனால்
அன்பிற்காக
கண்ணீர் சிந்தாதவர்கள்
உண்டா?...

ஒருவளை மட்டும் காதலித்ததாலா?...

பழைய காதலை
நினைத்து நினைத்து
பார்க்கிறேன்..
அது நிஜமா?..
கனவா?..
எங்கே போனது?...

உடலும் இல்லை
உயிரும் இல்லை...
நேற்று
நீயும் நானும்
பேசியது கூட
இப்போது காணவில்லையடி..
எங்கே போனது ?...

நானும் தேடி பார்க்கிறேன் 
முதன் முதலாய்
நீ முத்த மிட்ட
அந்த நாளை...

காதல்
நீ எங்கிருக்கிறாய்...
எப்படி இருப்பாய்?...

என்னிடம் மட்டும்
வேதனையாய்
தங்கி விட்டது ஏன்?....

காதலே...
என்னை மட்டும்
உனக்கு
பிடிக்காமல் போனது ஏன்?...

உண்மையாய்
அவள்
ஒருவளை மட்டும்
காதலித்ததாலா?...

வேடிக்கை தான் பார்க்கிறது...

காதலில்
தோற்றவர்களுக்கு மட்டுமே
காதல் அதிகம்...
கடந்து போன காதல்
மறுபடியும் வராது என்பதே
சாவை விட கொடுமையானது....

ஒருவர் மட்டும்
நினைத்து உருகுவது...
இருவரும்
நினைத்து உருகுவது...
இன்னொருவருடன் இவற்றை
மறைத்து வாழ்வதுமாய்...

இத்தனையும்
இந்த காதல்
வேடிக்கை தான் பார்க்கிறது...
என் மேல்
ஏன் காதலுக்கு
இத்தனை கோபம்?!...

ஏக்கம் தொடரத்தான் செய்கிறது....

காதலித்து
ஒன்று சேர்ந்தவர்களுக்கு
காதல் சுகம்...

ஆனால்

பிரிந்தவர்களுக்கு
அது வலி...

"காதல்"
இந்த வார்த்தை
கேட்கும் போதெல்லாம்
நாம் கூட
காதலில் இணையாமல்
போய்விட்டத்தின்
ஏக்கம் மிஞ்சும்...

அந்த வலி
நிச்சயமாய்
சுகமாய் இருக்க முடியாது...
வலி...
வலி தான்...
நிறைவேறாத காதலில்
ஏக்கம்
தொடரத்தான் செய்கிறது....

உன்னை பூஜிக்க....

உன்னை
அமர செய்து
உன்னை
ரசித்து ரசித்து
கவிதைகளால்
அர்ச்சனை
அபிசேகம் செய்கிறேன்...
இந்த நாட்கள் போதாதடி
உன்னை ரசிக்க..
உன்னை பூஜிக்க....

உன் முக பாவங்கள்...

எனக்காக
நீ காத்திருந்து துடிப்பதை
அணு அணுவாய் 
நான் மறைந்து நின்று ரசித்தேன்...
அத்தனை
அழகாய்
உன் முக பாவங்கள்
எத்தனை?......

ஏனடி...
என்னை நேரில் பார்த்ததும்
புன்னகைத்து  
உன் கோபத்தை புதைக்கிறாய்?...

கொஞ்சம் திட்டு....
 திகட்ட
திகட்ட
காதல் செய்ய...

மறக்க முடியாமல்....

காதலான..
கவிதையான
உன் முகம்
பார்க்கும் போது மட்டும்
ஏதோ இனம் புரியாத
சுகம் தொலைத்தவனாய்...
இன்னும்
நம் காதலை
மறக்க முடியாமல்....

வானத்திற்கு மட்டுமே தெரியும்....

எத்தனையோ
நூற்றண்டுகளாகியும் 
அப்படியே இருக்கும்
அந்த
வானத்திற்கு மட்டுமே
தெரியும்....
நாம்
எத்தனை முறை பிறந்து
எத்தனை முறை வாழ்ந்து
எத்தனை முறை இறந்து
மீண்டும் மீண்டும்
காதல் செய்கிறோம் என்பது....

உயிர் துறந்த பின்.....

நான்
மூன்றாம் நாள்
ஜெனிக்க வேண்டும்
உன்னோடு
உயிர் துறந்த பின்.....
நம்
சுவாச காற்றை
எடுத்து வர....

என்னை பதப்படுத்த....

நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம் 
என்னை தழுவி தவிக்கிறது.....
மீண்டும்
ஒரு முறை தழுவு
உன் உஷ்ணம்
என்னை பதப்படுத்த....

"நீ மட்டுமே அழகு "

நீ
அத்தனையும்
உலகத்தின்
மொத்த அழகு என்று சொன்னால்
உன்னால் மட்டுமல்ல...
யாராலும் ஏற்று கொள்ள முடியாது..

ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில் அழகு
உண்மை தான்...
ஆனால்
நீ  எனக்கு மட்டும்
அழகோ அழகு...

"நீ மட்டுமே அழகு "
இப்படி
தோன்றினால் தானடி 
காதல்....

எரித்து போட்டதடி...

காமம்
என்னை
எத்தனையோ நாட்கள்
உறங்க விடாமல்
தவிக்க வைத்திருகிறது..

இன்று
உன்
ஒரு முத்தம்....
ஒரு அணைப்பு...
அத்தனை காமத்தையும்
எரித்து போட்டதடி...

இது தான்
காதலா?...

என்
சாம்பலில் கூடா
உன்
காதல் நினைவுகள்....

நீ அவனாய் வா ....

உன்னை தழுவிய
என் விரல்கள்
எப்படி இன்னொருவனை ...

இருக்கட்டும்.....
என்ன செய்வது...
சூழ்நிலை...
நாம் பிரிந்து தான் விட்டோம்
இறந்து விடவில்லை.....

கூடு விட்டு
கூடு பாய தெரிந்தவனே...
நீ அவனாய்  வா
ஆசையாய்
உன்னை தழுவுகிறேன்....

வாழவைக்கட்டும்....

அதிகமாய்
உன்னிடம்
என் மனதில் உள்ளதை
இன்றுவரை சொன்னதில்லை...
ஆம்...
சொன்னால்
நீ தாங்க மட்டாயாடி...
அத்தனை காதல்
உன் மேல் எனக்கு.....
என்னை திட்டிய படியே செல்...
நான்
உன்னிடம்
சொல்ல மறுத்த காதல்
உன்னையாவது
வாழவைக்கட்டும்....

ஈரத்தை....

ஒரு கோடி
முத்தம் தர ஆசை ..

தந்திருப்பேன் என்று
நினைக்கிறேன்...

இங்கிருந்து
உனக்கு
கற்பனையாய் தந்தாலும்
காற்று உன்னிடம்
கொண்டு சேர்த்திருக்குமே
அந்த முத்தத்தின்
ஈரத்தை....

நம் முகம் உரசி...

என் தோள்களை பற்றி...

நம் முகம் உரசி...

என் வயிற்றை
கடந்து போன
உன்
கைஅசைவுகளுக்கு
தெரியுமா?..
உன் ஸ்பரிசம் கேட்டு தவித்தேன்
உன்னை கண்டது முதல்....

உலகம் உள்ளவரை ...

உன் நெற்றியில்
நேர் வகுடு எடுத்து

உன் கூந்தலை
நானே பிண்ணி

உன் நெற்றியில் ஒரு முத்தம்
அதன் சத்தம் 

உன் உடல் முழுதும்
இந்த உலகம் உள்ளவரை
கேட்க வேண்டும்.....

ஏமாற்றும் போது....

நீ எனக்கு
சொந்தமானவள் இல்லை என்பது
தெரிந்தும்
ஏனடி
உன் மேல்
இத்தனை மோகம்...
ஆம்....
ஏமாற்றம் கூட
சுகமாய்
நீ ஏமாற்றும் போது....

இந்த ஒரு பொய் சொல்...

உன் திருமணம்
நடக்கட்டும்....
அத்தனை சுகமும்
உனக்கு கிடைக்கட்டும்...
ஒரு ஆசை
"உன்னோடு
வாழ்ந்திருந்தால்
இன்னும் 
சுகமாய் இருந்திருப்பேன்"என்று
நீ சொல்ல வேண்டும்
எனக்காக 
என்னை
பார்க்கும் போது மட்டும்...
இந்த
ஒரு பொய் சொல் போதும்...
கொஞ்சம் சுகமாய்
நான் என்றும்
உன்னை 
காதல் செய்ய.....

விழுங்க வேண்டும்....

உன்னை
நேரடியாக
காதல் செய்கிறேன் என்று
சொல்வது 
ஏன் தெரியுமா?...
நீ
கொள்ளும்
"வெட்கம்"
அதை முழுதும்
நான்
என்னுள்
விழுங்க வேண்டும் என்பதால்....

உனக்கு பிடிக்குமா?...

நான் மறந்தாலும்
என்னையும் தாண்டி
உன்னை
அடிக்கடி நினைக்கிறேனடா....

நீ என்னை
காதல் செய்கிறாயா?
அதை சொல்
ஒரு முறை...

உன்னை
ஒன்று கேட்கவா?...
என்னை
உனக்கு பிடிக்குமா?...

இன்னொருவளை ...

அது என்னடா...
ஒன்றும் தெரியாதவன் போல் இருக்கிறாய்
செய்வதெல்லாம் செய்து விட்டு.....
உண்மையை  சொல்....
என்னை தாண்டி
இன்னொருவளை
உன்னால் நேசிக்க முடியுமா?...

அழகானவளே...

என் அழகானவளே!...
நீ  இன்னும்
கொஞ்சம் எடை கூடினால்
அழகாய் இருப்பாய் என்றேன்...
இப்போதில்லையா? என்கிறாய்....
நீ
எப்போதும்
அழகானவள் தான்
என்னுள்...

உன்னை
பார்த்ததும் பிடித்து போன
எனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியம்..
"நீ என்னை
எனக்கு முன்
காதல் கொண்டது"...

தேடுமா?...

நீ
என் தோள்களில்
ஒய்யாரமாய்
சாய்ந்திருக்கும் தருணங்கள்
எத்தனை அழகு..
எத்தனை பெரிது...

உன் ஒவ்வொரு செயலும்
உன் மேல்
காதல் உயர செய்கிறது..

எனக்காக
உன் விழி
பிரிந்த
பின்னும் தேடுமா?...

கலங்குவது ஏன்?...

எனக்கு
சில விசயங்கள் புரியவில்லை...
இந்த கண்ணீர்
ஏன் பிறந்தது? என்று...

பிரிவுகளை
சொல்வதனால் தான்
இதற்கு
இத்தனை முக்கியத்துவமா?...

நீ
பிரிந்திருக்கும் போதெல்லாம்
வராத கண்ணீர்
உன்னை கண்டதும்
கலங்குவது ஏன்?....

சில நேரம் ஏனடா?...

உன்னை
பார்க்க வேண்டும் போல் உள்ளது...
ஆம்....
சில நேரம்
பார்க்க கூடாது என்று தோன்றுகிறது..
இன்னும் சொல்ல போனால்
சில நிமிடங்கள் மட்டுமே
உன்னை பிரிந்திருக்க தோணுகிறது...
இப்படி எல்லாம் ஏனடா?.....

நீயாய் மாறி...

என் முத்தமே...
இன்று இரவெல்லாம்
உன் ஞாபகம்..

உன் விரல்கள்
தீண்டிய  இடமெல்லாம்
மறுபடியும் உன் விரல்களுக்காக...
நானே
என்னை சுகபடுத்துகிறேன்
நீயாய் மாறி...   

என்னை
எனக்கு பிடிக்கிறது....
என்னுள் இருக்கும்
உனக்கும்
என்னை பிடித்து போனதால்.....

சொல்ல இனிமையாய் இருக்கிறது....

என்னை 
முழுதாய் விழுங்கும்
உன் பார்வையை விட
என் நெற்றியும்
உன் நெற்றியும்
உரசி ஏற்பட்ட
வெப்பத்தை
உன் உதடுகளில்
என்னோடு பகிர்ந்து கொண்டது இனிமை....
சொல்லவே வெட்கமாய் இருக்கிறது...
ஆனால்
சொல்ல இனிமையாய் இருக்கிறது....

"அந்த நிமிடங்களின் சுகம் "

என் ஆசைகுரியவனே...
நான்
நீ எதை செய்தாலும் நேசிக்கிறேன்...
என்னடா..
எப்படியடா...
என்னை
உன்னால் விட்டு
கொடுக்க முடிகிறது...

நான் விலகி சென்றாலும்
நீ என்னை நேசிப்பதும்
எனக்கு பிடிக்கும்....

உன்னை
எப்படி எல்லாம்
காதல் செய்ய வேண்டும் என்று
என் இரவுகளில்
கணக்கு போட்டு வைத்ததுண்டு ...
அதற்கான சூழல்
அமையாமல் போனது
நிஜம்...

உன்னை கற்பனையாய்
காதலிப்பதை விட
உன் விரல் கோர்க்கும்
"அந்த நிமிடங்களின்
சுகம் "
அதிகம்...

விரட்டி...

காதல்
என் வீட்டாருக்கு பிடிக்காது...
அதுவும்
காதலில் சேர முடியாதென்றே
எத்தனையோ
காதலை விரட்டி இருக்கிறேன்...

இத்தனை
தெரிந்த
எனக்கு
உன்னோடு சேர முடியாது என்று
தெரிந்தே
சேர்த்து வைக்கிறேன்
உன் நினைவுகளை
விரட்ட முடியாமல்.....

தைரியமாய் காதல் சொல்வது எப்படி?...

என்னை
எப்படியடா
வசீகரித்தாய்?....

காதல் எனக்கு பிடிக்கும்
அதை விட
உன்னை அதிகமாய் பிடிக்கும்...

உன்னிடம்
நெடுநாட்களாய்
ஒன்று கேட்க ஆசை...
"இந்த உடை
எனக்கு அழகாய் இருக்கிறதா?...

எத்தனையோ பேருக்கு
காதலுக்கு உதவி இருக்கிறேன்....
இன்று
எனக்கே என்னால்
எனக்கு உதவ முடிய வில்லை....
உன்னிடம்
தைரியமாய்
காதல் சொல்வது எப்படி?...

என்னை இன்னும் வெருக்கிறேன்...

உன்னை
நினைத்து 
எத்தனை  இரவுகள்
நான்
விழித்திருக்கிறேன் தெரியுமா?..
என்
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை காண
நான் ஏங்கி தவிப்பது?...

அன்று ஒரு நாள்....
"உனக்காக
நான் எவ்வளவு நேரம்
காத்திருந்தேன் தெரியுமா?....என்று
நீ வருத்த பட்ட
அந்த நாளையும் ...
அந்த ஏமாற்றத்தையும்  தந்த
என்னை
இன்னும் வெருக்கிறேன்...

அதுவும் சுகம் தானடி....

எனக்காக
நீ
காத்திருந்த மணிநேரம்...
உன்னை
காண ஏங்கி
உன்னை தேடி
நான் வந்து ஏமாந்த
அந்த நொடிகள்
அத்தனையும் பிடிக்கும்....

இது
காதலால் வந்த
வார்த்தைகள் அல்ல..
அதற்கும் மேலே...

ஏதோ
காரணம் சொல்லி
உன்னை காண
நான் வருவதும்...
ஏதோ
எதச்சியான சந்திப்புகளாய்
நான்
காட்டி கொள்வதும்
காதலின் ஆரம்பத்தில்
அவிழ்த்து விடும்
பொய்களாய் இருந்தாலும்
அதுவும்
சுகம் தானடி....

இரண்டு...

உன்னை 
எனக்கு 
பிடிக்க 
இரண்டு  காரணங்கள் ...

ஒன்று
தெரியவில்லை...
இரண்டு
தெரிய விருப்பப்படவில்லை...
ஆனாலும்
உன்னை மட்டுமே
காதல் செய்கிறேன் ஏனடா?....

இந்த காதலில் மட்டும் ...

"நீ  யாரடி ?...
என்னை 
இப்படி எல்லாம்
காதல் செய்ய வைக்கிறாய்"?....

ஏனடி
இத்தனை நாள் எங்கிருந்தாய்? என்றேன்...
நீ  கூறி தான் தெரியும்
ஆம்... 
"நான் ஏன் உன்னை தேடி
இத்தனை நாள் வரவில்லை"

கண்முடித்தனமாய்
காதல் செய்கிறேன் ..
ஏனடி?..
எனக்கு உன்னை ஏன் பிடிக்கும்?..
தெரிய வில்லை...
உனக்கு என்னை ஏன் பிடிக்கும்?...
தெரிய வில்லை...

ஏனடி
இந்த
காதலில் மட்டும் 
இப்படி?...

சாத்தியம் இல்லை...

கவிதைகளில் உள்ள வரிகள்
எனக்கானவையா?..
வார்த்தைகள்
எல்லாம் நிஜமா?...
உண்மையில்
எனக்காக எழுதியவையா?...
இப்படி
கேள்விகளால்  சந்தேகிக்கிறாய்....
உனக்கு தெரிய வில்லை....
உன்னை வார்த்தைகளில்
ஏமாற்றி
என்ன செய்ய போகிறேன்....

நீ என்னை விட்டு
நெடுந்தொலைவில் இருக்கிறாய்
மனத்தால் அல்ல...
இருப்பிடத்தால் ....
அத்தனை
கடல் தாண்டி
என் ஆண்மை
உன்னை கற்பழிப்பது
சாத்தியம் இல்லையடி....

இடம் பெயர்ந்தன...

உன்னை
பார்த்ததும்
என் உதடுகள்
இடம் பெயர்ந்தன
உன் நெற்றிக்கு...

உன் புன்னகை
என்னை
எமற்றியதோ 
இல்லையோ...

என்
ஒரு பக்க கவிதையில்
நீ ஒளிந்திருக்கிறாய்...

எது நிஜம்?...

எனக்கானவளே!...
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்?..
உன்னை
நினைக்கையில் 
உளறுகிறேன்..
நடுங்குகிறேன்...
எனக்கானவள்
நீயா?..
எனக்கே
ஆகாதவள் நீயா?...
இதில்
எது நிஜம்?...

ஞாபகம் இருக்கிறதா?

உன் விழியின் 
புருவம் சிமிட்டிய
நொடி பொழுதில்
நான்
வியர்வையால்
நனைத்து
போனேனடி....
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
உன்னை பார்த்த
அந்த முதல் நாளை?...

இதை மட்டும் செய்...

நீ
என்னை விரும்பியதற்காய்
எனக்காக
இதை மட்டும் செய்..
"இறக்கும் போது
உன் மடியில்
கொஞ்சம் இடம் கொடு"...

உன்னால்...

நீ எப்படி
வேண்டுமானாலும்
இருந்து கொள்..
உன்னை காதலிக்கும்
நான் இப்படி தான்..
உன்னை
சேர முடியாமல் போனால்
என் கருவறையை
அகற்றி விடுவேன்,,,
ஏனென்றால்
"என் சந்ததி
உன்னால்
உருவானதாய் தான்
இருக்க வேண்டும்"....

இன்னும்...

நம்மை
பிரித்தவர்களுக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை...
உன்னோடு
உடலால் வாழ
நான் என்றும் விரும்பியதில்லை என்பது....
நீ கட்டிய நினைவு தாலி
என் இதயத்தோடு
உரசி கொண்டு இருக்கும் போது
நான் ஏன்
விதவையாய்
மறுமணம் செய்ய வேண்டும்?...
இன்னும்
என் நெற்றியில்
உன் நினைவு குங்குமம்
அழியாமல்
நிரம்பிகிடக்குதடா....

இன்னுமா?...

நான்
எப்படி
எப்படியோ போய் விடுகிறேன்
உன்னை நினைத்தால்..

ஆனால்

"நீ ஏன்
என்னை நினைக்க வேண்டும் என
எனக்குள்
நான் ஏன் போராட வேண்டும்?"...

மறக்காமல் சொல்...
நீ
என்னை
இன்னுமா
நேசிக்கிறாய்?...

ஒரு துளி...

என் ஆசை எல்லாம்
பூர்த்தி செயும் அன்பானவரே!...
எங்கிருந்த போதும்
என்னை வெறுத்து விடாதே...
உன்
"ஒரு துளி
அன்பில் தான்
என் இதயம்
இன்னும் உயிர் வாழ்கிறது".....

ஒரு வேளை ...

என் 
உண்மையான அன்பை
ஒவ்வொருவராய்
உன்னை போல்
கூறு போடுகிறார்கள்..
வேதனையாய் இருக்குதடி..
இப்படிப்பட்ட
மனிதர்களுக்காய்
என்னை நீ இழந்தாய்?..
ஒரு வேளை
நீ கூட
என்னை ஏமாற்ற தான்
அன்பு கட்டினாயா?...

நானும்...

நானும்
அபலை தான்
நல்ல காதலனை
இழந்து விட்டேனே...

சுகமா?...

பெண்ணே  !..
எனக்காக 
கண்ணீர்  சிந்தாதே ...
உன்னால் 
கலங்கப்படுத்தபட்டவன் 
தானே 
நான் ..
எப்படி  இருக்கிறாய்  நீ ?..
சுகமா ?...

வீணடிக்கிறாய்...

முத்துகள்
போன்றதடி
உன் கண்ணீர்
முகவரி இல்லாத
எனக்கேன்
வீணடிக்கிறாய்?....

என்ன செய்ய போகிறாய்?....

நீச்சல்
தெரியாத போதே
உன்னால்
காதல் கிணற்றில்
தள்ள பட்டு
தற்கொலை என்னும்
தரையை தொட்டு விட்டவன்
நான்..
என்னை..
என் உயிர் கலங்க
நீ இன்னும்
என்ன செய்ய போகிறாய்?....

வலுவில்லை

நீ கண்ணீர்
சிந்த ஆசைபட்டால்...
உன் இதயத்தை
என்னிடம் கேட்டு பெற்று கொள்...
என் இதயத்தில் சிந்திவிடாதே...
என் இதயத்திற்கு
உன் கண்ணீரை
தங்குமளவு வலுவில்லை....

கடினம்...

காதல்
உனக்கு மட்டுமல்ல...
யாருக்கும்
சவால் தான்..
கடைசிவரை
அதன்
கட்டுபாடுகளை
கடைபிடிப்பது
கடினம்....

நீ யார்?....

உனக்கு தெரியுமா?
உன்னை கேட்டு
உன்னை
நான் காதல் செய்ய தொடங்கவில்லை...
நீ யார்?....
என்னை
மறக்க சொல்வதற்கு?...

இன்னா செய்த உனக்கு....

என்னை
வாட வைத்த
உனக்கு
அன்றாடம்
கண்ணீர் மழையை
காணிக்கையாக்குகிறேன்
உன் நினைவுகள்
வாடி போக கூடாதென்று....

ஒரு முறை

வழியறியாத
என் வாழ்கை பயணத்தில்
காதல் வழி காட்டிய
நீ
பிரிவு பாதையில்
இறக்கி விட்டு போனது ஏன்?...
உன்னை
ஒரு முறை
பார்க்க ஆசை....

ஏன் போனாய்?...

நீ எனக்காக
உருகி எழுதிய கடிதங்கள்
என்னிடம் கேட்கின்றன?..
எங்கே அவள்?..
ஏன்
இப்படி
"உன்னை
தவிக்க விட்டு சென்றாள்"? என்று...

அதை தான்
நானும் கேட்கிறேன்?...
ஏன்?
என்னை விட்டு போனாய்?....

உனக்காக...

உன்னை பார்த்தவுடன்
நான்
உனக்காக
பிறந்ததாக மகிழ்ந்தேன்..
இன்று
அதை விட
மகிழ்கிறேன்...
ஏன்?...
உனக்காக
இறக்கிறேனே.....

வியாழன், 2 செப்டம்பர், 2010

நம் காதல்....

என் கண்களில்
வியர்க்கும்
உன் நினைவுகளை
கொட்டி தீர்க்காமல்  
இருக்க முடியவில்லை....

உன் கூந்தலில் 
மலரும்
பூக்களுக்காய்
என் கல்லறை மட்டுமல்ல...
அதில் உறங்கும்
என் இதயமும் காத்திருகிறது....

நாம்
சுற்றி திரிந்த இடங்கள்
ஒவ்வொன்றையும்
பார்க்கும் போது
தொலைந்த உன் பாதம்
எங்காவது
தென்படுகிறதா என்று
என் பாதம் 
என்னையே ஏங்கி பார்க்கிறது?!!!...

நோயினால்
நான் படுத்தால்
நோன்பு இருப்பவளே....
என் இறக்கும்தேதி
கேட்டவுடன்
உன் கண்களில் உதிரும்
அந்த கண்ணீரில் தானடி 
கோடானகோடி ஆண்டுகள்
வாழும்
நம் காதல்...

உனக்காக
நான்
நல்ல கவிதைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
ஆம்...
அவை
"நீ என்னிடம்
பேசிய வார்த்தைகள்"....

திருப்பி கொடு....

எனக்காக
உயிர் கொடுப்பதாய்
எத்தனையோ
நாட்கள் உளறி இருகிறாய்?...
எனக்காக
ஒன்று மட்டும் தா...
உனக்காக
நான் செலவழித்த
அந்த பொன்னான நாட்களை
திருப்பி கொடு....

நான் ஏன் பயப்பட வேண்டும்?....

நான் சீதையாய் 
தீiக்குளிக்க தயார்...
நீ
ராமனாய் இருந்து
உன்னிடம் இருக்கும்
மட்டமான  சிந்தனைகளான
சூர்பனகை
மூக்கை அறுத்து போடு...
நான் தீக்குளிக்க தயார்...
உன்னை மட்டும்
நேசிக்கும்
நான் ஏன்
பயப்பட வேண்டும்?....

காதலும் சந்தேகமும்...

என் மேல்
உனக்கு சந்தேகம்
வந்து விட்டதாய் சொல்கிறாய் ..
இன்று தான்
எனக்கு சந்தோசமாய் இருக்கிறது...
என்னை பொறுத்தவரை
அதிக படியான
அன்பின் வெளிபாடுதான்
காதலும் சந்தேகமும்....

புரியவில்லை?....

உன்னை
இழந்து தவிக்கும்
என்னை
உனக்கு கூடவா
புரியவில்லை?....

என் கற்பிற்கு அரசன்....

பெற்றவர்களுக்கு
உன்னை நான் பிரிந்தால் போதும்...
புறம் பேசும் ஊரார்க்கு 
நான்
உன்னை இழந்தால் போதும்..
அதற்கு
உடந்தையாய் இருந்த நான்
உன்னையே நினைத்து
கற்புக்கரசி என்று நிரூபித்தாலும்
நீ தான்
என் கற்பிற்கு அரசன்....

எதை கொண்டு ஈடுகட்டுவது?....

என் இதய கரையில்
நான்
இன்னொருவன்
பெயரை கூட எழுத முடியவில்லை...
உன் நினைவலைகள்
தொடர்சியாய் வந்து
என்னை தாக்குவதால்...
உன் இழப்பை
நான் எதை கொண்டு
ஈடுகட்டுவது?....

நான் பார்வை இழந்தவளாய் ...

நான் விழி என்றால்
என்னை காக்கும் இமை நீ என்றாய்...
உன் இமை
நினைவுகளாய் தான் இருக்கிறது
நான்
பார்வை இழந்தவளாய்
நீ
பாதை மாறிபோனதால்...

பிரிக்க முடியாதடா...

உனக்காக வாழும்
என்னோடு
நீ பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை...
ஆனால்
வார்த்தைகளால் காயப்படுத்தாதே...
ஒன்று தெரிந்து கொள்..
உன்னாலும்
என்னை
உன்னிடம் இருந்து
பிரிக்க முடியாதடா...

முடிந்தால்

என்னை
அவரிடம் இருந்து பிரித்த
புறம் பேசு புண்ணியவான்களே...
முடிந்தால்
அவர் நினைவுகளை
என்னிடம் இருந்து
பிரித்து பாருங்கள்...

நான் பாரி அல்ல...

ஏன் நெஞ்சத்தை பார்...
உன் நினைவு கொடிகள்
எப்படி ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன..
நான் பாரி அல்ல...
அப்படியே
விட்டு செல்ல....
உன் நினைவு பூக்கள்
நித்தம் மலர
உன் நினைவு கொடியுடனே
நானும்...

கோபித்து கொள்கிறாய்.....

என் வாழ்க்கை
காதல் மாலுமியே...
என் காதலனே!...
நீ  திசை மாறி 
போய் விட்டு
இன்று
ஏன்
விதி என்ற
திசை காட்டும் கருவியை
கோபித்து கொள்கிறாய்.....

நம்பிக்கையில்....

உனக்காக
உயில் ஒன்று
எழுதி வைத்திருக்கிறேன்...
நான் சொத்துகளாய் மதிக்கும்
நானும் நீயும்
பழகிய நாட்களை
பத்திரமாய்
உன் பெயரில்
என் இதயத்தில்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
என் இறப்பிற்கு
பின்
நீ
பெற்று கொள்வாய்
என்ற நம்பிக்கையில்....

ஓர பார்வையில்...

இன்று
உன் செயல்
என்னால்
தாங்கி கொள்ள முடியவில்லை...
என்னை பார்த்தும்
பார்க்காமல் போக
உனக்கெப்படி
மனம் வந்தது?....
உன்
ஓர பார்வையில் தானடி
இத்தனை நாள்
உயிர் வாழ்கிறேன்...

இழக்க மனமில்லை.....

நீ
வேறு தேசம் இல்லை
வேறு உலகம் சென்றாலும்
உன் சுவாச காற்றை
மறக்காமல் அனுப்பி வை...
உன் நினைவு காற்றை
சுவாசித்த
என் இதயத்தை
இழக்க மனமில்லை.....

பிரித்து விடாதீர்கள்...

என்னை
இந்த பூமியில் இருந்து
பிரித்து விடாதீர்கள்...
அவள் சுவாசித்த காற்று
இன்னும்
இங்கு
உலவிக்கொண்டு தான் இருக்கிறது....

யார் சொல்வது?.

நீ என்னை எவ்வளவு
எளிதாய் ஒதுக்கி விட்டாய்...
உனக்கு
யார் சொல்வது?...
என் இதயத்தின்
கடைசி துடிப்பு கூட
உன் பெயரை
உச்சரித்தே
உயிர் விட்டதென்று....

பதில் கொடுத்து விடும்

நீ
என்னை  விட்டு
இன்னொறு பெண்ணிடம்
எதார்த்தமாய் பேசினாலும்
எனக்கு பிடிப்பதில்லை...
ஆனால்
நீ
என்னிடம் பேசாமல்
பார்த்து
சென்றாலே போதும் ...
"உன் பார்வை
என்
கேள்விகளுக்கெல்லாம்
பதில்
கொடுத்து விடும்"....

தேடுகிறாய்?...

அன்று
நம்
காதல் சிலம்பை
நீ
உடைத்திருந்தால்
நீ கூட கண்ணகி தான்
வெட்கம் கெட்டவளே...
இன்று
மாதவியாய்
ஏன்
என் நினைவு பரல்களை தேடுகிறாய்?...

வெளி வேசம்...

உன்னை
பிரிந்ததனால்
"எனக்கு
எந்த நஷ்டமும் இல்லை" என்று
வெளி வேசம் போட்டு
நிமிர்ந்து நடந்தாலும்
உன்னை
பிரிந்த பின்
நான்
"வெளியே சிரித்து
உள்ளே அழுத படி"...

உள்ளே செல்ல மாறுக்கிறது.....

ஒன்றும் அறியாத
என்னையும்
உன்னை காதலிக்க வைத்து விட்டாய்..
உன்னை
பார்க்காமல் இருந்தால்
கண்கள் உறங்க மாறுகின்றன...
உன்னிடம் பேசாமல் இருந்தால்
உண்ணும் உணவும்
உள்ளே செல்ல மாறுக்கிறது?!....
ஏன் உனக்காக
என்னுள் இந்த
அகிம்சை போராட்டம்
இம்சையாய்
இந்த சில நாட்களாய்.......

என்னுள் இருப்பது நீயா?......

கண்கள் மூடி
கனவு காணுகிறேன்
கண்கள் திறந்தும்
கனவு காணுகிறேன்
உன்னோடு மனதிற்குள்
பேசி கொண்டே இருப்பதால்...

யாராவது
என்னிடம்
கேட்கும்
கேள்விகள் கூட மறந்து
அவர்களுக்கு
நான் வேறு
பதில் சொல்கிறேன்...

வெட்கமாய் இருக்கிறது...

நான் தானா?..
இல்லை
என்னுள் இருப்பது
நீயா?......

தவிப்பதே பிடிக்கும்,,,,

எனக்கு
மறைமுகமாய்
உனக்கு தெரியாமல்
உன்னை
காதலிப்பது பிடிக்கும்...
நீ வருவது தெரிந்தே
பார்க்காதது போல்
நடப்பது பிடிக்கும்...
நீ என்னை
கடந்து சென்றவுடன்
மறுபடியும்
திரும்பி பார்ப்பாய் என்று
ஏங்கி
தவிப்பதே பிடிக்கும்,,,,